யூடுயூப் என்னும் சமூக வலைதளத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கோலம் போடுவதில் ஆரம்பித்து விஞ்ஞானம் வரை உலகில் உள்ள அனைத்து துறைகளையும், நிகழ்வுகளையும் கன்டன்ட் ஆகக் கொடுக்கும் வாய்ப்பை, நிபுணர்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களுக்கும் கொடுக்கும் இந்தத் தளத்தில், அதிகமான பணமும் சம்பாதிக்க முடியும் என்பது ஹைலைட். எனவே, யூடியூப் சேனல் ஆரம்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
சரி, ஒரு யூடியூப் சேனலை எப்படி ஆரம்பிப்பது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS1. ’நாமும் யூடியூப் சேனல் ஆரம்பித்தால் என்ன?’ என்று யோசித்துக்கொண்டே இருக்கும் நேரத்தில், சேனலுக்காக நீங்கள் கையில் எடுக்கவிருக்கும் ஏரியா என்ன, அதில் என்னென்ன தலைப்புகளில் எல்லாம் வீடியோக்கள் அப்லோடு செய்யலாம் என்று கிரவுண்ட்வொர்க் செய்துவிட்டு, சேனலை தாமதிக்காமல் ஆரம்பித்து விடுங்கள்.
2. யூடியூப் சேனல் ஆரம்பிப்பதற்கு, youtube.comக்கு சென்று, அந்த பக்கத்தில் வலது மூலையில் உள்ள ’உள்நுழை’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும். இப்போது, உங்கள் சேனலை நீங்கள் இணைக்க விரும்பும் Google கணக்கை (ஏற்கெனவே Gmail அக்கவுன்ட் இருப்பவர்கள்) பயன்படுத்தி உள்நுழையவும்.

3. Create your channel என்ற பகுதியை கிளிக் செய்யவும். தனிப்பட்ட சேனலா, வணிக சேனலா என அதற்கு ஏற்றார்போல தகவல்கள், பெயர், புகைப்படம் மற்றும் உங்கள் சேனல் எதற்கானது என்பதற்கான விவரங்கள் என அனைத்தையும் கொடுத்துவிட்டால், உங்களுக்கான சேனல் உருவாகிவிடும்.
4. ஏற்கெனவே Google கணக்கு இல்லாதவர்கள், அதை கிரியேட் செய்துவிட்டு YouTube சேனலை தொடங்கவும். அதற்கு, YouTube.com-ல் உள்நுழை/Sign in என்பதை க்ளிக் செய்யவும். இப்போது, Google கணக்கை உருவாக்குவதற்கான விருப்பத்தைத் (create your google account ) தேர்ந்தெடுக்கவும். உங்கள் Google கணக்கை உருவாக்க அடுத்தடுத்த படிகளை பின்பற்றி தனிப்பட்ட தகவல்ளை பகிரவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
5. சேனல் உருவாக்குவதை விட அதனை சரியான முறையில் கையாள்வது அவசியம். நீங்கள் செய்யும் முதல் வீடியோவுக்குக் கொடுக்கும் ஆர்வத்தை தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். மேலும், ஆரம்பத்தில் சில வீடியோக்கள் அதிகம் வியூவ்ஸ் கொடுக்கவில்லை என்றாலும் தொடர் முயற்சி அவசியம்.
6. ஆடியோ மற்றும் வீடியோ போன்றவற்றுக்கு அதற்குரிய தொழில்நுட்ப சாதனங்களை சிறப்பாகப் பயன்படுத்தும்போது வீடியோவும் சிறப்பாக அமையும்.

7. YouTube Analytics உதவியுடன், எந்த மாதிரியான வீடியோக்களை மக்கள் விரும்புகின்றனர், உங்களுக்கான பார்வையாளர்கள் யார் என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப வீடியோக்களை பதிவிடலாம்.
8. உங்கள் யூடியூப் பேனரை வித்தியாசமாகவும், மக்களை ஈர்க்கும் வகையிலும் அமைக்கவும்.
வாழ்த்துகள்!