Published:Updated:

இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் இனி பணம் அனுப்பலாம், பெறலாம்!

டிஜிட்டல் சேவை
பிரீமியம் ஸ்டோரி
News
டிஜிட்டல் சேவை

டிஜிட்டல் சேவை

டிஜிட்டல் முறையில் ஆஃப்லைனில் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதிக்கு பரிசோதனை முயற்சியில் ஆர்.பி.ஐ அனுமதி அளித்துள்ளது. தற்போது டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற இன்டர்நெட் இணைப்பு அவசியம். ஆனால், இணையதள வசதி இல்லாத இடங்களில் டிஜிட்டல் சேவை நடைபெறுவது சாத்தியம் இல்லை. பின்தங்கிய பல கிராமங்களில் தற்போதும் இன்டர்நெட் சேவைகள் கிடைக்கப் பெறாத நிலை உள்ளது. இந்த வசதி கிடைக்காத பிற மக்களுக்கும் டிஜிட்டல் வசதி கிடைக்க உதவிடும் வகையில் இந்த வசதியை ஆர்.பி.ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்டர்நெட் இணைப்பு இல்லாமல்
இனி பணம் அனுப்பலாம், பெறலாம்!

இதன்மூலம் ஒருமுறை அதிகபட்சமாக ரூ.200 வரையும் ஒரு மாதத்துக்கு ரூ.2,000 வரையும் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த வசதியைப் பெற இந்தப் பரிவர்த்தனையில் ஈடுபடும் இருவரும் நேரடியாகச் சந்தித்திருப்பது அவசியம். கடன் அட்டை, வாலட், மொபைல் செயலிகள் போன்ற வகைகளில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.

இந்த வசதி வேண்டும் எனக் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தரப்படும். இந்த வகை பரிவர்த்தனைகளுக்கு ஓ.டி.பி, பின் நம்பர் செலுத்துவது போன்ற எந்த சரிபார்க்கும் வழக்கமும் இருக்காது. பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்ட பிறகு எஸ்.எம்.எஸ் மூலம் பணம் செலுத்துபவருக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

இது பற்றிய பரிசோதனைகளை மத்திய ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் 2020-ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. அந்தச் சோதனைகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது இந்த சேவை வழங்கும் முயற்சிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் உள்ள அனைவருக்கும் டிஜிட்டல் வசதி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் டிஜிட்டல் துறையில் அதிக அளவு முன்னேற்றம் ஏற்படும்!