Published:Updated:

``யானைன்னு நினைச்சீங்களா? சிங்கம்லே!" - வாவேவின் எழுச்சி

கார்க்கிபவா

வாவே மொபைல் மீதான தடை நீங்கியது. இருந்தாலும் அந்த பிராண்டு மீது விழுந்த களங்கம் நீங்க பல காலம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

வாவே
வாவே ( வாவே )

வாவே நிறுவனத்துக்கு கடந்த சில மாதங்களாக இறங்குமுகம்தான். அமெரிக்கா வாவே மொபைல்களுக்குத் தடை விதிக்க, அதைத் தொடர்ந்து வாவே மொபைல்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட்டு கிடைக்காது என்ற செய்தி பரவியது. எல்லாவற்றையும் சரி செய்துவிடுவோம் என வாவே நம்பிக்கை தெரிவித்தாலும் பிரச்னை தீரவில்லை. பின்னர், வாவே மொபைல் மீதான தடை நீங்கியது. இருந்தாலும் அந்த பிராண்டு மீது விழுந்த களங்கம் நீங்க பல காலம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ``நாங்க யானை இல்லை... சிங்கம்" என நிரூபித்திருக்கிறது வாவே.

லியாங்க்
லியாங்க்

ஆம், அதன் விற்பனை 23 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 2018-ம் ஆண்டு முதல் 6 மாதங்களில் விற்ற மொபைல்களைவிட 2019-ம் ஆண்டில் அதே காலகட்டத்தில் 23 சதவிகிதம் அதிக மொபைல்களை விற்றிருக்கிறது வாவே. மொத்தத்தில் 58 பில்லியன் டாலருக்கு மொபைல்களை விற்று சாதனை படைத்திருக்கிறது வாவே. தடை நிச்சயம் அவர்கள் வளர்ச்சியைப் பாதித்திருப்பதாக சொல்லியிருக்கிறார் வாவே நிறுவனத்தின் சேர்மன் லியாங்க்.

அடுத்த அரையாண்டிலும் அதற்கடுத்த ஆண்டிலும் இந்தத் தடையின் பாதிப்புகள் இருக்கக்கூடும் என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால், அவற்றையெல்லாம் வாவே சமாளித்துவிடும் என்பது இந்த சேல்ஸ் ரிப்போர்ட் மூலம் தெரிகிறது. வாடிக்கையாளர்களைவிட கூகுள் போன்ற பார்ட்னர்களுடனான பிரச்னைதான் வாவேவை அதிகம் பாதித்திருக்கிறது.

``யானைன்னு நினைச்சீங்களா? சிங்கம்லே!" - வாவேவின் எழுச்சி

வாவே தனக்கென சொந்தமாக ஓர் இயங்குதளத்தை உருவாக்கி வருகிறது. ஆனால், கூகுளின் ஆண்ட்ராய்டு சேவை கிடைத்தால் தொடர்ந்து அதையே பயன்படுத்த விரும்புவதாக அறிவித்திருக்கிறது வாவே. அமெரிக்கா விதித்த தடையால் வாவேவுக்கு அமெரிக்காவைவிட மற்ற நாடுகளில்தான் விற்பனை சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குக் காரணம் கூகுளின் சேவை கிடைக்காமல் போகுமோ என்ற அச்சம்தான்.