Published:Updated:

இந்தியாவில் உணவு விநியோகச் சேவையைத் தொடங்கும் அமேசான் நிறுவனம்!

அமேசான்
அமேசான்

சோதனைக்காகப் பெங்களூரில் குறிப்பிட்ட உணவகங்களிலிருந்து தங்கள் சேவை மூலம் உணவு விநியோகம் செய்வது தொடர்பாக அமேசான் பேச்சுவார்த்தை நடத்திவந்தது.

அமேசான் நிறுவனம் இந்தியாவில் உணவு விநியோகச் சேவையை வரும் மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது. நீண்ட காலமாகவே இந்தத் திட்டம் தொடர்பாக அமேசான் கூறிவந்தது. அதோடு கடந்த தீபாவளிக்கே இந்தத் திட்டம் தொடங்கவிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி ஏனோ தொடங்கவில்லை. இந்த நிலையில், வரும் மார்ச் மாதம் உணவு விநியோக சேவையைத் தொடங்கவிருக்கிறது அமேசான்.

Zomato
Zomato
`மூன்று வருடங்களாக நம்மைச்  சுற்றிவருகிறது!’- பூமியின் மற்றொரு குட்டி `நிலா'

சோதனைக்காகப் பெங்களூரில் குறிப்பிட்ட உணவகங்களில் இருந்து தங்கள் சேவை மூலம் உணவு விநியோகம் செய்வது தொடர்பாக அமேசான் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. 2016-ல் தான் அமேசான் ப்ரைம் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டது. தற்போது தொடங்கவிருக்கும் இந்தச் சேவையும் அமேசான் ப்ரைம் அல்லது அமேசான் ப்ரஷில் ஒரு பகுதியாகத்தான் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swiggy
Swiggy

கடந்த ஜனவரி மாதம் `ஊபர் ஈட்ஸ்' (Uber Eats) நிறுவனத்தை சொமோட்டோ (Zomato) நிறுவனம் வாங்கிய பிறகு உணவு விநியோகத் துறையில் ஸ்விக்கியும், சொமோட்டோவும் மட்டுமே இருந்து வருகின்றன. இரு நிறுவனங்களுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவந்த சலுகைகளை தற்போதுதான் நிறுத்தியுள்ளன.

அதோடு உணவை டெலிவரி செய்வதற்கும் கட்டணங்கள் வசூலிப்பதைச் சற்று கடுமையாக்கியுள்ள இந்த நேரத்தில் அமேசான் நிறுவனம் உணவு விநியோக சேவையைத் தொடங்குவது சிறந்த முடிவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு