Published:Updated:

துரைமுருகன் ஸ்டாலினுக்கு அளித்த `மான்ட்பிளாங்க்' பேனாவின் சிறப்புகள் என்ன?

`மான்ட்பிளாங்க்' பேனா

இந்த பேனா, ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்குப் பொக்கிஷமாகக் கொடுக்கப்படுகிறது. பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், செல்வந்தர்களும் விரும்பி உபயோகப்படுத்தும் இந்த பேனாவில் என்ன சிறப்பிருக்கிறது...

துரைமுருகன் ஸ்டாலினுக்கு அளித்த `மான்ட்பிளாங்க்' பேனாவின் சிறப்புகள் என்ன?

இந்த பேனா, ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்குப் பொக்கிஷமாகக் கொடுக்கப்படுகிறது. பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், செல்வந்தர்களும் விரும்பி உபயோகப்படுத்தும் இந்த பேனாவில் என்ன சிறப்பிருக்கிறது...

Published:Updated:
`மான்ட்பிளாங்க்' பேனா

சமீபத்தில் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் துரைமுருகன், ஸ்டாலினுக்கு, `மான்ட்பிளாங்க்' (montblanc) பேனாவைப் பரிசளித்தார். சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த், சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொலைந்துபோன மான்ட்பிளாங்க்  பேனாவைக் கண்டுபிடித்துத் தருமாறு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இப்படி பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், செல்வந்தர்களும் விரும்பி உபயோகப்படுத்தும் இந்த பேனாவில் என்ன சிறப்பிருக்கிறது என்ற கேள்வி எழுகிறதல்லவா..? 

விஜய் வசந்த்
விஜய் வசந்த்

மான்ட்பிளாங்க் பேனாவின் சிறப்புகளைத்தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம். 

* இந்தப் பேனாக்கள் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பேனா செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்களும் மிகவும் விலை உயர்ந்தவை. 

* இருபதாம் நூற்றாண்டில் இருந்தே ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் உள்ள மான்ட்பிளாங்க் நிறுவனம், மான்ட்பிளாங்க் பேனாக்களைத் தயாரித்து விற்பனை செய்கிறது. பேனா மட்டுமல்லாமல் விலை உயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரம், தொழில்நுட்ப கருவிகள், தோல் பைகள், ப்ரீஃப்கேஸ்களையும் விற்பனை செய்கிறது.

* மையைப் பயன்படுத்தி எழுதும் பேனாக்களையும், பால்பாயின்ட் பேனாக்களையும் விற்பனை செய்கிறது மான்ட்பிளாங்க் நிறுவனம். நீண்ட நாள்கள் உபயோகிக்கும் வகையில், பேனாவின் மையை மீண்டும் நிரப்பிக்கொள்ளலாம்.

Money
Money

* இந்த பேனா, ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்குப் பொக்கிஷமாகக் கொடுக்கப்படுகிறது. 50,000 ரூபாய் முதல் 1 லட்சத்துக்கும் மேல் இதன் விலை உள்ளது.

* பேனாவின் தரம் மற்றும் பேனாவில் மேற்கொள்ளப்படும் கைவினை வேலைப்பாடுகள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்தவை.

* சரியாகப் பிடித்து எழுதும்படி, பேனாவின் உறுதித்தன்மை சிறப்பாக இருக்கும். வெவ்வேறு வண்ணங்களில் பேனாக்கள் விற்கப்படுகின்றன. மிகவும் கலைநயத்தோடு வடிவமைக்கப்படும் பேனாவின் மூடி, பிளாட்டினத்தால் பூசப்பட்டு லோகோ மற்றும் தனி வரிசை எண் பொறிக்கப்பட்டு இருக்கும்.

* மான்ட்பிளாங்க் பால் பாயின்ட் பேனாக்களில் தங்கத்தால் ஆன நிப் இல்லை. இருந்தபோதும் அவற்றைத் தயாரிக்கும்போது, பேனாவின் வேலைப்பாடுகளில் தங்கம் மற்றும் பிளாட்டினம் பயன்படுத்தப்படுகிறது.

* இந்தப் பேனாவுக்கு சில நிபந்தனைகளோடு வாரன்டி வழங்கப்படுகிறது. பழுது பார்த்துக்கொள்ளும் சேவையோடு, பேனாவை மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.