Published:Updated:

ஊரடங்கினால் உயர்ந்த நெட்பிளிக்ஸ் பங்குகள்.. டிஸ்னியின் சந்தை மூலதன மதிப்பையும் முந்தியது!

நெட்பிளிக்ஸின் ஒரு பங்கின் விலை 426.75 டாலராக இருக்கும் நிலையில் அதன் மொத்த சந்தை மூலதன மதிப்பு 187.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பரவல் காரணமாக, உலகம் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமலில் இருப்பது பல துறைகளுக்குப் பின்னடைவாக இருக்கிறது. ஆனால், ஆன்லைன் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிலவற்றுக்கு, இந்த ஊரடங்கு சற்று வளர்ச்சியைக் கொடுத்துள்ளது. அந்த வகையில் பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான நெட்பிளிக்ஸ் (Netflix) பங்குச்சந்தையில் 3.2 சதவிகிதம் ஏற்றத்தைக் கண்டுள்ளது. ஊரடங்கால் டிஸ்னியின் மற்ற சேவைகள் பாதிக்கப்பட்ட காரணத்தினால் 2.5 சதவிகிதம் பங்குச் சந்தையில் இறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், டிஸ்னியின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி பிளஸ்ஸும் வீழ்ச்சி கண்டுள்ளது.

நெட்பிளிக்ஸ்
நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸின் ஒரு பங்கின் விலை 426.75 டாலராக இருக்கும் நிலையில், அதன் மொத்த சந்தை மூலதன மதிப்பு 187.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் டிஸ்னியின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 186.6 பில்லியன் டாலராக உள்ளது.

ஊரடங்கினால் வீட்டுக்குள்ளேயே வேறுவிதமான பொழுதுபோக்கை நோக்கி மக்கள் நகர்வதால் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் வளர்ச்சி கண்டுவருகின்றன. இதற்கு முன்னர் 2018, ஜூன் 9-ல் தான் அதிகபட்சமாக நெட்பிளிக்ஸ் ஒரு பங்கின் விலை 418.97 டாலராக இருந்தது. அதன் பிறகு தற்போதுதான் இந்த அளவு மதிப்பை எட்டியுள்ளது.

`சிறுநீரக பாதிப்பு; சீரற்ற இதயத் துடிப்பு’-  உடல் உறுப்புகளைச் செயலிழக்கச் செய்யும் கொரோனா?
Disney+
Disney+

பிவோட்டல் ரிசர்ச் குரூப் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளதன்படி இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் நெட்பிளிக்ஸ் 8.45 புதிய மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றிருக்கும். ஏப்ரல் 2019-ன்படி நெட்பிளிக்ஸ் 148 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த நெய்ல்சன் டேட்டா (Neilsen Data) என்ற நிறுவனம் தெரிவித்துள்ளதன்படி அமெரிக்காவில் இணையதளம் மூலம் காணொலிகள் பார்ப்பது சென்ற வருடம் இதே 4 வார காலத்தில் இருந்ததை விடவும் இந்த ஆண்டு 109 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு