Published:Updated:

"ட்விட்டரை மொத்தமாகக் கொடுத்துவிடுங்கள். இல்லையென்றால்..."- எச்சரிக்கை விடுக்கிறாரா எலான் மஸ்க்?

எலான் மஸ்க் | Elon Musk

ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகிதப் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், தற்போது ட்விட்டரை மொத்தமாக 43 பில்லியனுக்கு வாங்கத் தயாராக இருப்பதாக வெளிப்படையாகத் அறிவித்துள்ளார். இல்லையெனில் ட்விட்டர் சரிவைச் சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.

"ட்விட்டரை மொத்தமாகக் கொடுத்துவிடுங்கள். இல்லையென்றால்..."- எச்சரிக்கை விடுக்கிறாரா எலான் மஸ்க்?

ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகிதப் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், தற்போது ட்விட்டரை மொத்தமாக 43 பில்லியனுக்கு வாங்கத் தயாராக இருப்பதாக வெளிப்படையாகத் அறிவித்துள்ளார். இல்லையெனில் ட்விட்டர் சரிவைச் சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.

Published:Updated:
எலான் மஸ்க் | Elon Musk
உலகின் அதிக சொத்துடையவர்களின் பட்டியலில் உச்சத்தில் அமர்ந்திருக்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகிதப் பங்குகளை வாங்கினார். இதையடுத்து ட்விட்டரின் மொத்தப் பங்குகளையும் 43 பில்லியனுக்கு வாங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றிக் கூறிய எலான் மஸ்க், "ட்விட்டரின் அபார ஆற்றலை நான் திறக்கப்போகிறேன். தற்போதைய வடிவத்தில் அது சேவை செய்ய முடியாது. ட்விட்டரை தனியார் நிறுவனமாக மாற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "இதுதான் எனது கடைசி ஆபர். இந்த ஒப்பந்தத்திற்கு ட்விட்டர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், நான் ட்விட்டரின் பங்குதாரராக இருப்பதா, வேண்டாமா என்பது குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும்" என்றும் எச்சரித்துள்ளார்.

Twitter | ட்விட்டர்
Twitter | ட்விட்டர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு தொடர்பாகக் கருத்து தெரிவித்து வரும் சில தொழில் அதிபர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள், ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த மதிப்பே கிட்டத்தட்ட 37 பில்லியன்தான். இந்த நிலையில் 6 பில்லியன் கூடுதலாகக் கொடுத்து 43 பில்லியனுக்கு அந்த நிறுவனத்தை வாங்குவதாக மஸ்க் கொடுத்துள்ளது நல்ல ஆபர். ட்விட்டர் இதை மறுக்குமானால் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கும் எலான் மஸ்க் தனது பங்குகளைத் திருப்பிப் பெற்றுக்கொண்டு விலக நேரிடும். அப்படி நடந்தால் ட்விட்டர் நிறுவனம் பெரும் சரிவைச் சந்திக்கும் என்றும் கூறிவருகின்றனர்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism