Election bannerElection banner
Published:Updated:

செய்திக்கு பணம் கொடுக்கும் பேஸ்புக்... ராபர்ட் முர்டோக் நிறுவனத்தோடு கூட்டணி!

Facebook
Facebook ( Robert Cianflone )

ஆஸ்திரேலியாவில் விளம்பரத்திற்காகச் செலவழிக்கப்படும் 100 டாலர்களில் 53 டாலர்கள் கூகுளுக்கும், 28 டாலர்கள் பேஸ்புக்கிற்கும் 19 டாலர்கள் மற்ற நிறுவனங்களுக்கும் செல்கின்றன.

ஆஸ்திரேலிய அரசுக்கும் பேஸ்புக்குக்கும் (Facebook) பல மாதங்களாக நடந்த வந்த பிரச்னை கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. பேஸ்புக்கில் பகிரப்படும் செய்திகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறி புதிய சட்டத்திருத்தத்தை அமல்படுத்தியது ஆஸ்திரேலியா. முதலில் இதனைக் கடுமையாக எதிர்த்து வந்த பேஸ்புக், பின்னர் கட்டணம் செலுத்த ஒப்புக் கொண்டது. அதன்படி முதலில் Seven West என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது பேஸ்புக். அதனைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவிலேயே பெரிய செய்தி நிறுவனமான ராபர்ட் முர்டோக்கின் News Corp-உடன் தற்போது மூன்று வருடங்கள் செய்திகளைப் பகிர்வதற்காக ஒப்பந்தம் செய்திருக்கிறது பேஸ்புக்.

Facebook
Facebook

இவை மட்டுமல்லாது Private Media, Schwartz Media மற்றும் Solstice Media ஆகிய நிறுவனங்களுடனும் பேஸ்புக் ஒப்பந்தம் செய்திருக்கிறது. மேலும் பல செய்தி நிறுவனங்களுடனும் பேஸ்புக் நிறுவனம் செய்திகளைப் பகிர்வதற்காக ஒப்பந்தம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் கூகுள் 4.3 பில்லியன் டாலர்களும், பேஸ்புக் 0.7 பில்லியன் டாலர்களும் விளம்பர வருமானமாக ஈட்டியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே மிகுந்த அழுத்தத்தில் இருக்கும் பத்திரிகைத்துறைக்கு இந்த ஒப்பந்தம் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook, Google | பேஸ்புக், கூகுள்
Facebook, Google | பேஸ்புக், கூகுள்

ஆஸ்திரேலியாவில் விளம்பரத்திற்காகச் செலவழிக்கப்படும் 100 டாலர்களில் 53 டாலர்கள் கூகுளுக்கும், 28 டாலர்கள் பேஸ்புக்கிற்கும் 19 டாலர்கள் மற்ற நிறுவனங்களுக்கும் செல்கின்றன. இந்தச் சட்டத்திருத்தம் மூலம் டெக் நிறுவனங்களால் செய்தி நிறுவனங்கள் இழக்கும் விளம்பர வருமானம் ஈடுசெய்யப்படும் எனத் தெரிவித்திருக்கின்றன ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்கள்.

கூகுள் நிறுவனம் கடந்த மாதமே News Corp மற்றும் Nine Entertainment ஆகிய நிறுவனங்களுடன் செய்திகளைப் பகிர்வதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு