பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

5ஜி தொழில்நுட்பம்... எந்தெந்தத் துறைகளுக்கு ஏற்றம் தரும்..?

5G தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
5G தொழில்நுட்பம்

5G தொழில்நுட்பம்

சமீபத்தில் டெல்லியில் நடந்த தொலைத் தொடர்பு, கைபேசி மாநாட்டில் (India Mobile Congress) பிரதமர் நரேந்திர மோடி 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவின் 13 நகரங் களில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ஊடகங்களில் 5ஜி நடைமுறைப்படுத்துவதால், நம் நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. 5ஜி-யில் அப்படி என்ன வித்தியாசமாக இருக்கிறது, அது எப்படி நம் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்குப் பயன்படும்?

எஸ்.ராமச்சந்திரன் 
தொழில்நுட்ப ஆலோசகர், 
Infosys Knowledge Institute
எஸ்.ராமச்சந்திரன் தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute

2.2 கோடி புதிய வேலைவாய்ப்புகள்...

தொலைத்தொடர்புத் துறையின் பரிணாம வளர்ச்சியில் அடுத்தகட்டம் 5ஜி. இந்த தொழில் நுட்பத்தின் தாக்கம் உலகப் பொருளா தாரத்தில் 2035-ம் ஆண்டுக்குள் 13 ட்ரில்லியன் டாலர் மற்றும் 2.2 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கும் என்று தரச்சான்று நிறுவனமான பிரைஸ் வாட்டர் கூப்பர் (PwC) நிறுவனம் கூறியுள்ளது. 5ஜியானது 4ஜி-யை விட வேகமானது, அதிக அலைவரிசை மற்றும் திறன் உள்ளது, நம்பக‌மானது, ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குத் தொடர்பு கொள்வதில் குறைவான தாமதம் கொண்டுள்ளது. இத்தகைய பண்புகளால் 5ஜி-யின் பயன்பாடுகள் அதிகம்.

வேகம் அதிகம்; தூரம் துறைவு...

5ஜி அதிக அதிர்வெண்களைப் (Frequency) பயன்படுத்துவதால் அதன் வேகம் அதிகமாக இருக்கிறது. ஆனால், அதே சமயம் இந்த அலைகள் பயணிக்கக்கூடிய தூரம் குறைவு. குறுக்கே இருக்கும் பொருள்களால் இந்த 5ஜி அலைகள் தடைபடக்கூடும். இதனால் சிக்னல்களை அனுப்பி, வாங்கிக்கொள்ளும் சிறிய டவர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படும். ஒரு நெட்வொர்க்கைத் துண்டுகளாக்கி (slicing) ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட தேவைக்கேற்ப அமைத்து பயன்படுத்தலாம். தகவலை சிறு சிறு பாக்கெட்களாக அனுப்புவதால், இதன் நம்கபத்தன்மை கூடி அனுப்பும் நேரத் தாமதம் குறைகிறது.

கல்வி, மருத்துவம், வாகனம் மற்றும் அவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள், பொழுதுபோக்கு, மின்சாரம் போன்ற பல துறைகளில் இதற்குமுன் எவரும் யோசிக்காத யோச‌னைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கோவிட் பெருந்தொற்றைத் தொடர்ந்து அனைவரும் அவரவர்களின் இட‌த்திலிருந்தே வேலை செய்யும் நிலையில் 5ஜி-யின் பயன்பாடு அதிக மாகவே இருக்கும்.

மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்ட 5ஜி நெட்வொர்க்கை மென்பொருள் மூலம் வரையறுத்து இயக்கலாம். (software defined network). இதனால் 5ஜி கருவிகளில் தேவைப்படும் மாற்றங் களை நேரில் செல்லாமல் தொலைவில் ஒரு கட்டுப்பாட்டு அறையில் இருந்தே செய்யலாம். 5ஜி இயக்கத் தேவைப்படும் கட்டமைப்பை அடுக்கு அடுக்காகப் பார்க்கலாம். அடிப்படையில் ரவ்டர், ஸ்விட்ச் போன்ற சாதனங்கள் தேவை. அதற்கு மேல் இரண்டாவது அடுக்கு இந்தச் சாத‌னங்களை இயக்கும் மென்பொருள். அதற்கும் மேலே மூன்றாவது அடுக்கு 5ஜி முழுவதையும் கண்காணித்து இயக்கும் மென்பொருள்.

5ஜி-யைத் தனித்துப் பார்க்காமல் வளர்ந்து வரும் மற்ற கணினி சார்ந்த தொழில்நுட்பங் களுடனும் சேர்த்துப் பார்க்கலாம். இவ்வாறு செய்வதால் 5ஜி-யின் தாக்கம் மற்றும் ஆற்றல் மேலும் கூடும்.

5ஜி தொழில்நுட்பம்... எந்தெந்தத் துறைகளுக்கு ஏற்றம் தரும்..?

எட்ஜ் கம்ப்யூட்டிங்...

5ஜி-யின் வேகத்துக்கு மற்றொரு காரணம், வாடிக்கை யாளர்களின் அருகில் செய்யப் படும் ‘எட்ஜ் கம்ப்யூடிங் (edge computing).’ எந்த ஒரு சாதனத்திலும் அதன் செயல்பாட்டை வைத்து சில முடிவுகள் எடுக்கப் பட வேண்டியிருக்கும். அதன் வோல்டேஜ் அல்லது மோட்டர் சுற்றும் வேகம் போன்றவ‌ற்றை அப்போதைய நிலைக்கேற்ப மாற்ற வேண்டியிருக்கலாம். இந்த முடிவுகளை மனிதர்களின் ஈடுபாடு இல்லாமல் எடுக்க தொலைவில் இருக்கும் ஒரு கணினியுடன் தொடர்பு கொண்டு முடிவு எடுக்க வேண்டும். அதற்கு நேரம் ஆகும். தகவலை அனுப்பி பதில் வரும் வரை காத்திருக்க வேண்டும். சில சமயங்களில் ஒருசில நொடிகள் கூட மிக முக்கியமாக இருக்கும். இப்படிக் காத்திருக்காமல் அந்தச் சாதனமே முடிவெடுக்க அதன் உள் இருக்கும் மென்பொருள் ‘எட்ஜ் கம்ப்யூடிங்’ உதவும். இதனால் கால தாமதம் இல்லா மல் சட்டென முடிவுகள் எடுக்கலாம்.

5ஜி நெட்வொர்க்கை சரியான வழியில் செயல்படுத்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பயன்படுத்தப்படுகிறது. தகவல் மற்றும் ஆவணங்களை க்ளவுடில் வைத்துக்கொள்ளலாம். இதனால் நம்பகத்தன்மை அதிக மாகவும் தேவைக்கேற்ப கணிக்கும் திறனை மனித ஈடுபாடு இல்லாமல் கூட்டியும் குறைத்தும் கொள்ளும் நன்மை கிடைக்கும் என்பதால், பெரும் மாற்றம் வர வாய்ப்புண்டு.

இணைக்கப்பட்ட உலகில் 5ஜி-யும் ஐ.ஓ.டி-யும் (Internet of Things)

தொலைத்தொடர்புத் துறை முதலில் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளப் பயன் பட்டது. அதன்பின் தொழில் நுட்பம் முன்னேற‌ முன்னேற இசை, காணொளி, தகவல் போன்ற வையும் பரிமாறிக்கொள்ளப் பட்டன‌. இன்று 4ஜி மற்றும் 5ஜி-யின் ஆற்றலால் இணையதளத் தையும் தாண்டி மனிதர்கள் மட்டும் இல்லாமல் பொருள்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள் ளும் நிலை உருவாகியுள்ளது. 5ஜி-யின் பரபரப்புக்கு ஐ.ஓ.டி-யும் ஒரு முக்கிய காரணம். இதனால் தொலைவில் இருந்தே ஒரு பொருள் எப்படிச் செயல்படுகிறது என்று கண்காணிக்கலாம். சரியான நேரத்தில் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடாமல் இருக்க எச்சரிக்கை அனுப்பலாம்; நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு 5ஜி-யின் வேகமும் தாமதம் இல்லாத திறனும் முக்கியமான காரணங்கள்.

ஐ.ஓ.டி தொழில்நுட்பத்தால் வாகனங்களில் தொடங்கி சமையல் அறையில் பயன்படுத்தும் சாதனங் கள், அவற்றையும் தாண்டி வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவ மனைகள், நகரங்கள்கூட இணைக் கப்பட்டவகையாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு ஒரு முக்கியமான அடித்தளம் 5ஜி.

5ஜி தொழில்நுட்பம்... எந்தெந்தத் துறைகளுக்கு ஏற்றம் தரும்..?

5ஜி கொண்டுவரும் மாற்றங்கள்...

5ஜி-யின் தனித்துவமான, புதிய பண்புகளால் நாம் முன்னர் யோசித்துப் பார்க்காத பல பயன் பாடுகள் இன்று சாத்தியம் ஆகி விட்டன. உதாரணமாக, வாகனத் துறையில் வாகனங்கள் எந்நேரமும் இணைக்கப்பட்டவகையாகவே இருக்கும். சாலைகளில் உள்ள சிக்னல் போன்ற மற்ற கருவிகளுடன் பேசிக்கொள்ளலாம். இதனால் வாகனத்தின் உரிமையாளர் வாகனம் இருக்கும் இடம், அதன் பயன்பாடு, மீதம் இருக்கும் எரிபொருள் அல்லது மின்சார வாகனத்தில் இருக்கும் சார்ஜ் போன்ற தகவல்களை உடனுக்குடன் தன் கைபேசியில் இருக்கும் ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஓட்டுநர் எவ்வளவு பாதுகாப்பாக ஓட்டுகிறார் என்பதைப் பொறுத்து, காப்பீட்டு நிறுவனங்கள் அவர் கட்டும் சந்தாவை முடிவு செய்யலாம். வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் வாகனத்தின் செயல்திறனை வைத்து சரியான நேரத்தில் பழுதுபார்க்க எச்சரிக்கை அனுப்பலாம்.

சாதனங்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளில் 5ஜி-யின் பயன்பாடு அதிகம். முக்கியமான இயந்திரங்கள், கருவிகளின் நிலைமையை உடனுக்குடன் தெரிவித்து அசம்பாவிதம் அல்லது தயாரிப்பில் குறைகள் எதுவும் நடக்காமல் சரியான நேரத்தில் நடவடிக்கைகள் எடுக் கலாம். ஒரு தொழிற்சாலைக்குள் மட்டும் பயன்படுத்தப்படும் தனிப்பட்ட (private) 5ஜி நெட்வொர்க் அமைக்கலாம்.

கோவிட் போன்ற சவால்களை சமாளிக்க, சமுதாயத்தின் அனைத்து வர்க்கத்தையும் சென்றடையக்கூடிய இரு துறைகள் நிதி மற்றும் கல்வி. 5ஜி-யால் எங்கிருந்து வேண்டு மானாலும் வகுப்புகளில் கல‌ந்துகொள்ளலாம், ஆசிரியர் பாடம் எடுத்து முடித்தபின் பதிவு செய்யப்பட்ட வகுப்பை எப்போது வேண்டுமானாலும் நம் தேவைக்கேற்ப மீண்டும் மீண்டும் கேட்கலாம்.

கல்வித்துறையில் பயிற்சி அளிக்க இன்று 5ஜி-யால் AR/VR (Augmented reality, Virtual reality) போன்ற தொழில் நுட்பங்கள் சாத்தியமாகிவிட்டன. இந்தத் தொழில் நுட்பத் தால் ஒரு பயிற்சியைப் படித்து, படங்கள் பார்த்து மட்டும் கற்றுக்கொள்ளாமல் ஓர் அனுபவமாக அளிக்கலாம்.

வங்கிகள் நடுவே இல்லாமல் ஒருவருக்கொருவர் பணப் பட்டுவாடா செய்துகொள்ள உதவியது கைபேசிகள் மூலம் டிஜிட்டல் சேனல்கள். மருத்துவமனைகளில் ஒரு சில நொடிகளில் ஓர் உயிரைக் காக்கும் வாய்ப்பை இழக்கலாம். இங்கே 5ஜி மூலம் ஒரு நோயாளியின் நிலைமையை தொலைவில் இருக்கும் மருத்துவருக்கு உடனடியாக அனுப்பி அவர் சொல்லும் செயல்முறையை நேரத்தில் செய்து ஓர் உயிரைக் காக்கலாம்.

5ஜி-யானது 4ஜி-யைவிட ‌வேகமாக வேலை செய்தாலும், அது சென்றடையக்கூடிய தூரம் குறைவு. டவர்களின் இடையே மரங்கள், கட்டடங்கள் இருந்தால் சிக்னல் சரியாக‌ச் சென்றடையாது. இதனால் அதிக டவர்கள் தேவைப்படும். நம் நாட்டின் அனைத்து மூலைகளிலும் 5ஜி-யைக் கொண்டு சேர்க்க நிறைய முதலீடு தேவைப்படும். 5ஜி தகவல் பரிமாற்ற வழிகளை ஐ.ஓ.டி போன்ற சேனல்கள் மூலம் அதிகப்படுத்திவிட்டதால் அதற்கேற்ப பாதுகாப்பு (cyber security) நடவடிக்கைகளும் அதிகம் எடுக்க வேண்டியிருக்கும்.