Published:Updated:

5ஜி ஏலத்தில் அதானி... முட்டிமோதும் மெகா நிறுவனங்கள்..!

5ஜி ஏலம்
பிரீமியம் ஸ்டோரி
5ஜி ஏலம்

போட்டி

5ஜி ஏலத்தில் அதானி... முட்டிமோதும் மெகா நிறுவனங்கள்..!

போட்டி

Published:Updated:
5ஜி ஏலம்
பிரீமியம் ஸ்டோரி
5ஜி ஏலம்

ஜூலை 26 அன்று தொலைத்தொடர்புத் துறை சார்ந்த சேவைகளுக்கு ஏலம் நடைபெற இருக்கிறது. அந்த ஏலத்தில் பிரபல தொழிலதிபரான கௌதம் அதானியின் அதானி குழுமம் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஷியாம் ராம்பாபு
ஷியாம் ராம்பாபு

தற்போது தொலைத் தொடர்புத்துறை சார்ந்த சேவைகளை ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அரசுத்துறை நிறுவனமான பி.எஸ்.என். எல் நிறுவனமும் தொலைத் தொடர்புத்துறை சேவை களை வழங்கி வருகிறது.

நமது நாட்டில் மிகப் பெரிய பணக்காரர்களாக தற்போது அறியப்படுபவர்கள் குஜராத் மாநிலத்தைச் சார்ந்த கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் ஆவர். இவர்கள் இருவரும் நமது நாட்டில் பல்வேறு துறைகளில் தமது சாம் ராஜ்ஜியத்தை நிறுவி யுள்ளனர்.

5ஜி ஏலத்தில் அதானி... முட்டிமோதும் மெகா நிறுவனங்கள்..!

ஆனாலும், தற்போது வரை இவர்கள் இருவருக் குள்ளும் நேரடியான போட்டி இல்லை. தற்போது முதல் முறையாக 5ஜி ஏலத்தில் இவர்களின் நிறுவனங்கள் முதல்முறையாக நேரடியாக பங்கு பெறுகின்றன.

என்றாலும், அதானி குழும நிறுவனம் நேரடியாக பொதுமக்களுக்கு தொலைத் தொடர்பு சேவைகளைத் தற்போது வழங்கப்போவ தில்லை என்று தெரிவித்து உள்ளது. தமது குழுமத்தைச் சார்ந்த நிறுவனங்களுக்கும், பிற தனியார் நிறுவனங் களுக்கும் மட்டும் 5ஜி சேவை களை வழங்க இருப்பதாக அதானி குழுமம் தெரிவித் துள்ளது.

பொதுமக்களுக்கான சேவைகள் வழங்காமல் போனாலும் பிற தனியார் நிறுவனங்களுக்கு சேவை களை வழங்குவதன் மூலம் தொலைத்தொடர்பு துறை யில் தற்போது போட்டி அதிகரித்துள்ளது.

பல முன்னணி தனியார் நிறுவனங்களைத் தமது வாடிக்கையாளராக மாற்று வதற்கு அதானி குழுமம் நிச்சயம் முயற்சி செய்யும். இதன் காரணமாகத் தொலைத்தொடர்பு துறை யில் முதல் முறையாக இரண்டு பெரிய தொழிலதிபர் களுக்கு இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

5ஜி ஏலத்தில் அதானி... முட்டிமோதும் மெகா நிறுவனங்கள்..!

அதானி குழுமத்தின் நுழைவு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமன்றி, பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வோடஃபோன் நிறுவனத்துக்கு அதிக பாதிப்புகளை அதானி குழுமம் ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு முன்பு ஏர்செல், டாடா டொகோமோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், எம்.டி.எஸ் போன்ற பல முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இருந்தன. ரிலையன்ஸ் ஜியோ ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாகக் கடுமையான நஷ்டத்தை சந்தித்த இந்த நிறுவனங்கள் தமது இயக்கத்தை நிறுத்தின. ரிலையன்ஸ் ஜியோ தமது வருகையின்போது பல அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்குத் தந்தது காரணமாகத்தான் பிற நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு, அவை தொழிலை நிரந்தரமாக மூடும் நிலை ஏற்பட்டது.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது பழமொழி. அதானி நிறுவனத்தின் வருகை நிச்சயம் வரும் நாள்களில் தொலைத்தொடர்பு துறையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

தற்போதைய நிலவரப்படி, நேரடியாக பொது மக்களுக்கு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கப்போவதில்லை என அதானி குழுமம் தெரிவித்திருந்தாலும், வரும் காலத்தில் தமது சேவையை விரிவுபடுத்தும் வாய்ப்பும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

எந்த துறையாக இருந்தாலும் அதில் போட்டி என்று வரும்போது, மக்களுக்குப் பலவிதமான நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதே கடந்த கால வரலாறு. தொலைத்தொடர்பு துறையில் அதானி குழுமத்தின் வருகையால மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும், தொலைத்தொடர்பு துறையில் என்ன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதைத் தெரிந்துகொள்ள கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!