Published:Updated:

ட்விட்டர் சர்வே: தமிழகத்தில் ஐ.டி முதலீடு குறைய என்ன காரணம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாணயம் விகடன் ட்விட்டர் சர்வே
நாணயம் விகடன் ட்விட்டர் சர்வே

ட்விட்டர் சர்வே

பிரீமியம் ஸ்டோரி

.டி மற்றும் ஐ.டி துறை சார்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம் என நாணயம் விகடன் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு சர்வே நடத்தினோம்.

ட்விட்டர் சர்வே: தமிழகத்தில் ஐ.டி முதலீடு குறைய என்ன காரணம்?

இதில் 66% பேர் அரசின் ஒத்துழைப்பு இல்லாததே ஐ.டி துறை சார்ந்த நிறுவனங் களின் முதலீடு தமிழகத்தில் குறையக் காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள். பொதுவாக, தொழில் நிறுவனங்களின் முதலீடே தமிழகத்தை நோக்கிவருவது குறைந்துள்ளதாகவே மக்கள் கருது கின்றனர். இந்த நிலையில், ஐ.டி துறையின் முதலீடு குறையவும் அரசே காரணம் என அவர்கள் நினைப்பதில் ஆச்சர்யமில்லை.

25% பேர் ஐ.டி துறையின் வளர்ச்சி யின்மையே காரணம் எனச் சொல்லி யுள்ளார்கள். அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி மட்டுப்பட்டிருப்பதால், ஐ.டி தொடர்பான வேலை நமக்குக் கிடைப்பது குறைவாக உள்ளது. இந்த நிலையில், ஐ.டி நிறுவனங்களின் முதலீடு குறைவாக இருப்பது இயற்கையான விஷயமே!

ட்விட்டர் சர்வே: தமிழகத்தில் ஐ.டி முதலீடு குறைய என்ன காரணம்?

9% பேர், தரமான ஊழியர்கள் இல்லாதது காரணம் எனச் சொல்லி யுள்ளார்கள். இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களின் கல்வித்தரம் இன்னும் உயர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்றாலும், இப்போது கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவரும் மாணவர்களின் கல்வித்தரத்தில் பெரிய குறை எதுவுமில்லை என்பதே உண்மை. ஐ.டி துறையில் முதலீட்டை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசாங்கம் உடனே எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

- ஆகாஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு