Published:Updated:

மாதாந்தரக் கட்டணங்கள் குறைய வாய்ப்பு... ஓ.டி.டி-யின் எதிர்காலம் எப்படி?

ஓ.டி.டி
ஓ.டி.டி

தியேட்டர் மூடப்பட்டிருப்பது, ஐ.பி.எல் தடைப்பட்டிருப்பது, மக்களுக்கு அதிகமான ஓய்வு நேரம் கிடைத்தது ஆகியவை வேகமான வளர்ச்சிக்குக் காரணிகளாகப் பார்க்கப் படுகின்றன

'கவுன்ட்டர்பாயின்ட் ரிசர்ச்' (Counterpoint Research) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் ஓ.டி.டி பார்ப்பவர்களில் 89% பேர் 35 வயதுக்குக் குறைவானவர்கள்; பெண்களைவிட ஆண்களே (77%) அதிகம் ஓ.டி.டி-யில் பார்க்கிறார்கள். 55% பேர் மெட்ரோ நகரங்களைச் சேர்ந்தவர்கள். பெரு நிறுவனங்களில் வேலை செய்பவர்களே அதிகமாக ஓ.டி.டி-யில் பார்க்கிறார்கள்.

இந்தியாவில் ஓ.டி.டி பயனாளர்களில் 65% பேர் ஸ்மார்ட்போனில்தான் பார்க்கிறார்கள். இந்தி, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஆக்‌ஷன், காமெடி, ரொமான்டிக் கன்டென்ட்டுகளையே அவர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கிறார்கள்.

ஆர்மேக்ஸ் மீடியா (Ormax Media), வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று மணி நேரமாவது ஓ.டி.டி-யில் நேரம் செலவிடுபவர்கள் இந்தியா முழுக்க சுமார் எட்டு கோடிப் பேர் இருப்பதாகச் சொல்கிறது. இது ஆண்டுக்கு 20%-25% வளர்ச்சி கண்டுவருகிறது.

ஊத், ஜீ5, ஈராஸ் (Voot, Zee5, EROS) போன்ற பலமான இந்திய நிறுவனங்களுக்குப் போட்டியாக அமெரிக்க நிறுவனங்களான ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் மட்டுமல்லாமல், டிஸ்னியும், ஆப்பிளும்கூட ஓ.டி.டி போட்டியில் குதித்திருக்கின்றன. இது எவ்வளவு தூரம் ஓ.டி.டி சந்தை எதிர்காலத்தில் வளரவிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ஓ.டி.டி
ஓ.டி.டி

'மற்ற நாடுகளைவிட இந்தியாவில் ஓ.டி.டி வாய்ப்பு அதிகமாக இருக்கும்' என்று கூறுகிறார்கள். அதற்குக் காரணம், இந்திய மக்கள்தொகையில் 65%-க்கு அதிகமானவர்கள் 35 வயதுக்குக் குறைவாக இருப்பது.

இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் ஓ.டி.டி வாய்ப்புகளைக் கையகப்படுத்துவதே வெளிநாட்டு நிறுவனங்களின் நோக்கமாக இருக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ் முதலாவது காலாண்டில் 16 மில்லியன் புதிய பயனாளர்களைப் பெற்றிருக்கிறது. அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், ஜீ5 ஆகியவைகூட பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கின்றன.

தியேட்டர் மூடப்பட்டிருப்பது, ஐ.பி.எல் தடைப்பட்டிருப்பது, மக்களுக்கு அதிகமான ஓய்வு நேரம் கிடைத்தது ஆகியவை வேகமான வளர்ச்சிக்குக் காரணிகளாகப் பார்க்கப் படுகின்றன. தவிர, ஓ.டி.டி மிக வேகமாக வளர்வதற்கு இந்திய மக்கள் குறிப்பாக, இளைஞர்கள் ஸ்மார்ட்போன் பாவனையாளர்களாக மாறுவதும் காரணம், ஜியோ போன்றவற்றின் வருகைக்குப் பின்னர் டேட்டா கட்டணங்கள் குறைந்ததும் சாதகமான காரணியாகப் பார்க்கப்படுகிறது.

'இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில், டிஜிட்டல் கன்டென்ட்டுகளின் பாவனையும், தேவையும் எதிர்வரும் ஆண்டுகளில் மிக அதிக வளர்ச்சியைத் தரும்' என்று கூறுகிறது கே.பி.எம்.ஜி-ன் (KPMG) ஆய்வு.

'டிஜிட்டல் வளர்ச்சி ஓ.டி.டி-யை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும்' என்று கூறுகிறார்கள். அதாவது, ஓ.டி.டி-யின் பாவனை ஸ்மார்ட்போன்களிலிருந்து பெரிய தொலைக்காட்சித் திரையை நோக்கி நகரும். மொபைல் நிறுவனங்களைப்போல, ஓ.டி.டி-யிலும் அதிக போட்டி இருப்பதால், பயனாளர்களுக்கு நிறையவே அனுகூலங்கள் கிடைக்கும். மாதாந்தரக் கட்டணங்கள் பெருமளவில் குறையவும் வாய்ப்பிருக்கிறது.

ஓ.டி.டி
ஓ.டி.டி

சரி, ஓ.டி.டி என்றால்...? ஓ.டி.டி-க்கு என்ன அவசியம்? ஓ.டி.டி-யால் பின்னடைவைச் சந்திக்குமா தியேட்டர்கள்? ஓ.டி.டி வருமானம் எவ்வளவு? - இந்தக் கேள்விகளுக்கு விடைகாணும் முழுமையான சிறப்புக் கட்டுரையை நாணயம் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > வளர்ந்துவரும் ஓ.டி.டி தொழில்நுட்பம்! - சினிமா பயணிக்கும் புதிய பாதை! https://bit.ly/2MKCkyx

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு