Published:Updated:

2023-ல் அதிகரிக்கும் கார்களின் விலை... எவ்வளவு கூடும்?

மாருதி சுஸூகி பெலினோ
News
மாருதி சுஸூகி பெலினோ ( கோப்புப் படம் )

கார் தயாரிக்க பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள், பணவீக்கம், கார் பாகங்கள் விநியோகச் சங்கிலிகளில் உள்ள தடைகளால் மாருதி சுஸுகி, ஹூண்டாய், ஹோண்டா, கியா மற்றும் ஆடி போன்ற நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மீதான விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

2023-ல் அதிகரிக்கும் கார்களின் விலை... எவ்வளவு கூடும்?

கார் தயாரிக்க பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள், பணவீக்கம், கார் பாகங்கள் விநியோகச் சங்கிலிகளில் உள்ள தடைகளால் மாருதி சுஸுகி, ஹூண்டாய், ஹோண்டா, கியா மற்றும் ஆடி போன்ற நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மீதான விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

Published:Updated:
மாருதி சுஸூகி பெலினோ
News
மாருதி சுஸூகி பெலினோ ( கோப்புப் படம் )

இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரின் அடுத்த இலக்கு, கார் வாங்குவதாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் 2023-ல் கார் வாங்கும் சிந்தனையில் இருந்தால், அது குறித்து சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். சாதாரணமாக நீங்கள் காருக்கு கட்டும் கட்டணத்தைவிடக் கூடுதலாகச் செலுத்த வேண்டி வரலாம்.

 ஹூண்டாய் டூஸான்
ஹூண்டாய் டூஸான்
கோப்புப் படம்

`ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ளே அலப்பறையா’ எனக் நீங்கள் கேட்கலாம். கார் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள், பணவீக்கம், கார் பாகங்கள் விநியோகச் சங்கிலிகளில் உள்ள தடைகளால் மாருதி சுஸுகி, ஹூண்டாய், ஹோண்டா, கியா மற்றும் ஆடி போன்ற நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மீதான விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.

மாருதி சுஸுகியை பொறுத்தமட்டில் மூலப் பொருள்களின் விலையேற்றத்தால், நிறுவனம் சில மாடல்களுக்கு மட்டும் விலையை ஏற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா தனது அனைத்து தயாரிப்புகளுக்கும் 50,000 ரூபாய் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. வாகனங்களில் ஏற்படுத்தப்பட்ட அப்கிரேட்கள் காரணமாக விலையை அதிகரித்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் கூறியுள்ளது.

கார் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நிறுவனமான ஹூண்டாய், விலை அதிகரிப்பு குறித்துக் கூறியிருந்தாலும், எவ்வளவு விலை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கவில்லை. ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா 30,000 வரை விலை ஏற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.

ஹூண்டாய் வென்யூ N Line
ஹூண்டாய் வென்யூ N Line
கோப்புப் படம்

எம்.ஜி மோட்டார்கள் அதன் அனைத்து கார்களின் விலையையும் 90,000 வரை உயர்வை அறிவித்துள்ளது. ஜீப் எஸ்யூவி-க்கள் 2 முதல் 4 சதவிகிதம் வரை விலையை அதிகரிக்கும். வோல்க்ஸ்வாகென் மற்றும் ரெனால்ட் நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்துள்ளது. ஆனால், எவ்வளவு விலை என்பதைக் குறிப்பிடவில்லை. 

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி மற்றும் மெசிடெஸ் - பென்ஸ் 1.7 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. 

அப்புறம் என்ன… இந்த கையில காசு… அந்த கையில காரு... அவ்வளவுதான்!