Published:Updated:

பங்கு, ஈக்விட்டி ஃபண்ட்... வரி லாபத்துக்கு சரியான வழி..! கவனிக்க வேண்டிய முதலீட்டு ஃபார்முலா...

முதலீடு...
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு...

P R O F I T T A X

பங்கு, ஈக்விட்டி ஃபண்ட்... வரி லாபத்துக்கு சரியான வழி..! கவனிக்க வேண்டிய முதலீட்டு ஃபார்முலா...

P R O F I T T A X

Published:Updated:
முதலீடு...
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு...

ஜி.எஸ்.ராஜேஷ் குமார், ஈக்விட்டி ரிசர்ச் அனலிஸ்ட், https://www.rkgcapitalgains.com/

பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் இந்த முதலீடுகள் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு நிபந்தனைக்கு உட்பட்டு மத்திய அரசு வரிச் சலுகை அளித்து வருகிறது. அதாவது, இந்த முதலீடுகள் மூலம் கிடைக்கும் நீண்டகால மூலதன ஆதாயத்துக்கு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வரி எதுவும் கிடையாது. அதற்கு மேற்பட்ட வருமானத்துக்கும் 10% (கல்வி மற்றும் ஆரோக்கியத் தீர்வை சேர்க்காமல்) வரி கட்டினால் போதும். பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளை விற்றுப் பணமாக்கும்போதுதான், கிடைக்கும் லாபத்துக்கு வரி கட்ட வேண்டும்.

ஜி.எஸ்.ராஜேஷ் குமார், 
ஈக்விட்டி ரிசர்ச் அனலிஸ்ட், https://www.rkgcapitalgains.com/
ஜி.எஸ்.ராஜேஷ் குமார், ஈக்விட்டி ரிசர்ச் அனலிஸ்ட், https://www.rkgcapitalgains.com/

பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து ஓராண்டு கழிந்்த நிலையில் அவை நல்ல லாபத்தில் இருக்கும்பட்சத்தில், அந்த லாபத்தில் நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வெளியே எடுக்கும்பட்சத்தில் எதிர்காலத்தில் அதிக வரி கட்டுவதைத் தவிர்க்கலாம். இதன் மூலம் ரூ.10,000 வரி மிச்சமாகும். இந்த ரூ.1 லட்சம் வரிச் சலுகை என்பது நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு சேர்ந்ததாகும்.

உதாரணத்துக்கு, ஒருவர் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் ரூ.5 லட்சம் முதலீடு செய்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த முதலீடு ஓராண்டுக்குப் பிறகு ரூ.5.90 லட்சமாக அதிகரித்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இவற்றை விற்று ரூ.90,000 லாபம் பார்க்கும் பட்சத்தில் வரி எதுவும் கட்டத் தேவையில்லை. இந்த ரூ.5.90 லட்சத்தை மறுமுதலீடு செய்து மீண்டும் முதலீட்டைத் தொடரலாம்.

இதுவே முதல் ஆண்டில் ரூ. 5 லட்சம் முதலீட்டில் பங்குகள் மற்றும் யூனிட்டுகளை விற்று லாபத்தை வெளியே எடுக்காமல் இருந்ததால், இரண்டு ஆண்டு கழித்து இந்த முதலீடு ரூ.6.80 லட்சமாக அதிகரித் திருக்கிறது என வைத்துக்கொள்வோம். இப்போது பங்குகள் மற்றும் ஃபண்டு களை விற்றால் கிடைக்கும் நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.1.80 லட்சம் எனில், இதில் ரூ.1 லட்சத்துக்கு வரி எதுவும் கிடையாது. ரூ.80,000-க்கு 10% ரூ. 8,000 வரி கட்ட வேண்டும்.

இதுவே, மறுமுதலீடு செய்த ரூ.5.90 லட்சம், ரூ.6.80 லட்சமாக அதிகரித்துள்ளது. இதை ஓராண்டு கழித்து விற்றதன் மூலம் ரூ.90,000 லாபம் கிடைத்திருக்கும்பட்சத்தில் இந்த நீண்டகால ஆதாயத்து வரி எதுவும் கட்டத் தேவையில்லை. இப்படி ஒவ்வோர் ஆண்டும் நீண்ட கால மூலதன ஆதாயத்தை வெளியே எடுத்துவரும்பட்சத்தில் நாம் வரிக்கு உட்படாமல் இருக்க முடியும் அல்லது குறைந்த அளவில் வரி கட்டினால் போதுமானதாக இருக்கும்.

முதலீடு...
முதலீடு...

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்...

வரிச் சேமிப்பு ஃபண்டான ஈக்விட்டி ஃபண்ட் பிரிவின் கீழ்வரும் இந்த ஃபண்டில் லாக்இன் மூன்றாண்டுகள் முடிந்தபிறகு, நீண்டகால மூலதன ஆதாயத்தை நிதி ஆண்டுக்கு ரூ.1 லட்சத் துக்குள் இருக்கும்படி யூனிட்டுகளை விற்றுப் பணமாக்கினால் வரி கட்டு வதிலிருந்து தப்பிக்க முடியும். வெளியே எடுக்கும் தொகையை மீண்டும் முதலீடு செய்வதன்மூலம் அந்த நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு வரிச் சலுகை பெற முடியும்.

இப்படி வரிச் சலுகைக்காக பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளின் யூனிட்டுகளை விற்கும்போது, முதலீட்டை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்றிருக் கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லை எனில், ரூ.1 லட்சம் மூலதன ஆதாயத்துக்கு குறுகியகால மூலதன ஆதாயம் 15% அதாவது, சுமார் ரூ.15,000 வரி கட்டும் சூழ்நிலை உருவாகிவிடும்.

முதலீடு...
முதலீடு...

அடுத்து, எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்திருக்கும்பட்சத்தில், விற்கப்போகும் மொத்தப் பங்குகள் மற்றும் யூனிட்டுகள் வாங்கி ஓராண்டு நிறைவு பெற்றிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்ட் யூனிட்டுகளை விற்கும் போது, முதலில் வாங்கிய யூனிட்டு களை முதலில் விற்றதாகக் கணக்கெடுக்கப்படும். இப்படி வரி லாப அறுவடை செய்வதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கும்பட்சத்தில், உங்களின் நிதி ஆலோசகர், பங்குச் சந்தை புரோக்கர், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் போன்றவர்களின் உதவியை நாடுவது நல்லது.

பங்குகள், ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு அதிக ரிஸ்க் கொண்டவை என்பதால், வரி லாப அறுவடைக் காக விற்று வெளியே எடுத்த தொகையை அப்படியே மறுமுதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. மூலதன லாபத்தை மட்டும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் அல்லது கடன் ஃபண்டில் முதலீடு செய்துவரலாம். இதனால், முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்க முடியும்.

இப்படி லாப அறுவடை செய்வதால், எதிர்காலத்தில் வரியைக் குறைவாகக் கட்டுவதுடன், எதிர்காலத்தில் சந்தை இறங்கும்பட்சத்தில் அதன் மூலமான இழப்பையும் குறைக்க முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism