Published:Updated:

Google AR ஹெட்செட்: Apple மற்றும் Meta -வுடன் போட்டிபோடுமா?

VR மாற்றும் AR டெக்னாலஜி

AR மற்றும் VR சாதனங்களில் தயாரிப்பில் Meta நிறுவதைப்போலவே கூகுள் நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கில் செலவிடுகிறது.

Google AR ஹெட்செட்: Apple மற்றும் Meta -வுடன் போட்டிபோடுமா?

AR மற்றும் VR சாதனங்களில் தயாரிப்பில் Meta நிறுவதைப்போலவே கூகுள் நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கில் செலவிடுகிறது.

Published:Updated:
VR மாற்றும் AR டெக்னாலஜி

ஆக்மென்டட் ரியாலிட்டி என்னும் AR ஹெட்செட் என்பது கண்களில் காணும் புறசூழல் காட்சியையும் அதே சமயம் டிஜிட்டல் டிஸ்பிலே போன்ற கட்சியையும் ஒரே சமயத்தில் காண முடியும். VR சாதனங்களில் இருக்கும் டெக்னாலஜியைப் போல கிராபிக்ஸ் உலகத்தையும் நம் கண்களில் காணும் புற உலகையும் இணைக்கும் டெக்னாலஜிதான் ஆக்மென்டட் ரியாலிட்டி என்னும் AR. Meta மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஏற்கனவே இந்த AR சாதனைகளை உருவாக்கும் வேளைகளில் ஈடுபட்டுள்ளன. அதைத்தொடர்ந்து தற்போது கூகுள் நிறுவனமும் அதற்குப் போட்டியாக AR சாதனங்கள் உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. AR சாதனங்கள் உருவாக்கும் இந்த திட்டத்திற்கு கூகுள் ஐரிஸ் (Iris) என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொபைலில் AR டெக்னாலஜி
மொபைலில் AR டெக்னாலஜி

கூகிள் இதன் முன்மாதிரியை ஏற்கனவே சான் பிரான்சிஸ்க்கோவில் உருவாக்கிவிட்டது. கேமராவின் மூலம் வெளிவரும் க்ராபிக்ஸையும் அதே சமயம் நேரடி காணொளியையும் இணைத்த முதல் ஆக்மென்டட் ரியாலிட்டி இந்த ஐரிஸ் தான். மேலும் ஆப்பிள் நிறுவனம் தன் AR ஹெட்செட்டை இந்த ஆண்டு வெளியிடும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இதன் விலை எப்படியும் 2000 டாலார்க்கும் அதிகமாக இருக்கும் என்று தகவல்கள் கசிகின்றன. கூகுள், ஆப்பிள் மற்றும் Meta நிறுவனங்கள் AR மற்றும் VR சாதனங்களை இணைக்கும் இப்போட்டியில் AR மற்றும் VR சாதனங்களின் டெக்னாலஜி உலகம் இன்னும் விரிவடையும். மேலும் AR மற்றும் VR சாதனங்களை இணைக்கும் இந்த சாதனம் டெக்னாலஜி உலகில் உயர்ந்த சாதனமாக இருக்கும் என்று எதிர்பாக்கப்டுகிறது.