Published:Updated:

வோடாபோனின் வீழ்ச்சியால் வளர்ச்சிபெறும் ஜியோ மற்றும் ஏர்டெல்... TRAI அறிக்கை சொல்வது என்ன?

ஜியோ, ஏர்டெல்

2021 நவம்பர் மாத TRAI-யின் அறிக்கைப்படி ஜியோ 2.01 மில்லியன் சந்தாதாரர்களையும், ஏர்டெல் 1.31 மில்லியன் சந்தாதாரர்களையும் பெற்று வளர்ச்சியையும் வோடாபோன் 1.89 மில்லியன் சந்தாதாரர்களை இழந்து வீழ்ச்சியையும் அடைந்துள்ளது.

வோடாபோனின் வீழ்ச்சியால் வளர்ச்சிபெறும் ஜியோ மற்றும் ஏர்டெல்... TRAI அறிக்கை சொல்வது என்ன?

2021 நவம்பர் மாத TRAI-யின் அறிக்கைப்படி ஜியோ 2.01 மில்லியன் சந்தாதாரர்களையும், ஏர்டெல் 1.31 மில்லியன் சந்தாதாரர்களையும் பெற்று வளர்ச்சியையும் வோடாபோன் 1.89 மில்லியன் சந்தாதாரர்களை இழந்து வீழ்ச்சியையும் அடைந்துள்ளது.

Published:Updated:
ஜியோ, ஏர்டெல்

பல திட்டங்களைச் சந்தாதார்களுக்கு அறிமுகப்படுத்தித் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். TRAI-யின் 2021 நவம்பர் மாத அறிக்கைப்படி லேண்ட்லைன் மற்றும் வயர்லெஸ் என இரண்டையும் சேர்த்து ரிலையன்ஸ் ஜியோவின் சந்தைப் பங்கு 54.01%. பெரும் போராட்டத்தின் பின் பாரதி ஏர்டெல் நிறுவனம், லேண்ட்லைன் மற்றும் வயர்லெஸையும் சேர்த்து சந்தைப் பங்கு 26.21%. ஆனால் வோடாபோனின் லேண்ட்லைன் மற்றும் வயர்லெஸ் என இரண்டையும் சேர்த்தே 15.27% தான். ஜியோ மற்றும் ஏர்டெல் மட்டும் நிலையான சந்தாதாரர்களை வைத்துள்ளது. ஆனால் வோடாபோனின் சந்தைப் பங்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

ஜியோ, ஏர்டெல் - வயர்லெஸின் TRAI -ன் வளர்ச்சிப் பட்டியல்
ஜியோ, ஏர்டெல் - வயர்லெஸின் TRAI -ன் வளர்ச்சிப் பட்டியல்
TRAI -ன் வயர்லைன் மற்றும் வயர்லெஸின் 2021 நவம்பர் மாத வரைபடம்
TRAI -ன் வயர்லைன் மற்றும் வயர்லெஸின் 2021 நவம்பர் மாத வரைபடம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

TRAI - இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனம் 18.01.2022-ல் வெளியிட்ட அறிக்கைப்படி வயர்லெஸ் தொலைப்பேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 2021 அக்டோபர் மாதம் 1,166.30 மில்லியனிலிருந்து நவம்பர் மாதம் 1,167.50 மில்லியனாக உயர்ந்துள்ளது. 2021 அக்டோபர் மற்றும் நவம்பர் மாத இடைவெளியில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 0.47% வளர்ச்சியடைந்து 2.01 மில்லியன் சந்தாதாரர்களைப் புதிதாகப் பெற்று தனது வயர்லெஸ் தொலைப்பேசி சந்தாதாரர்களின் சந்தைப் பங்கை 36.71% என்று உயர்த்தியுள்ளது. பாரதி ஏர்டெல் 0.37% வளர்ச்சியடைந்து 1.31 மில்லியன் சந்தாதாரர்களைப் புதிதாகப் பெற்று தனது வயர்லெஸ் தொலைப்பேசி சந்தாதாரர்களின் சந்தைப் பங்கை 30.43% என உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு 2021 அக்டோபர் மற்றும் நவம்பர் மாத இடைவெளியில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியைப் பெற்றன. ஆனால் வோடாபோன் மற்றும் இந்திய அரசின் பி.எஸ்.என்.எல் (BSNL) நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில் பி.எஸ்.என்.எல் (BSNL) நிறுவனத்திற்கு 4ஜி சேவை தாமதமாகக் கிடைத்ததால் இதன் பங்கு சரிவடைவதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் வோடாஃபோன் நிறுவனம் 4ஜி சேவையைப் பெற்றிருந்தும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இது அதன் சந்தைப் பங்கிலும் தாக்கம் ஏற்படுத்தி வோடாபோன் நிறுவனத்தின் சந்தைப் பங்கு வெறும் 22.88% ஆகக் குறைத்துள்ளது. இப்படியே தொடருமானால் வோடாபோனின் வளர்ச்சி மிகவும் பாதிப்பிற்குள்ளாகும்.

வயர்லெஸ்  சந்தாதாரர்களின் சந்தைப் பங்கு -TRAI -ன் 2021 நவம்பர் மாத வரைபடம்
வயர்லெஸ் சந்தாதாரர்களின் சந்தைப் பங்கு -TRAI -ன் 2021 நவம்பர் மாத வரைபடம்

தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சந்தாதாரர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் சந்தாதாரர்களை நிலையாக வைக்கவும் பல திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் சேர்ந்து ‘ஜியோ போன்‘ ஒன்றை வெளியிடத் தயாராகிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism