Published:Updated:

`ஒர்க் ஃப்ரம் ஹோம்' சமயம் 269 லட்சம் பேர் தரவிறக்கம் செய்த செயலி எது? உங்களுக்கும் பயன்படுமா?!

ஒர்க் ஃப்ரம் ஹோம்

மார்ச் மாதம் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகளின் பட்டியலில் ஜூம் (zoom) செயலி முதலிடத்தில் உள்ளது.

`ஒர்க் ஃப்ரம் ஹோம்' சமயம் 269 லட்சம் பேர் தரவிறக்கம் செய்த செயலி எது? உங்களுக்கும் பயன்படுமா?!

மார்ச் மாதம் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகளின் பட்டியலில் ஜூம் (zoom) செயலி முதலிடத்தில் உள்ளது.

Published:Updated:
ஒர்க் ஃப்ரம் ஹோம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகம் முழுவதும் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளன. வீட்டிலிருந்து அலுவலகப் பணியைச் செய்வது சற்று சவாலானது... அலுவலகப் பணிச் சூழலுக்கு நேரெதிரானது. சக ஊழியர்களையும் மேலதிகாரிகளையும் தொடர்புகொள்வது சற்று சிரமமாகும். அதிக நேரம் செலவாகும். ஆவணங்களைப் பரிமாறிக் கொள்ளுவதிலும் பிரச்னைகள் ஏற்படும்.

Representational Image
Representational Image

இந்தச்சூழலில், ஒருங்கிணைந்து சிறப்பாகப் பணியைச் செய்ய அனைவரும் தேர்வு செய்வது வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகளைத்தான். தெளிவான காணொளி, குழப்பமில்லாத வாய்ஸ், பயன்பாட்டு நேரம், இணைய வேகம் என பல அம்சங்களையும் கவனித்தே செயலிகளைத் தேர்வுசெய்ய வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஜும் (zoom)
ஜும் (zoom)

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வீடியோ கான்ஃபரன்ஸிங் பயன்பாட்டுக்காக, ட்ரூப் மெசஞ்சர் (Troop Messenger), ஸ்லாக் (Slack), மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் (Microsoft teams) எனப் பல செயலிகள் இருந்தாலும், உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தும் செயலிகளின் பட்டியலில் ஜூம் (zoom), ஸ்கைப் (Skype), ஹவுஸ்பார்ட்டி (House party) என்ற மூன்று செயலிகளே முன்னிலையில் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

Zoom
Zoom

ப்ரியோரி (Priori) என்ற ஆய்வு நிறுவனத்தின் தரவுகள்படி, இந்தாண்டு, ஜனவரி மாதத்தில் 21 லட்சம் முறை வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில், 27 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. ஸ்கைப், ஹவுஸ்பார்ட்டி மற்றும் ஜூம் ஆகிய செயலிகளின் தரவிறக்கம் மார்ச் மாதத்தில் 100 சதவிகிதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளதாக அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் (Microsoft teams) சேவையை மார்ச் மாதத்தில், iOS மற்றும் Android தளங்களில் 5.9 கோடி பயனர்கள் தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.
Priori Data

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மார்ச் மாதம் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகளின் பட்டியலில் ஜூம் (zoom) செயலி முதலிடத்தில் உள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 269 லட்சம் பேர் இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்துள்ளனர். ஜூம் செயலி சமீபகாலமாகப் பிரபலமாகி வருவதற்குக் காரணம், இதன் மூலம் வீடியோ அழைப்பிலோ அல்லது வாய்ஸ் மூலமோ எளிதாகத் தொடர்புகொள்ளமுடியும். மேலும், இதில் நடக்கும் வீடியோ மீட்டிங்குகளை ரெக்கார்டும் செய்துகொள்ளலாம். ஒரு பணியாளர் தனது ஸ்கிரீனை மற்றொரு பணியாளர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும். இந்தச் செயலியில் இலவசமாக 40 நிமிடங்கள் வரை வீடியோ மீட்டிங் நடத்தமுடியும். எனவே, பலரும் ஜூம் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

Zoom
Zoom

இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்கைப் செயலியை 62 லட்சம் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். மூன்றாவது இடத்தில் இருக்கும் ஹவுஸ் பார்ட்டி செயலியை 52 லட்சம் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.

Vikatan Infographics
Vikatan Infographics

ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாகப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பது ஸ்கைப் செயலிதான். இதை தினமும் 591 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜூம் செயலியை 43 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், ஹவுஸ் பார்ட்டி செயலியைத் தினமும் 1 லட்சம் பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக மேற்கண்ட நிறுவன ஆய்வுகள் கூறுகின்றன.

ஹவுஸ்பார்ட்டி
ஹவுஸ்பார்ட்டி

கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, வருங்காலங்களில் இந்தச் செயலிகளின் பயன்பாடு அதிகரிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism