Published:Updated:

இரண்டே நாள்களில் 500 கோடி ரூபாய் வசூல்… இது, ஒன் ப்ளஸ்ஸின் ஓப்பனிங்!

இவற்றின் விற்பனை, இதுவரை இல்லாத அளவு அதிகமாக இருந்ததாக அமேசான் தெரிவித்துள்ளது.

 OnePlus TV and OnePlus 7T
OnePlus TV and OnePlus 7T

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் என இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில், தற்போது சிறப்பு விற்பனை நடந்துவருகிறது. கடந்த 29-ம் தேதி முதல், வரும் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்த விற்பனையில், பல பொருள்களின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

Amazon great Indian festival
Amazon great Indian festival

குறிப்பாக, எலெக்ட்ரானிக் சாதனங்கள், ஸ்மார்ட்போன்கள், டி.வி -க்கள் என அனைத்தின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற விற்பனையின்போது குறிப்பிட்ட நிறுவனங்கள் வசூலை வாரிக் குவிக்கும். அதுபோல தற்போது அமேசானில் நடந்துவரும் கிரேட் இண்டியன் ஃபெஸ்ட்டிவலில் ஒன்ப்ளஸ் நிறுவனம் வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. விற்பனை தொடங்கப்பட்டு இரண்டு நாள்கள் மட்டுமே ஆன நிலையில், சுமார் 500 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக அறிவித்திருக்கிறது, ஒன்ப்ளஸ்.

ஒன்ப்ளஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் போனான 7T பிரீமியம் செக்மென்ட்டிலும் OnePlus TV 55Q1 டி.வி செக்மென்ட்டிலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக விற்பனையாகியிருப்பதாக அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vikas Agarwal , General Manager,OnePlus India.
Vikas Agarwal , General Manager,OnePlus India.

“ ஒன்ப்ளஸ் 7T மற்றும் OnePlus TV 55Q1 ஆகியவை சிறந்த அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்குத் தரும் முயற்சியில் உருவானவை. இந்தியா எப்போதும் எங்களின் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றாக இருந்துவருகிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த அனுபவத்தை வழங்க, தொடர்ந்து முயற்சி செய்வோம்” என ஒன்ப்ளஸ் இந்தியாவின் பொது மேலாளர் விகாஸ் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.