Published:Updated:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு... குற்றாலம் அருகே குக்கிராமத்தில் அசத்தும் ஐ.டி. நிறுவனம்!

ஐ.டி. நிறுவனம்!
ஐ.டி. நிறுவனம்!

அதனால் அதன் வளர்ச்சி வேகத்துக்கேற்ப தற்போது அந்த நிறுவனத்தின் வருவாய் 500 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3,500-க்குமேல்) அளவுக்கு இருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.

பெரிய நகரங்களில் மட்டுமே சாஃப்ட்வேர் நிறுவனங்கள் செயல்படுவதால், சிறுநகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுவது எட்டாக்கனியாகவே இருந்துவந்தது. அந்த நிலை மெல்ல மாறி, சர்வதேச தரத்துடன்கூடிய சாஃப்ட்வேர் நிறுவனங்கள், சிறுநகரங்களை நோக்கிச் செல்லத் தொடங்கியிருக்கின்றன. விரிவாகபடிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2oWfs6s

அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் ஜோஹோ டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சென்னையைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் பழைய குற்றாலம் அருகே உள்ள மத்தளம்பாறை என்ற குக்கிராமத்தில் கிளையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருவது பலருக்கும் தெரியாத தகவல்.

அமெரிக்காவின் பே ஏரியாவில் (Bay Area) ஜோஹோ நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது. 25 வருடங்களுக்குமுன்பு இந்த நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்ரீதர் வேம்பு, திறமையான குழுக்களின் உதவியுடன் புதிய மென்பொருள்களை உருவாக்கி, இந்த நிறுவனத்தைச் சர்வதேச அளவில் பிரபலமான மென்பொருள் நிறுவனமாக மாற்றியிருக்கிறார். கடந்த 2010-ம் ஆண்டு ஜோஹோ நிறுவனத்தின் வருவாய் 100 மில்லியன் டாலரை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.700 கோடிக்குமேல்) கடந்து விட்டதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்திருக்கிறார். அதனால் அதன் வளர்ச்சி வேகத்துக்கேற்ப தற்போது அந்த நிறுவனத்தின் வருவாய் 500 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3,500-க்குமேல்) அளவுக்கு இருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.

நான் இலஞ்சி பள்ளியில் படித்தபோது ஜோஹோ நிறுவனத்துக்கு, கேம்பஸ் இண்டர் வியூவில் தேர்வானேன். ஊக்கத் தொகையுடன்கூடிய பயிற்சியை ஓராண்டு நிறைவுசெய்தேன்

சாஃப்ட்வேர் நிறுவனம் என்றாலே நம் நாட்டில் பெங்களூரிலோ அல்லது மும்பையிலோ ஓர் அலுவலகம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால், ஜோஹோ நிறுவனமோ சென்னையில் இருந்தபடியே உலகம் முழுக்க சேவை செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறது. சென்னை போன்ற நெரிசல்மிக்க நகரத்துடன் மட்டுமே நின்று விடாமல், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஒரு கிளையைத் தொடங்கி நடத்தி வருகிறது ஜோஹோ நிறுவனம். ஜோஹோவின் தென்காசி கிளை அலுவலகத்தில் 300 பேர் தனித்தனிக் குழுக்களாக அமர்ந்து மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்குள்ளேயே குழந்தைகளைப் பராமரிக்கும் அறை, மருத்துவச் சிகிச்சைக்கான வசதி, ஓய்வெடுக்கும் வசதி, விளையாட்டுகளுக்கான வசதி என அனைத்து அம்சங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளது.

"இந்த வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலமாகத் தேர்வுசெய்து அவர்களுக்கு எங்களுடைய ஜோஹோ யுனிவர் சிட்டியில் பயிற்சி அளிக்கிறோம். பயிற்சி முடிந்தபின் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு பணி அளிக்கிறோம்" என்கிறார் ஜோஹோ நெல்லைக் கிளையின் புராடக்ட் ஹெட் பொறுப்பில் இருக்கும் ரகீப் முகமது.

ஐ.டி. நிறுவனம்!
ஐ.டி. நிறுவனம்!

இந்த நிறுவனத்தில் பணியாற்றும் சாமுவேல் என்பவர், ''நான் இலஞ்சி பள்ளியில் படித்தபோது ஜோஹோ நிறுவனத்துக்கு, கேம்பஸ் இண்டர் வியூவில் தேர்வானேன். ஊக்கத் தொகையுடன்கூடிய பயிற்சியை ஓராண்டு நிறைவுசெய்தேன். அதன்பிறகு அலுவலகத்தில் நடந்த குழுக்களுக்கான நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று பணியாளராகச் சேர்ந்துள்ளேன். சொந்த ஊருக்கு அருகிலேயே சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்திருப்ப தால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்கிறார்.

> பொதிகை மலையில் உள்ள மூலிகைகளை வருடிவரும் குளிர்ச்சியான தென்றல் காற்று எப்போதும் வீசிக்கொண்டிருப்பதால் நிறுவனத்தின் உள்ளே நுழையும்போதே புத்துணர்வு ஏற்படுகிறது. ஏழு ஏக்கர் பரப்பளவில் மரம், செடிகளுடன் பச்சைப்பசேல் எனக் காட்சி அளிக்கும் இந்த கேம்பஸ் குறித்து நாணயம் விகடன் இதழில் வெளிவந்துள்ள சிறப்புப் பார்வையை முழுமையாக வாசிக்க > பொதிகை மலையின் மடியில்...கிராமத்தை நோக்கித் திரும்பிய ஐ.டி நிறுவனம்! https://www.vikatan.com/news/general-news/this-it-company-established-its-office-in-the-countryside

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |

பின் செல்ல