Published:Updated:

`பணம் ராஜாதான்.. ஆனால் தொழில்நுட்பம் கடவுள்'- டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு உற்சாகம் காட்டும் ஆர்பிஐ

RBI
RBI

டிஜிட்டல் இந்தியாவாக மாறிக்கொண்டு இருக்கும் இந்தச் சூழலில் கைவழிப் பணப் பரிவர்த்தனையைச் சரிவர கணிக்க இயலாது. ஆனால், தொழில்நுட்ப பணப் பரிவர்த்தனைகளைத் துல்லியமாகக் கணிக்க முடியும்.

ரிசர்வ் வங்கியின் புதிய குறிக்கோள், ``பணம்தான் ராஜா, தொழில்நுட்பம்தான் கடவுள்" பணமதிப்பிழப்புக்கு பிறகு 3.5 லட்சம் கோடி கைவழிப் பணச் சுழற்சி (Notes in circulation - NIC) குறைந்துள்ளதாகவும், பயனாளர்களுக்கு வேகமாகவும் எளிதாகவும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஏற்படுத்திக் கொடுப்பதே எங்கள் குறிக்கோள்" என்றும் ஆர்.பி.ஐ (RBI) தெரிவித்துள்ளது.

UPI
UPI

டிஜிட்டல் இந்தியாவாக மாறிக்கொண்டு இருக்கும் இந்தச் சூழலில் கைவழிப் பணப் பரிவர்த்தனையை சரிவர கணிக்க இயலாது, ஆனால், தொழில்நுட்ப பணப் பரிவர்த்தனைகளைத் துல்லியமாகக் கணிக்க முடியும். அந்த வகையில் தற்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் 61% அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் மதிப்பும் அளவும் 19% அதிகரித்துள்ளது.

`அனைவரும் எளிதில் படிக்க... நாட்டிலே முதல்முறை!'- பொது நூலகங்களை டிஜிட்டல் மயமாக்கும் கர்நாடகா

2014 அக்டோபர் முதல் 2016 அக்டோபர் வரையான காலகட்டத்தில் கைவழி பணப்பரிவர்த்தனை 14% அதிகரித்தது. அந்தக் கணக்கை வைத்துப் பார்த்தால் 2019 அக்டோபரில் கைவழி பணப்பரிவர்த்தனை ரூபாய் 26,04,953 கோடி ரூபாயாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அது 22,31,090 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்திருப்பதால், 3.5 லட்சம கோடி கைவழி பணப்பரிவர்த்தனை குறைந்துள்ளது.

பதுக்கல் பணத்தைக் கண்டுபிடிக்கவும், குறைந்த அளவு பணப் பரிவர்த்தனைக்கு மக்கள் மாறவும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்ளவும் 2016-ல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது.

RBI
RBI

2015-16-ல் 12.1% சதவிகிதமாக இருந்த பணப்புழக்கம் 2017-18-ல் 10.7 சதவிகிதமாகவும், 2018-19-ல் 11.2 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. எளிதான டிஜிட்டல் வழிப் பணப்பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்ளும் போக்கு மக்களிடம் அதிகமாகி இருப்பதால் கைவழிப் பணப்பரிவர்த்தனை குறைய ஆரம்பித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. பெருகி வரும் டிஜிட்டல்பணப் பரிவர்த்தனை, கைவழிப்பணப் பரிவர்த்தனையிலிருந்து இந்தியா மாறுகிறது என்பதைக் காட்டுகிறது.

அடுத்த கட்டுரைக்கு