Published:Updated:

India-China Face-Off: `ஷாவ்மி விற்பனையில் பாதிப்பா...' -என்ன சொல்கிறது Mi India?

Xiaomi
Xiaomi ( Chinadaily.cn.com )

`இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மற்ற ஸ்மார்ட்போன்களை ஒப்பிடும் போது, ஷாவ்மி நிறுவனம் இந்தியர்களுக்கானது’ என்கிறார், இந்தியப் பிரிவின் நிர்வாக இருக்குநர் மனு குமார் ஜெயின்.

இந்திய சீன எல்லைப் பிரச்னை நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. லடாக் எல்லைப் பகுதியில் இரு நாட்டு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து, பதற்றத்தைக் குறைக்க இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் தொடங்கி அமைச்சர்கள் மட்டம் வரை பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துவருகிறது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

மறுபுறம், இந்தியாவில் சீனாவின் பொருள்களைத் தவிர்க்க வேண்டும் என்ற கோஷமும் வலுபெற்றிருக்கிறது. இதனால் சீனப் பொருளாதாரம் பெருமளவில் பின்னடவைச் சந்திக்கும் என்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் காணக்கிடைக்கின்றன. சீனத் தயாரிப்புகளுக்கும் பெரும் மார்க்கெட் இந்தியாவில் இருப்பது மறுப்பதற்கு இல்லை. அதற்கு, விலை ஒரு முக்கியக் காரணம். இந்தியாவில் இருக்கும் முன்னணி மொபைல் நிறுவனங்கள் எல்லாம் சீன நிறுவனாங்களே.

இந்தியாவில், கடந்த காலங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிறுவனம், ஷாவ்மி. செல்போன் விற்பனையில் தொடங்கிய இந்த நிறுவனத்தின் வளர்ச்சி, டி.வி, சவுண்ட் பார் என இந்தியர்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாகவே செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில், சீனப் பொருள்களுக்கு எதிரான பிரசாரம் இந்தியாவில் ஷாவ்மி நிறுவனத்தின் விற்பனையைப் பெருமளவு பாதிக்காது என்கிறார், அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் நிர்வாக இருக்குநர் மனு குமார் ஜெயின்.

மனு குமார் ஜெயின்
மனு குமார் ஜெயின்
facebook

சீனப் பொருள்களுக்கு எதிராக நடக்கும் பிரசாரம் தொடர்பாக CNBC-TV18 செய்தி நிறுவனத்துக்குப் பேசிய மனுகுமார், ``இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மற்ற ஸ்மார்ட்போன்களை ஒப்பிடும் போது ஷாவ்மி நிறுவனம் இந்தியர்களுக்கானது என்பேன். கடந்த 6 வருடங்களில், எங்கள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளது. உள்ளூர்காரர்கள் 50,000 -க்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளோம்.

ஷாவ்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் எங்கள் பிராண்டின் பிற தயாரிப்புகள் பெரும்பாலும் இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த தயாரிப்புகளுக்குத் தேவையான 65 சதவிகித மூலப்பொருள்களும் உள்நாட்டிலேதான் தயாரிக்கப்படுகின்றன. சீனாவிலே 100% தயாரிக்கப்பட்ட செல்போன்களை இந்தியாவில் விற்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. சில நிறுவனங்கள் சீனாவிலிருந்து போன்களை வாங்கி, இந்தியாவில் வேறு பிராண்டு பெயரில் விற்பனை செய்வார்கள். அந்த வகையில் நாங்கள் அவர்களைக் காட்டிலும் இந்திய நிறுவனம்தானே” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், ``சமூக வலைதளங்கள் மக்கள் பலரும் சீனாவின் பொருள்களுக்கு எதிரான கோஷங்களைத் தெரிவிக்கிறார்கள். ஆனால், நிஜத்தில் அதைக் கருத்தில் கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன். இந்தியாவில் அதிகம் வரிப்பணம் கட்டும் செல்போன் நிறுவனமாக ஷாவ்மி இருக்கிறது. அதிக அளவில் வேலைவாய்ப்புகளையும் இந்தியர்களுக்கு வழங்குகிறது.

ஷாவ்மி MI 10
ஷாவ்மி MI 10

சமீபத்தில் நாங்கள் லாஞ்ச் செய்த Redmi Earbuds ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்களைப் பெற்றிருக்கிறது. சீனப் பொருள்களை மக்கள் தவிர்ப்பார்கள் என்பதில் உண்மையில்லை என்பதற்கு இதுவே சான்று. அதிக விற்பனை செய்யும் நிறுவனங்கள், இந்த எண்ணிக்கையை ஒரு காலாண்டில் அடைகிறார்கள். ஆனால், எங்களுக்கு ஒரே வாரத்தில் நடந்திருக்கிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு