Published:Updated:

வரித் தாக்கலுக்கு 2 வருட அவகாசம்... கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

வரித் தாக்கல்
பிரீமியம் ஸ்டோரி
வரித் தாக்கல்

பட்ஜெட் 2022-23

வரித் தாக்கலுக்கு 2 வருட அவகாசம்... கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

பட்ஜெட் 2022-23

Published:Updated:
வரித் தாக்கல்
பிரீமியம் ஸ்டோரி
வரித் தாக்கல்

கடந்த 1.2.2022 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை; என்றாலும், 284 பக்கங்கள் உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையில், வருமான வரி விதிகளில் 84 திருத்தங்கள் – துணை விதிச் சேர்க்கைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் முக்கியமானது, புதிதாக வரித் தாக்கல் செய்ய அளிக்கப்பட்டுள்ள இரண்டு ஆண்டுக் கால அவகாசம். அதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

எதற்கு இந்தக் கால அவகாசம்..?

இந்தப் புதிய துணை விதியின்படி, ஒரு நிதியாண்டுக்குக் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் வரித் தாக்கல் செய்துள்ளவர்கள், நிர்ணயிக்கப் பட்ட தேதிக்குப் பிறகு, அபராதத்துடன் வரித் தாக்கல் செய்தவர்கள், குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவோ, பின்பாகவோ வரித் தாக்கல் செய்துவிட்டு, அதைத் திருத்தம் செய்தவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

எதற்கு இந்தக் கால அவகாசம் எனில், மேற் குறிப்பிட்டவர்கள் அனைவரும் நிதி ஆண்டுக்கு உரிய மதிப்பீட்டு ஆண்டு முடிந்த தேதியிலிருந்து இரண்டு நிதியாண்டுக்குள் முன்னதாகச் செய்த வரித் தாக்கலில் வருமானம் மற்றும் அதற்கான வரி விடுபட்டு இருந்தால், அவற்றை யும் சேர்த்து புதிய வரித் தாக்கல் செய்வதற்குத் தான் இந்தக் கால அவகாசம்.

அதுமட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டில் வரித் தாக்கல் செய்யாமல் உள்ளவர் களும் கூடுதல் வரி செலுத்திவிட்டு, இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆக மொத்தத்தில், முன்னதாக விடுபட்ட வருமானத்தைக் கணக்கில் கொண்டு வரத் தேவையான சலுகைதான் இந்த மேம்பட்ட வரித் தாக்கல் (Updated Return) எனலாம்.

இந்தச் சலுகையால் என்ன கிடைக்காது?

இந்தச் சலுகையைப் பயன்படுத்தி, கடந்த நிதியாண்டுகளில் ஏற்பட்டிருந்த இழப்பை ஈடுகட்ட முடியாது. முன்னதாகச் செலுத்திய வரியைக் குறைத்துக்கொள்ள முடியாது. விடுபட்ட ரீஃபண்டைப் பெற முடியாது மற்றும் முன்னதாக வருமானவரித் துறை தந்துள்ள ரீஃபண்ட் தொகையை அதிகரித்துக் கேட்கவும் முடியாது.

வரித் தாக்கலுக்கு 2 வருட அவகாசம்... கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

யார் பயன்படுத்த முடியும்?

இந்தச் சலுகையை எல்லோரும் பயன்படுத்தி விடவும் முடியாது. வருமான வரி தொடர்பான வரவு செலவுக் கணக்குகளையோ, பிற ஆவணங்களையோ, சொத்து விவரங் களையோ சோதனையிடப்பட்டவர்கள் இதைப் பயன்படுத்த முடியாது. இதேபோல், பணம், உலோகக் கட்டிகள், ஆபரணங்கள், மதிப்புமிக்க பொருள்கள் போன்ற ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டு, அது தொடர்பாக நோட்டீஸ் வரப் பெற்றவர்கள் மற்றும் கணக்குப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதற்கான வருமானத் துறை நோட்டீஸ் வரப் பெற்றவர்களும் இந்தச் சலுகையைப் பயன் படுத்த முடியாது.

மேலும், வருமானவரித் துறையின் மதிப்பீடு மற்றும் மனு மதிப்பீடு முதலிய வற்றுக்கான நடவடிக்கை நிலுவையில் இருப்பவர்களும் இந்தப் புதிய சலுகை யைப் பயன்படுத்த முடியாது. வருமான வரித் துறையின் நடவடிக்கை இல்லாத மற்றவர்கள், உரிய படிவத்தில் மேம்பட்ட வரித் தாக்கல் செய்யலாம்.

கூடுதல் வரி

இந்தப் புதிய சலுகையின்படி, மேம் பட்ட வரித்தாக்கல் செய்பவர்கள் மதிப் பிடப்படும் மொத்த வரியில் (Aggregate tax) 25 - 50% வரை கூடுதல் வரி, கட்டணங் கள் மற்றும் வட்டி முதலானவற்றைச் செலுத்தி, அதற்கான ஆதாரத்துடன் வரித் தாக்கல் செய்ய வேண்டும்.

25% அல்லது 50%

மதிப்பீட்டு ஆண்டு முடிந்து 12 மாதங்களுக்குள் மேம்பட்ட வரித் தாக்கல் செய்துவிட்டால், கூடுதல் வரி 25 சதவிகிதமாகவும், மதிப்பீட்டு ஆண்டின் கடைசித் தேதியிருந்து 12 மாதங்களுக்குப் பிறகு, ஆனால் 24 மாதங்களுக்குள் இந்த வகை வரித் தாக்கல் செய்துவிட்டால், அவர்கள் செலுத்த வேண்டிய கூடுதல் வரி 50 சதவிகிதமாகவும் இருக்கும். வரி என்பது கணக்கிடப்பட்ட வரி, அதற்கான உபரி வரி மற்றும் தீர்வை (CESS) உள்ளிட்டவை ஆகும். இந்தக் கூடுதல் வரியைச் செலுத்த 140B என்ற புதிய விதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

இரண்டு வருடக் கணக்கீடு

உதாரணமாக, 2020-21 நிதியாண்டை எடுத்துக் கொள்வோம். 1.4.2020-ல் ஆரம்பித்து 31.3.2021-ல் நிதியாண்டு முடிவடைகிறது. 1.4.2021 முதல் இந்த நிதியாண்டுக்கான மதிப்பீட்டு ஆண்டு ஆரம்ப மாகிறது. 31.3.2022 அன்று மதிப்பீட்டு ஆண்டு நிறைவடைகிறது. இதன்படி, 2020-21 நிதியாண்டுக்கான மேம்பட்ட வரித் தாக்கலை 31.3.2023-க்குள் செய்து விட்டால், 25% அதிக வரி. 31.3.2024-க்குள் வரித் தாக்கல் செய்தால், கூடுதல் வரி 50% மட்டுமே. இத்துடன் வட்டி மற்றும் பிற கட்டணம் சேரும்.

சுலபமான வழி

வரிதாரர் எவரும் வரிக்குற்றம் செய்யாமல் ‘வரிச் சுத்தம்’ உடையவராக இருக்க வேண்டும் என்பதற்கான முயற்சியே இரண்டு வருட அவகாசத்துடன்கூடிய இப்போதைய மேம்பட்ட வரித் தாக்கல் முறை ஆகும். ஒருவரது பண பரிவர்த்தணைகள் பற்றிய தகவல்களை 45 முனையங்களில் இருந்து பெறும் வசதி வருமான வரித் துறைக்கு இருப்பதால் நிதியாண்டு முடிந்ததுமே, வரப்பெற்ற வருமானங் களைக் கணக்கிட்டு, முறையாக வரி செலுத்தி, உரிய தேதிக்குள் வரித் தாக்கல் மற்றும் வரி சரிபார்த்தல் செய்துவிட்டால் எந்தச் சிரமமும் இருக்காது!