Published:Updated:

ட்விட்டரை விற்றதால் ஊழியர்கள் அதிருப்தியா?! சிஇஓ பராக் அகர்வால் அனுப்பிய இமெயில்!

பராக் அகர்வால் | எலான் மஸ்க்

'இது குறிப்பிடத்தக்க மாற்றம், நீங்கள்தான் இதற்கு பழகிக்கொள்ள வேண்டும்' என்கிற ரீதியில் பராக் அகர்வால் ஊழியர்களுக்கு அனுப்பிய மெயிலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ட்விட்டரை விற்றதால் ஊழியர்கள் அதிருப்தியா?! சிஇஓ பராக் அகர்வால் அனுப்பிய இமெயில்!

'இது குறிப்பிடத்தக்க மாற்றம், நீங்கள்தான் இதற்கு பழகிக்கொள்ள வேண்டும்' என்கிற ரீதியில் பராக் அகர்வால் ஊழியர்களுக்கு அனுப்பிய மெயிலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Published:Updated:
பராக் அகர்வால் | எலான் மஸ்க்

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய செய்திதான் இன்றைக்கு உலகம் முழுவதுக்குமான பேசுபொருள். சமீபத்தில் நடந்த மென்பொருள் நிறுவன விற்பனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று இது. எலானின் ஆபரை ஏற்றுக் கொண்ட ட்விட்டர் நிர்வாகம் அதனை திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ட்விட்டரின் ஊழியர்களிடம் அதன் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் தலைவர் ப்ரெட் டெய்லர் பேசும் போது "இந்த வருடத்திற்குள் ட்விட்டர் முழுமையாகக் கைமாறும். அதுவரை வழக்கம் போலவே ட்விட்டர் செயல்படும்" என்று பேசியுள்ளனர்.

சிஇஓ பராக் அகர்வால், "இந்தப் பரிவர்த்தனை முடிவடைய ஆறு மாத காலம் ஆகலாம். அதுவரை வேலை நீக்கம் எதுவும் இருக்காது" எனப் பதிலளித்திருந்தார். இந்தக் கூட்டத்தில் எலான் மஸ்க் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் சிஇஓவும் இணை நிறுவனருமான ஜாக் டார்ஸி உட்பட ஏற்கெனவே நிர்வாகக் குழுவில் இருந்த யாருமே இதில் கலந்து கொள்ளவில்லை.

ஜாக் டார்ஸி
ஜாக் டார்ஸி

ட்விட்டரை எலான் வாங்குவதற்கான அறிவிப்பு வந்ததில் இருந்தே நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கவலையில்தான் இருந்தனர். நிலையற்ற அறிவிப்புகளால் மிகவும் குழம்பி போயிருந்தனர். இன்னும் குறிப்பாக சொல்ல போனால் இணையத்தளம் ஒன்றிற்கு ட்விட்டர் ஊழியர் அளித்த பேட்டியில், "10 சதவிகித பணியாளர்கள் மட்டுமே எலான் ட்விட்டரை வாங்குவதை வரவேற்கின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.

'இது குறிப்பிடத்தக்க மாற்றம், நீங்கள்தான் இதற்கு பழகிக்கொள்ள வேண்டும்' என்கிற ரீதியில் பராக் அகர்வால் ஊழியர்களுக்கு அனுப்பிய மெயிலில் குறிப்பிட்டு இருக்கிறார். "டீல் முடிவடைந்த பிறகு இந்தத் தளம் எந்த திசை நோக்கி பயணிக்க இருக்கிறது என்பது பற்றி தெரியாது" என்றார் பராக். இந்தக் குறிப்பிட்ட காலத்தில் பெரியளவிலான மதிப்பு கொண்ட பணியாளர்களின் பங்குகளை இவை எந்த விதத்திலும் பாதிக்காது எனவும் உறுதியளித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism