Published:Updated:

``இந்திய சந்தை எங்களுக்கு முக்கியமானது" -குறிவைக்கும் கொரிய நிறுவனத்தின் புதிய எம்.டி

ஹாங் ஜூ ஜியோன்

தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எல் ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 1997 -ம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் தனது சேவையை தொடங்கியது.

எல் ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் வீட்டு பொழுதுபோக்கு பிரிவில் தொலைக்காட்சிகள், ஆடியோ சிஸ்டம்கள், டிவிடிகள், மானிட்டர்கள், பாதுகாப்பு கேமராக்கள், ஹோட்டல் தொலைக்காட்சிகள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் ஆப்டிகல் டிஸ்க் டிரைவ்கள் போன்ற தயாரிப்புகளை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக இந்தியாவில் உள்ளது.

தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எல் ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 1997 -ம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் தனது சேவையை தொடங்கியது.

LG
LG

தற்போது, இந்தியாவின் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஹாங் ஜூ ஜியோன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஈராக், லெபனான், சிரியாவில் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதற்கு முன்பு இப்பதவியை வகித்த யங் லாக் கிம் நிர்வாக துணைத் தலைவராகவும், கொரியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார். 

தனது நியமனம் குறித்து ஹாங் ஜூ ஜியோன் கருத்து தெரிவிக்கையில், “சந்தையில் புதிய சவால்கள் நிறைந்துள்ளன. அத்துடன் மில்லியன் கணக்கான நுகர்வோர்களுக்கு சேவை செய்வதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக நினைக்கிறன்..

``இந்திய சந்தை எங்களுக்கு முக்கியமானது"
-குறிவைக்கும் கொரிய நிறுவனத்தின் புதிய எம்.டி

இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடு, அதிக மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய சந்தை, இந்திய சந்தை சுவாரஸ்யமானது. அதை மேலும் வலுப்படுத்துவதே எங்கள் நோக்கம். எனவே, நுகர்வோரின் நுண்ணறிவு அடிப்படையில், உருவாக்கப்பட்ட போர்ட்ஃபோலியோவை அறிமுகப்படுத்துவதன் மூலம், எங்கள் வணிக தளத்தை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.