Published:Updated:

சொத்து வரி... ‘தனி கவுன்டர்கள்’ கண்துடைப்பா?

சொத்து வரி
பிரீமியம் ஸ்டோரி
சொத்து வரி

சொத்து வரி

சொத்து வரி... ‘தனி கவுன்டர்கள்’ கண்துடைப்பா?

சொத்து வரி

Published:Updated:
சொத்து வரி
பிரீமியம் ஸ்டோரி
சொத்து வரி

தமிழகம் முழுக்க சமீபத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரவும், சொத்து வரி வசூலிக்கவும் சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கவுன்டர்களில் செயல்பாடு என்னவாக இருக்கிறது என்பதை நேரில் ஆய்வு செய்ய கிளம்பினோம். பேசின் பிரிட்ஜ் மண்டலத்தில் உள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தில் இ-சேவை மையத்தில் சொத்து வரி தொடர் பான சேவைகளுக்குத் தனியாக ராம்குமார் என்ற அதிகாரியை நியமித்திருந்தனர். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

“சொத்து வரி சீராய்வு தொடர்பான சந்தேகங்கள், கணக்கீட்டு விவரம், எப்படி சொத்து வரியைச் செலுத்துவது போன்ற பல சந்தேகங்கள், கேள்விகளுடன் மக்கள் அணுகு கிறார்கள். அதற்கான பதில்களை அவர்களுக்கு வழங்கி வருகிறோம். இன்று மட்டுமே நேரில் இந்த கவுன்டரில் வந்து தகவல் விசாரித்தவர்கள், ரூ.5 லட்சத்துக்கும் மேலாக சொத்து வரி செலுத்தியிருக்கிறார்கள்.

சொத்து வரி...  ‘தனி கவுன்டர்கள்’ கண்துடைப்பா?

சொத்து வரி உயர்வு தொடர்பாக அனை வருக்கும் அதிருப்தி இருந்தாலும் இது தவிர்க்க முடியாதது என்பதால், சொத்து வரியைச் செலுத்திவிடுகிறார்கள். வரி செலுத்தினால் தானே அரசுக்கும் வருவாய். அதை வைத்து தானே செலவினங்களைத் திட்டமிட முடியும்” என்றார்.

இங்கு வருகிறவர்கள் அனைவருமே எவ்வளவு ரூபாய் வரியாகக் கட்ட வேண்டும், ரொக்கமாக பணம் கட்டலாமா என்கிற வழக்கமான கேள்விகளைக் கேட்டுவிட்டு போகிறவர்களாகவே இருக்கிறார்கள்.

சொத்து வரி சீராய்வைப் பொறுத்தவரை, ‘ஆட்சேபனை இருப்பவர்கள் தெரிவிக்கலாம்’ என அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், அந்தக் கேள்வியை யாரும் கேட்ட மாதிரி தெரிய வில்லை. அப்படியே கேள்விகள் கேட்ட சிலருக்கும் அதிகாரிகள் தந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை.

ஆக மொத்தத்தில், தற்போது அமைக்கப் பட்டுள்ள ‘தனி கவுன்டர்கள்’ வெறும் கண்துடைப்பு என்பது போலதான் இருக்கிறது. சொத்து வரியை இவ்வளவு அதிகமாக உயர்த்தியது ஏன் என்கிற மக்களின் மனக் குமுறலுக்கு உருப்படியான எந்தப் பதிலும் இங்கு கிடைக்கிற மாதிரி தெரியவில்லை!