Published:Updated:

அமேசான் சந்தை மதிப்பு ஒரே நாளில் 191 பில்லியன் டாலர் உயர்வு... காரணம் என்ன தெரியுமா?

அமேசான்

கடந்த வாரத்தில் ஆப்பிள், ஒரே நாளில் 179 பில்லியன் டாலர் அளவுக்கு சந்தை மதிப்பு உயர்வை எட்டியது. அதை அமேசான் நேற்று முறியடித்துள்ளது.

அமேசான் சந்தை மதிப்பு ஒரே நாளில் 191 பில்லியன் டாலர் உயர்வு... காரணம் என்ன தெரியுமா?

கடந்த வாரத்தில் ஆப்பிள், ஒரே நாளில் 179 பில்லியன் டாலர் அளவுக்கு சந்தை மதிப்பு உயர்வை எட்டியது. அதை அமேசான் நேற்று முறியடித்துள்ளது.

Published:Updated:
அமேசான்

ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 191 பில்லியன் டாலர் அளவுக்கு மூலதன உயர்வை சந்தித்துள்ளது. இதன் மூலம் மிகப்பெரும் நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டுக்கு அடுத்து நான்காவது இடத்தில் அமேசானும் இணைந்துளளது.

இதற்கான காரணமாக பார்க்கப்படுவது அமேசானின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கும் அதிகமாகவே லாபத்தை ஈட்டியுள்ளதுதான். ஆன்லைன் விற்பனைத் தாண்டி அமேசானின் க்ளவுட் கம்ப்யூட்டிங், விளம்பரங்கள் மூலமாக வரும் வருவாய் அதிகரித்துள்ளது.

அமேசான்
அமேசான்

விடுமுறைகளில் கூட அமேசான் வாடிக்கையாளர்களுக்கு பொருள்களைக் கொண்டு சேர்க்க அமேசான் செலவழித்த முதலீடு நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடிக்கான சந்தா தொகை நீண்ட நாள்களுக்கு பிறகு இருபது டாலர் அளவுக்கு உயர்த்தியுள்ளதும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்திருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முதல் நாள் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. அதற்கு அடுத்த நாளே அமேசானின் சந்தை மதிப்பு உயர்வு பங்குச்சந்தை குறியீட்டின் உயர்வுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

கடந்த வாரத்தில் ஆப்பிள், ஒரே நாளில் 179 பில்லியன் டாலர் அளவுக்கு சந்தை மதிப்பு உயர்வை எட்டியது. அதை அமேசான் நேற்று முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 14 சதவிகிம் அளவுக்கான இந்த உயர்வு அமேசானின் சந்தை மதிப்பை 1.6 ட்ரில்லியன் டாலருக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism