Published:Updated:

`ஆன்லைனில் குவியும் ஆர்டர்; தவிக்கும் ஷாப்பிங்தளங்கள்’-1 லட்சம் ஊழியர்களை பணியில் அமர்த்தும் அமேசான்

Amazon
Amazon

நிறைய மக்கள் ஆன்லைனில் பொருள்களை ஆர்டர் செய்வதால், பொருள்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆனால், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருள்கள் சென்று சேர வேண்டும் என்று எங்கள் விற்பனையாளர்களிடம் கூறியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது அமேசான்.

கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. கொரோனாவைத் தடுக்கும் நடவடிக்கையாகப் பொதுவான இடங்களில் மொத்தமாகக் கூட வேண்டாம், முகமூடிகள் பயன்படுத்தவும் எனப் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி அனைத்து நாட்டு அரசுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. வீட்டைவிட்டு பெரும்பாலும் வெளியேறாமல் இருக்கவே மக்கள் விரும்புகின்றனர்.

Amazon
Amazon

இந்த நிலையில் வீட்டுக்குத் தேவைப்படும் பொருள்களை வாங்குவதற்கு ஆன்லைன் தளங்களை இப்போது பெரிதளவு உபயோகிக்கத் தொடங்கியிருக்கின்றனர். அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால், இந்த நிலையைச் சமாளிக்க 1,00,000 ஊழியர்களைப் புதிதாக வேலைக்கு எடுக்கப் பிரபல ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசான் முடிவெடுத்துள்ளது. டெலிவரிக்காகவே பெரும்பாலான ஊழியர்களை வேலைக்கு எடுப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், எப்போதும் ஒரு மணி நேரத்துக்கு 15 டாலர்கள் சம்பளமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த ஊழியர்களுக்கு ஒரு மணிக்கு 17 டாலர்கள் சம்பளமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

`இந்த 14 வெப்சைட்டுகளைப் பார்க்காதீங்க!' - கொரோனா பெயரால் உங்களின் தகவல்கள் திருடப்படலாம் #Corona

நிறைய மக்கள் ஆன்லைனில் பொருள்களை ஆர்டர் செய்வதால், பொருள்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆனால், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருள்கள் சென்று சேர வேண்டும் என்று எங்கள் விற்பனையாளர்களிடம் கூறப்பட்டுள்ளது. முடிந்த வரை அனைவருக்கும் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம் எனவும் அந்நிறுவனத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான்
அமேசான்

தங்கள் ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் இரண்டு வாரங்கள் சம்பளத்துடன்கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது அந்நிறுவனம். மேலும், வீட்டில் இருந்து வேலைபார்க்க முடிந்தவர்கள், அலுவலகம் வரத் தேவையில்லை எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு