Published:Updated:

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்துக்கு... கணினிமயமாகும் ஓய்வூதிய ஆவணங்கள்..!

ஓய்வூதிய ஆவணங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வூதிய ஆவணங்கள்...

ஓய்வூதிய ஆவணங்கள்

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்துக்கு... கணினிமயமாகும் ஓய்வூதிய ஆவணங்கள்..!

ஓய்வூதிய ஆவணங்கள்

Published:Updated:
ஓய்வூதிய ஆவணங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வூதிய ஆவணங்கள்...

பணியிலிருந்து ஓய்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள் தனது மாதாந்தர ஓய்வூதியம், பணிக்கொடை, பென்ஷன் கம்யூடேசன், பொது வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றைப் பெற இதுநாள் வரை காகித வடிவில் மாநில கணக்காயருக்கு அனுப்பி வந்த விண்ணப்பம், நாமினேஷன் படிவங்கள், அதிகாரியின் பரிந்துரை உள்ளிட்ட அனைத்து ஆவணங் களும், 01.11.2022 முதல் ஓய்வு பெற உள்ள ஊழியர்களுக்கு கணினிமயமாகின்றன.

ப.முகைதீன் ஷேக் தாவூது
ப.முகைதீன் ஷேக் தாவூது

ஓய்வுக்கால பணப்பலன் கோரும் ஊழியரின் விண்ணப்பத்துடன் காகித வடிவிலான ஊழியரின் பணிப்பதிவேடும் மாநில கணக்காயருக்கு இதுவரை அனுப்பப்பட்டு வந்தது. அவ்வாறு அனுப்பப்படும் பணிப் பதிவேட்டில் உள்ள பதிவுகளின் அடிப் படையில்தான், மாநில கணக்காயர் ஊழியர்க்கு சேர வேண்டிய பல்வேறு பணப்பலன்களை ஏற்பளிப்பு (Sanction) செய்வார். ஊழியர் கருவூலம் மூலம் பணம் பெறுவார்.

ஓய்வுக்கால பணப்பலன்களுக்கு அடிப்படை ஆவணமான ஊழியரின் பணிப்பதிவேடும் தற்போது மின்மயமாக்கப்பட்டு தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை (IFHRMS) திட்ட சர்வரில் (Server) இடம்பெற்றுவிட்டது. இனி ஓய்வூதிய நடவடிக்கைகள் முழுவதும் ஐ.எஃப்.ஹெச்.ஆர்.எம்.எஸ். வழியேதான் நடைபெறும். எனவே, இ-பணிப்பதிவேடுதான் இனி மாநிலக் கணக்காயருக்கு அனுப்பப்படும்.

இ-பணிப்பதிவேடு

காகித வடிவில் இருந்த பணிப்பதிவேடு ஸ்கேன் செய்யப்பட்டும், விடுபாடுகள் பூர்த்தி செய்யப்பட்டும் மிகுந்த கவனத்துடன் மின் பணிப்பதிவேடாக (e-service register) மாற்றப்பட்டுள்ளது.

என்றாலும், ஓய்வுக்கால பணப்பலனில் பிழை ஏற்படக் கூடாது என்பதற்காக இ-பணிப் பதிவேட்டை மாநில கணக்காயருக்கு அனுப்பும் முன் காகிதப் பணிப்பதிவேட்டுடன் – மின்பதிவேட்டு பதிவுகள் ஒப்பீடு செய்யப் பட்டு வருகின்றன. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்களைப் பார்ப்போம்.

பணப்பலனுக்கான இரு காரணிகள்...

ஓய்வுக்கால பணப்பலனைக் கணக்கிட பணிக்காலம் (Length of service) மற்றும் ஓய்வு பெறும் தேதியில் பெறக்கூடிய கடைசி ஊதியம் (Last pay) ஆகிய இரண்டுமே முக்கியமான காரணிகள். ஊழியர் எவ்வளவு காலம் சம்பளம் பெற்றிருந்தாரோ, அதுவே பணிக்காலம் ஆகும்.

ஒவ்வோர் ஆறு மாதமும் சம்பளம் பெற்ற விவரம் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இதில் விடுபாடு இருக்கலாம். அதாவது, தற்போதைய அலுவலகத்திலேயே பணிக்காலம் பதிவு விடுபட்டிருந்தால், அதை உடனடியாக சரிசெய்து கொள்ளலாம். முந்தைய அலுவலக விடுபாடு எனில், ஊழியரே முயற்சி செய்து விடுபாட்டை சரிசெய்வது நலம்.

ஏனெனில், பணிக்காலத்தில் ஒரே ஒரு நாள் குறைவு ஏற்படுவதுகூட ஓய்வுக்காலப் பலனில் பல ஆயிரம் ரூபாயைக் குறைத்துவிடும். அது மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் பெறப் போகும் மாதாந்தர ஓய்வூதியமும் குறைவாக இருக்கும். எனவே, இதில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம்.

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்துக்கு... கணினிமயமாகும் 
ஓய்வூதிய ஆவணங்கள்..!

பணிக்காலத்தை அதிகரிக்கலாம்...

தற்போது தமிழக அரசின் எந்தப் பதவியில் இருந்து ஒருவர் ஓய்வு பெற உள்ளாரோ, அந்தப் பதவியில் சேர்ந்தது முதல் அதே பதவியில் ஓய்வு பெறும் வரைக்குமான காலம் பணிக் காலமாகக் கணக்கிடப்படும். இத்துடன் உபரியாகக் கீழ்க்கண்ட பணிகள் இருப்பின் அவற்றையும் இப்போது சேர்த்துக்கொண்டு ஓய்வூதிய பலன்களைக் கணக்கிடலாம். கூடுதல் பணப்பலன் பெறலாம். அதாவது,

1. தமிழக அரசுப் பணிக்கு வருவதற்கு முன் மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி நிறுவனங்களில் தற்காலிக பணி செய்திருந்தால் அந்தப் பணிக்காலமும் தற்போதைய ஓய்வுக்கால பணப்பலனுக்கு கணக்கிடத் தகுதியானது.

2. மத்திய அரசில் தற்காலிகப் பணி புரிந்து மாநிலப் பணியில் நிரந்தரமாகி இருந்தால் மத்தியப் பணியையும் சேர்த்து ஓய்வுக்கால பலன் பெறலாம்.

3. ராணுவத்தில் இருந்து, ராணுவப் பணிக்கு ஓய்வூதியம் பெறாதவர் ராணுவப் பணியைத் தமிழக அரசு பணியுடன் இணைக்கலாம்.

4. தினக்கூலி அடிப்படையிலோ, சில்லறைச் செலவின பணியிலோ பணிபுரிந்த காலத்தில் 50% பணியைத் தற்போது சேர்த்துக்கொள்ளலாம்.

5. மேற்கண்டவற்றுள் ஒரு சிலருக்கு உள்ள சந்தேகம் என்னவெனில், தற்காலிக பணியில் இருந்த பதவியும், நிரந்தரப் பணியும் ஒரே பதவியாக இருக்க வேண்டுமா என்பதுதான். தேவையில்லை. தற்காலிக பணியில் இளநிலை உதவி யாளராக இருந்தவர், நிரந்தர ஆசிரியப் பணிக்கு அந்தத் தற்காலிக பணிக் காலத்தை எடுத்துக்கொள்ளலாம்.

தற்காலிக மருந்தாளுனர் (Pharmacist) ஆக இருந்தவர் தற்போது நிரந்தர உதவி யாளராக இருந்து ஓய்வு பெற்றால் அந்தப் பணிக் காலத்தையும் நிரந்தரப் பணியுடன் சேர்த்து ஓய்வுக் கால பணப்பலன் பெறலாம்.

30 வயதுக்குமேல்...

மாவட்ட முன்சீப், சப் – மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்ட நீதித் துறை பணிகளில் சேரும்போது வயது 30-க்குமேல் இருக்கும் பட்சத்தில், பணியில் சேரும் போது 30-க்குமேல் எத்தனை வயது அதிகமோ, அதைப் பணிக்காலமாக எடுத்துக் கொள்ளலாம் (அதிகபட்சம் 5 ஆண்டுகள்).

இதே போல, சிவில் அசிஸ்டன்ட் சர்ஜன் 30 வயதுக்குமேல் பணிக்கு வந்திருந்தால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளைப் பணிக்காலமாக சேர்த்துக் கொள்ளலாம். இந்த இனங்கள் கவனிக்கத்தக்கவை. விடுபாடு இருந்தால் சேர்த்துக்கொள்ள லாம் (நிபந்தனை உண்டு).

உபரியாக ஒரே ஒருநாள் பணிக்காலம் சேர்ப்பதுகூட ஆயிரக்கணக்கில் பணப் பலனை அள்ளித் தரலாம். இதே உபரிப் பணிக்காலம் மாதக் கணக்கில், வருடக் கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்தால், உடனடியாக பழைய அலுவலகம் சென்று பணிச்சான்று (Service Certificate) பெற்று இணைத்து ஓய்வுக்காலப் பணப்பலனை அதிகரித்துக்கொள்ளலாம்.

அதிலும் குறிப்பாக, ஓய்வு பெறும்போது நிகரப்பணி 25 வருடத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு இது பெரு மளவு பணப்பயன் தரக்கூடும்.

குடும்பப் பட்டியல்...

காகித வடிவில் இருந்த பணிப்பதிவேடு கணிணிமயம் (Digital) ஆனது முதல் தற்போது ஓய்வு பெறும் நாள் வரை குடும்ப உறுப்பினர் விவரங்களில் வேறுபாடு இருக்கலாம்.

(அ). மனைவி/கணவர் இறந்து போய் மறுமணம் செய்திருந்தால் தற்போதைய மனைவி / கணவர் பெயர் மாற்றம் கவனிக்கப்பட வேண்டும். மரணச்சான்று இணைக்கப்பட வேண்டும்.

(ஆ). விவாகரத்து பெற்று மறுமண நிகழ்வுகளிலும் நீதிமன்றத் தீர்ப்பு இணைப்பு அவசியம்.

(இ). புதிய குடும்ப உறுப் பினர் சேர்க்கை அல்லது நீக்கம் சரிபார்க்கப்பட வேண்டும்.

(ஈ). பிள்ளைகளின் வயதுச் சான்று முக்கியம். குடும்ப பென்ஷன் காலத்தை நிர்ணயம் செய்யவும், ஒரு பிள்ளைக்குமேல் அதிக பிள்ளைகள் உள்ள நிலையில், முதல் பிள்ளை 25 வயதை அடைந்ததும், அடுத்தடுத்த பிள்ளை எளிதாகக் குடும்ப பென்ஷனைத் தொடரவும் இது அவசியம்.

(உ.) மனைவி (அல்லது கணவர்) பிறந்த தேதிக்கும் சான்று அவசியம். 80 வயதை எட்டியதும் கூடுதலாக 20% குடும்ப பென்ஷன் பெற இது தேவை.

(ஊ). பெண் குழந்தைகளின் திருமண நிலையை அப்டேட் செய்வது அவசியம். அசாதாரண நிகழ்வு களில் வாரிசுகளிடையே பிரச்னையைத் தவிர்க்க இது பெரிதும் உதவும்.

நாமினேசன்...

பணிக்கொடை, பென்ஷன் கம்யூடேசன், ஓய்வூதிய அரியர்ஸ் மற்றும் பொது சேமநல நிதிக்கான நாமினி -யாக குடும்ப உறுப்பினர்களுள் முன்னதாக யாரை நியமனம் செய்திருந்தாலும், தற்போதைய நிலவரப்படி, பழைய நாமினேஷனை ரத்து செய்து புதிய நாமினியை ஒவ்வொன்றுக்கும் நியமிக்கலாம்.

பென்ஷன் கம்யூடேசன்...

பென்ஷன் கம்யூடேசனைப் பெற விரும்பாதவர்கள், படிவம் 5-ல் அதற்கான பத்தியை அடித்து விடுவது நலம். தவறுதலாக கம்யூடேசன் ஏற்பளிக்கப் பட்டுவிட்டால் அதை ரத்து செய்ய முடியாது.

01.11.2022 முதல்...

காகித பணிப்பதிவேட்டில் இருந்து கணினி பதிவேட்டுக்கு மாறிய பிறகு, மேற்கண்ட மாற்றங்கள் எவையோ, அவை அனைத்தும் மற்றத் தக்கவை.

1.11.2022 முதல் இனி வரும் காலங்களில் ஓய்வு பெற உள்ளவர்களுக்கும் இந்தத் தகவல்கள் மிக முக்கியமானவை என்பதுடன், பல பயன் களையும் தரும்.

இதுவரை உங்கள் பணிக்காலம் குறித்து நீங்கள் எந்தக் கவலையும் படாமல் இருந்திருக்கலாம். ஆனால், இனியும் அப்படி இருக்க முடியாது. காரணம், 10, 20 பணி நாள்கள்கூட கணக்கில் வராமல்போனால், அதனால் நீங்கள் இழக்க வேண்டிய தொகை பல ஆயிரங்களுக்கு மேல் இருக்கும் என்பதால், உடனடி யாக நீங்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியே ஆக வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை!