ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டார்ஸேவின் (Jack Dorsey) முதல் ட்வீட் 2.9 மில்லியன் அமெரிக்கன் டாலர்களுக்கு விற்பனையாகியிருக்கிறது. இந்திய மதிப்பில் இது சுமார் 20 கோடி.
கடந்த சில மாதங்களாக இணைய உலகில் திடீரென வரவேற்பைப் பெற்றிருப்பவை நான்-ஃபன்ஜிபிள் டோக்கன் (Non- Fungible Token). NFT எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இவைதான் இணைய உலகின் தற்போதைய வைரல். டிஜிட்டலாக உருவாக்கப்படும் புகைப்படம், ஓவியம், GIF, குட்டி வீடியோ என எல்லாமே NFT-க்கள் தான். பிரபலமான ஓவியர் டிஜிட்டலாக ஓர் ஓவியத்தை வரைகிறார் என வைத்துக் கொள்வோம். அதைப் போல பல நகல்களை டிஜிட்டலாக நம்மால் நொடியில் உருவாக்கிவிட முடியும். ஆனால், டிஜிட்டலாக வரையப்பட்ட அசல் ஒன்று இருக்குமல்லவா, அதுதான் NFT. மோனா லிசா ஓவியத்தைப் போலப் பல பிரதிகள் இருந்தாலும், அசல் மோனா லிசா ஓவியத்திற்கு இருக்கும் மதிப்பு தனிதானே! அது போலத்தான் இந்த டிஜிட்டல் NFT-க்களும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
2006-ல் ட்விட்டரின் நிறுவனர்களுள் ஒருவரான ஜாக் டார்ஸே தன் முதல் ட்வீட்டை அந்தத் தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த ட்வீட் NFT வடிவத்தில் சில வாரங்களுக்கு முன் NFT விற்பனைத் தளம் ஒன்றில் ஏலத்திற்கு வந்தது. அதனை தற்போது எத்தர் (Ether) கிரிப்டோ கரன்ஸி கொண்டு மலேசியாவைச் சேர்ந்த சினா எஸ்டவி (Sina Estavi) என்பவர் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியிருக்கிறார். இவர் பிரிட்ஜ் ஓரக்கிள் என்ற பிளாக் செயின் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.
இந்த ஏலத்தின் மூலம் கிடைத்திருக்கும் தொகையை ஆப்பிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக அளிக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார் ஜாக் டார்ஸே.
இதேபோல் கடந்த வாரம் மைக் வின்கேல்மன் என்ற டிஜிட்டல் ஆர்டிஸ்ட் உருவாக்கிய டிஜிட்டல் புகைப்படம் ஒன்று இந்திய மதிப்பில் 500 கோடி ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.