சமைக்கத் தேவைப்படும் அத்தியாவசிய உபகரணங்களில் குக்கரும் ஒன்று. வீடுகளில் பயன்படுத்தப்படும் குக்கர்கள் அழுத்தம் சரியாக வெளியாகாமல் திடீரென வெடித்த சம்பவங்கள் பல முறை நடந்திருக்கின்றன. உணவுடன் இது பாதுகாப்பு சம்பந்தமான விஷயமாகவும் இருப்பதால், குக்கரை வாங்கும்போது, அதன் தரத்தை உறுதிசெய்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.

ஆனால், சமீபத்தில் அமேசானில் விற்கப்பட்ட குக்கர்கள் தரமற்றதாக இருந்துள்ள. இதனால் மத்திய நுகர்வோர் ஆணையம் அமேசானுக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதாவது, அமேசான் தளத்தின் மூலமாக விற்கப்பட்ட 2,265 பிரஷர் குக்கர்கள் தரமற்றதாக இருந்துள்ளன. எனவே, நுகர்வோரின் உரிமைகளை மீறியதற்காகவும், தரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காகவும் அமேசான் நிறுவனத்துக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது, மத்திய நுகர்வோர் ஆணையம்.

மேலும் குக்கர்களை வாங்கியவர்களுக்கு இந்தச் செய்தியை அறிவித்து, அவர்களிடமிருந்து குக்கர்களை பெற்றுக்கொண்டு, அவர்களின் பணத்தைத் திருப்பி தர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விற்கப்பட்ட இந்த 2,265 குக்கர்கள் மூலமாக 6,14,825.41 தொகையை அமேசான் நிறுவனம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.