Published:Updated:

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு இத்தனை வரிச் சலுகைகளா? வரிச்சுமையைக் குறைக்கும் வழிகள்

Incometax

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

வருமான வரி என்றாலே பலரும் முகத்தைச் சுழிக்கிறார்கள். கொஞ்சம் கஷ்டப்பட்டு அதைப் புரிந்து கொண்டால், பல லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்.

பொதுவாக, வரிச் சலுகை என்பதை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படும். ஒன்று, வரிதாரர் செய்த சேமிப்பு மற்றும் முதலீட்டுக் கான சலுகை; இரண்டாவது, வரிதாரர் செய்த செலவுகளுக்கான வரிச் சலுகை. இவற்றுள் பிரிவு 80C, 80CCC, 80CCD(1), 80CC(1B) மற்றும் பிரிவு 80CCD(2) ஆகியவைதான் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கான வரிச்சலுகைப் பிரிவுகள் ஆகும். இந்த வரிச் சலுகை பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

ப.முகைதீன் 
சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

பிரிவு 80C

மிகவும் பிரபலமான வரிச் சலுகை பிரிவு இது. இன்ஷூரன்ஸ் பிரீமியம், ஓய்வுக்கால முதலீடு (Annuity),  இ.பி.எஃப், ஜி.பி.எஃப், சி.பி.எஃப், பி.பி.எஃப், சுகன்யா சம்ருதி கணக்கு, நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்,  5 வருட அஞ்சலக டைம் டெபாசிட், கல்விச் செலவு, வீட்டுக் கடன் அசல், முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பலவகை மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீட்டுக்கும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை பெறலாம். சம்பளதாரர் மட்டுமன்றி தனிநபருக்கும் இந்தச் சலுகை கிடைக்கும்.

ரூ.1.5 லட்சம் என்ற வரம்பை உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுக் காலமாகப் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், வரி வருமானம் குறைந்து விடுமே என மத்திய அரசாங்கம் இந்த வரம்பை உயர்த்தாமலே இருக்கிறது. அரசுக்கு வரி வருமானம் கொஞ்சம் குறைந்தாலும், மக்கள் முதலீடு செய்வது இன்னும் அதிகரிக்கும். இதனால் நாட்டுக்குத் தான் நன்மை உண்டாகும்.

பிரிவு 80CCC

சம்பளதாரர்களுக்கான வரிச் சலுகைப் பிரிவு இது. இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தரும் பென்ஷன் திட்டத்துக்காகக் கட்டப்படும் பிரிமீயம் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை இதில் வரிச் சலுகை உண்டு.

வரிச் சலுகை
வரிச் சலுகை

பிரிவு 80CCD(1)

மத்திய அரசின் என்.பி.எஸ் திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஊழியர், அஞ்சல் துறை மற்றும் ரயில்வே வாரிய சம்பளதாரர்களுக்கு அவர்களது ஓய்வுக்காலத்தில் பென்ஷன் பெறுவதற்காக வடிவ மைக்கப்பட்ட வரிப்பிரிவு இது. சம்பளதாரர்களைப் பொறுத்தவரை, அவர்களது சம்பளத்தில் 10% பென்ஷனுக்காகப் பிடித்தம் செய்யப் படும். இவ்வாறு பிடித்தம் செய்யப் படும் தொகையில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை பெற லாம். இந்தத் திட்டத்தில் சம்பளதாரர் அல்லாதவரும் சேர்ந்து சந்தா செலுத்தலாம். ஓய்வுக்காலத்தில் மாதாந்தர பென்ஷனுடன் மொத்தத் தொகையும் பெறலாம்.

தமிழக அரசின் சி.பி.எஸ் திட்டத்தில் சேர்ந்த பணியாளர்களின் சம்பளத்தில் 10% மாதம்தோறும் பிடித்தம் செய்யப் படுகிறது. இதில் செலுத்தப்படும் தொகைக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை பெறலாம்.

பிரிவு 80CCD (1B)

மேற்கண்ட மூன்று பிரிவுகளில் வரிச் சலுகை ரூ.1.50 லட்சத்துடன் மேலும் ரூ.50,000 வரிச் சலுகை பெற நினைத்தால், என்.பி.எஸ் திட்டத்தில் சேர்ந்து ரூ.50,000 முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம். எப்படி எனில், பிரிவு 80C-யின்கீழ் மட்டுமே அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் சலுகை பெற்றவர், என்.பி.எஸ்-ல் ரூ.50,000 முதலீடு செய்யலாம். அதாவது, பிரிவு 80C மற்றும் பிரிவு 80CCC-யின் கூட்டுத் தொகையில் ரூ.1.5 லட்சம் சலுகை பெற்றவர், 50,000 ரூபாயை என்.பி.எஸ்ஸில் முதலீடு செய்து சலுகை பெற முடியும். அதேபோல, பிரிவு 80C, 80CCC மற்றும் 80CCD (1) ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் ரூ.1.5 லட்சம் சலுகை பெற்றவர்களும் இந்தப் பிரிவின்கீழ் மேலும் ரூ.50,000 முதலீடு செய்து கூடுதல் சலுகை பெறலாம். 

சி.பி.எஸ் திட்டத்தில் உள்ள தமிழக அரசு ஊழியரும் என்.பி.எஸ்-ல் முதலீடு செய்து ரூ.50,000 வரை இந்தப் பிரிவின் கீழ் சலுகை பெறலாம். 

பிரிவு 80CCD (2)

இது சம்பளதாரர்களுக்கு மட்டுமே உரிய வரிச் சலுகைப் பிரிவு. அதாவது, என்.பி.எஸ் திட்டம் சார்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு தனது பங்களிப்பாக ஊழியரின் சம்பளத்தில் மாதம்தோறும் 14% தொகையை அவர்களது என்.பி.எஸ் கணக்கில் செலுத்துகிறது. இவ்வாறு மத்திய அரசு செலுத்தும் பங்களிப்பு சந்தாவுக்கு அதிகபட்சமாக ரூ.7.5 லட்சம் வரை வரிச் சலுகையை மத்திய அரசு ஊழியர்கள் பெறுவார்கள்.  

இதேபோல, தமிழக அரசு தனது ஊழியர்களின் சி.பி.எஸ் பென்ஷன் திட்டத்தில் தனது பங்களிப்பாக 10% சம்பளத் தொகையை ஊழியரின் சி.பி.எஸ் கணக்கில் செலுத்துகிறது. இவ்வாறு தமிழக அரசு செலுத்தும் பங்களிப்புத் தொகைக்கும் அதிகபட்சமாக ரூ.7.5 லட்சம் வரிச் சலுகை கிடைக்கும். 

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், மத்திய அரசு செலுத்தும் என்.பி.எஸ் பங்களிப்பு சந்தா மற்றும் தமிழக அரசு செலுத்தும் சி.பி.எஸ் பங்களிப்பு சந்தா இரண்டும் ஊழியரின் வருமானமாகக் கருதப்படும். எனவே, அரசுத் தரப்பில் செலுத்தப்பட்ட தொகையை ஊழியர் சம்பள வருமானத்துடன் கூட்டி பின்னர் அதே தொகையை வரிச் சலுகைக்காகக் கழித்துக் கொள்ள வேண்டும். 

ஆக, 80C, 80CCC, 80CCD(1) ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம், பிரிவு 80CCD(B)-ல் ரூ.50,000, பிரிவு 80CCD(2) அதிகபட்சமாக ரூ.7.5 லட்சம் வரை என முதலீட்டுக்கான அதிகபட்ச வரிச் சலுகை ரூ.9.5 லட்சம் பெற முடியும்.

அரசு ஊழியர்களும் தனியார் நிறுவன ஊழியர்களும் இந்த வரிச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டால், நிறைய பணத்தை மிச்சப்படுத்தலாம். இப்படி மிச்சமாகும் பணம் எதிர் காலத்துக்கு நிச்சயம் பயன்படும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு