Published:Updated:

எஸ் பேங்கின் வீழ்ச்சி... ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியுடன் கைகோக்கும் போன்பே!

Phone pe | Yes Bank
Phone pe | Yes Bank ( LatestLY )

இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க பல வங்கிகளுடன் இணைந்து சேவை வழங்குவது போலான திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது போன்பே.

இந்தியாவின் பிரபலமான பணப்பரிவர்த்தனை செயலியான போன்பே (Phone pe) நிறுவனம் முன்னதாக எஸ் பேங்க் நிறுவனத்துடன் இணைந்து பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வந்தது. எஸ் பேங்கின் வீழ்ச்சி போன்பேவையும் பாதித்தது. இதனால் கடந்த வெள்ளி வரை போன்பே வாடிக்கையாளர்களால் பணப்பரிமாற்றம் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இதையடுத்து விரைவான செயல்பாட்டில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியுடன் இணைந்துள்ளது போன்பே.

கடந்த சனியன்று, ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனத்துடன் இணைந்ததைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள போன்பே நிறுவனர் சமீர் நிகம், இந்த பிரச்னையை விரைவில் தீர்க்க உதவியதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கும் நேஷனல் பேமனட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதனுடன் சனிக்கிழமை முதல் போன்பே செயலியில் சேவைகள் தடையில்லாமல் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

`எஸ் பேங்க்' வீழ்ந்த கதை! ஏன், எப்படி? #YesBank

போன்பே நிறுவனத்துக்கு ஏற்பட்ட இதேநிலை, எஸ் பேங்குடன் இணைந்து சேவை வழங்கி வந்த 15 நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்கப் பல வங்கிகளுடன் இணைந்து சேவை வழங்குவது போலான திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது போன்பே. எனவே, ஸ்டேட் பாங்குடன் இது தொடர்பான பேச்சு வார்த்தையைத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

போன்பே
போன்பே
entracker

இதேபோன்று மற்றொரு பணப்பரிவர்த்தனை நிறுவனமான பாரத்பே-யும் எஸ் பேங்கின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியுடன் இணைந்து சேவை வழங்குகிறது. அந்த நிறுவனமும் பல வங்கிகளுடன் இணைந்து பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்குவதற்காக ஸ்டேட் பேங்க் மற்றும் கோடக் மகேந்திரா வங்கியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு