Published:Updated:

ஐரோப்பாவிலிருந்து வெளியேறும் ஃபேஸ்புக்? எச்சரிக்கைக்கு காரணம் என்ன?

Facebook

ஐரோப்பாவில் உள்ள குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட தரவுகளை போதுமான பாதுகாப்பு இல்லாமல் சேகரிக்கும் உரிமையை அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்கியதாக கூறி, 2020-ல் இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தால் (CJEU) ரத்து செய்யப்பட்டது.

ஐரோப்பாவிலிருந்து வெளியேறும் ஃபேஸ்புக்? எச்சரிக்கைக்கு காரணம் என்ன?

ஐரோப்பாவில் உள்ள குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட தரவுகளை போதுமான பாதுகாப்பு இல்லாமல் சேகரிக்கும் உரிமையை அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்கியதாக கூறி, 2020-ல் இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தால் (CJEU) ரத்து செய்யப்பட்டது.

Published:Updated:
Facebook

ஐரோப்பாவின் தரவு விதிமுறைகள் காரணமாக, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐரோப்பாவில் இயக்குவதை நிறுத்த நேரிடும் என மெட்டா நிறுவனம் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனுக்கு (SEC) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவின் தரவை அமெரிக்காவில் உள்ள சேவையகங்களுக்கு அனுப்புவதைத் தடுக்கும் விதமாக ஐரோப்பிய தரவு விதிமுறைகள் உள்ளதாக மெட்டா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஃபேஸ்புக் மெட்டா
ஃபேஸ்புக் மெட்டா

விளம்பரங்கள் மூலம் வருவாயில் 98 சதவிகித்தை ஈட்டும் மெட்டா நிறுவனத்திற்கு, இது விளம்பரங்களைக் குறைக்கும் செயலாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. 2016-ல் தரவு பரிமாற்றம் குறித்த ஒருமித்த கருத்தோடு ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு தரவுகளை மாற்றி கொள்ள தனியுரிமை கேடயம் என்ற ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஐரோப்பாவில் உள்ள குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட தரவுகளைப் போதுமான பாதுகாப்பு இல்லாமல் சேகரிக்கும் உரிமையை அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்கியதாக கூறி, 2020-ல் இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தால் (CJEU) ரத்து செய்யப்பட்டது.

Instagram
Instagram
Photo by Brett Jordan from Pexels

Schrems II என அழைக்கப்படும் தீர்ப்பு, இணையதளத்தை நம்பி இருக்கும் கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட ஒவ்வொரு அமெரிக்க நிறுவனத்தையும் பாதிக்கிறது என குறிப்பிட்டுள்ளது. எனவே, ஃபேஸ்புக் போன்ற ஆயிரக்கணக்கான நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர்கள், நடைமுறை அணுகுமுறையை கையாள வேண்டும் என மெட்டா நிறுவனத்தின் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.