Published:Updated:

இந்தியர்கள் மிகவும் விரும்பும் பிராண்டு... ஃபேஸ்புக்கா கூகுளா?!

பெ.மதலை ஆரோன்
HARIF MOHAMED S

தற்போது, மக்களால் அதிகம் விரும்பப்படும் சிறந்த பிராண்ட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ஃபேஸ்புக் தயாரிப்புகளுக்கும் கூகுளுக்கும்தான் குஸ்தி சண்டை! இதில் வென்றது யார்?

Top Brand Health
Top Brand Health ( YouGov )

உலகம் முழுவதும் எங்கும், எந்த இடத்திலும் நமக்குத் தேவையான தகவல்களை நம் விரல் நுனியில் நமக்குத் தருகிறது கூகுள். கூகுளில் தேடினால் கிடைக்காத விஷயமே கிடையாது என்பதே பலரின் கருத்து.

YouGov
YouGov

தற்போது, மக்களால் அதிகம் விரும்பப்படும் சிறந்த பிராண்ட்களின் பட்டியலில் கூகுள் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது தொடர்பாக YouGov நிறுவனம் மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களால் அதிகம் விரும்பிப் பயன்படுத்தப்படும் பிராண்டுகள் குறித்து, இந்தியா மட்டுமல்லாமல், 29 நாடுகளில் சுமார் 250 பிராண்டுகளின் தரவுகளைத் திரட்டி YouGov நிறுவனம் ஆய்வில் ஈடுபட்டது. ஒரு பிராண்டின் ஒட்டுமொத்த தரம், மதிப்பு, தோற்றம், அதற்குக் கிடைத்திருக்கும் நற்பெயர், நுகர்வோர்களின் திருப்தி மற்றும் மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுவது உள்ளிட்ட விவரங்களைக் கருத்துக் கணிப்பின் மூலம் ஆய்வு செய்தது. இந்தப் பட்டியலில் இந்திய மக்களால் அதிகம் விரும்பப்படும் பிராண்டாக கூகுள் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப், கூகுளுக்குச் சொந்தமான யூடியூப் உள்ளன.

Top brand infographics
Top brand infographics
vikatan
கருத்துக் கணிப்பில் கூகுள் 59.8 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் 54.8 மதிப்பெண்ணும், யூடியூப் 54.0 மதிப்பெண்ணும் பெற்றுள்ளன. மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான ஃபேஸ்புக் இந்தப்பட்டியலில் 38.9 மதிப்பெண்ணுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.
உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களான, ஊபர் ஈட்ஸ், ஜொமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் அதிக வளர்ச்சியடைந்து முதல் மூன்று இடத்தைப் பெற்றுள்ளன.
இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்போடு தன் பெயரையும் சேர்க்கும் ஃபேஸ்புக் - என்ன காரணம்?

அதேபோல், வளர்ச்சி பெற்ற டாப் 10 பிராண்ட்களின் பட்டியலில், உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களான, ஊபர் ஈட்ஸ், ஜொமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் முதல் மூன்று இடத்தைப் பெற்றுள்ளன. இதில் கடந்த ஆண்டைவிட 12.3 சதவிகிதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளது ஊபர் ஈட்ஸ். அதேபோல் ஜொமேட்டோ 11.2 சதவிகிதமும், ஸ்விக்கி 10.3 சதவிகிதமும் வளர்ச்சியடைந்துள்ளது. இதைத் தொடந்து இன்ஸ்டாகிராம், கோட்டக் மகேந்திர பேங்க், அமேசான், பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்டிஎப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், மேர்ரியாட் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.

உலகளவில் பார்க்கும் போது சிறந்த 10 பிராண்டுகளில் கூகுள்தான் முதலிடத்தில் உள்ளது. தொடந்து வாட்ஸ்அப், யூடியூப், சாம்சங், ஃபேஸ்புக், அமேசான் ஆகியவை உள்ளன. உலகளவில் சிறந்த பிராண்டுகளில் முதல் 10 இடங்களில் நைக்கி நிறுவனத்தைத் தவிர மற்ற அனைத்து பிராண்டுகளுமே டிஜிட்டல் நிறுவனங்கள்.

"இப்படி ட்வீட் போட்டா 150% அதிக என்கேஜ்மென்ட் கிடைக்கும்!" - ட்விட்டர் சொல்லும் டேட்டா

இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் மக்கள் அனைவரும் டிஜிட்டல் உலகத்தில் நுழைந்து கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகிறது.