Published:Updated:

ஜியோவின் புதிய ஸ்மார்ட்போன்... முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான் என்ன?

JioPhone Next
News
JioPhone Next

புதிய ஸ்மார்ட்போனுடன் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் வரை இலவச 4G டேட்டாவை ஜியோ வழங்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. விலை குறைந்த ஸ்மார்ட்போனுடன் இலவச டேட்டா என்பது டெரிஃபிக் காம்போ.

இந்தியாவில் இணையப் பயன்பாட்டை ஜியோவின் வருகைக்கு முன், வருகைக்குப் பின் எனப் பிரித்துவிடலாம். ஜியோவின் இலவச 4G என்ற அறிவிப்புக்குப் பின்னர்தான் இணையப் பயன்பாடு அதிகரித்தது. கொரோனா காலத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடும் விற்பனையும் அதிகரித்திருக்கிறது. ஸ்மார்ட்போன் பயன்பாடு நமது விருப்பம் என்பதில் இருந்து மாறி அத்தியாவசியத் தேவை என்றாகியிருக்கிறது இந்த ஒரு வருடத்தில். ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகளவு இல்லாத வீடுகளில் கூட குழந்தைகளின் படிப்பிற்காக ஸ்மார்ட்போன் அதிகளவில் வாங்கியிருக்கிறார்கள்.

இந்த இடத்தில்தான் விலை குறைவான ஸ்மார்ட் போன்கள் என்ற ஐடியாவோடு ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைகிறது ஜியோ. இணையத்தையே பயன்படுத்தாத பெரும்பான்மை மக்களை தனது Feature போனான ஜியோ போன் மூலமாக இணையத்தைப் பயன்படுத்த வைத்தது ஜியோ. ஸ்மார்ட்போனில் இருக்கும் சில வசதிகளை Feature போன்களில் கொண்டு வந்து இரண்டு வருடத்தில் 5 கோடி போன்களை விற்பனை செய்தது.

ஜியோ ஸ்மார்ட் போன்
ஜியோ ஸ்மார்ட் போன்

தற்போது மீண்டும் அதே போன்றதொரு திட்டம்தான். ஸ்மார்ட்போனைப் பயன்படுத்திடாத மக்களை ஸ்மார்ட்போன் உலகிற்குள் கொண்டு வர விலை குறைவான ஸ்மார்ட்போனான 'Jiophone Next'-ஐக் இந்திய சந்தைக்குக் கொண்டுவரவிருக்கிறது ஜியோ. இது குறித்த அறிவிப்பையும் கடந்த மாதம் வெளியிட்டார் முகேஷ் அம்பானி. புதிய ஜியோ போனைப் பற்றி பெரிதாக எந்தத் தகவல்களும் தெரிவிக்காமல், செப்டம்பர் 10-ம் தேதி முதல் இந்த புதிய Jiophone Next விற்பனைக்கு வரும் என்று மட்டும் தெரிவித்தது ஜியோ. இந்த நிலையில், எந்தப் பயனர்களைக் குறிவைத்து ஜியோ இந்தப் புதிய ஸ்மார்ட்போனை விற்பனைக்குக் கொண்டு வருகிறது என்பது குறித்து Counterpoint Research சில தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதன்படி, இந்தியாவின் மக்கள் தொகை 1.39 பில்லியன். அதில் 530 மில்லியன் ஸ்மார்ட் போன் பயனர்களுடன் சேர்த்து, 850 மில்லியன் மொபைல் போன் பயனர்களைக் கொண்டிருக்கிறது இந்தியா. மொபைல் போன்களையே பயன்படுத்தாதவர்கள் குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் வாங்க முடியாதவர்கள் என 540 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாதவர்கள் மற்றும் Feature போனைப் பயன்படுத்துகிறவர்கள் என 520 மில்லியன் பயனர்களைக் குறிவைத்தே ஜியோ இந்தப் புதிய ஸ்மார்ட் போனை வெளியிடுகிறது. இந்தத் திட்டத்திற்காக கூகுளுடன் கைகோர்த்திருக்கிறது ஜியோ. கூகுள் 4.5 பில்லியன் டாலர்களை ஜியோவில் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் ஜியோ | Google Jio
கூகுள் ஜியோ | Google Jio

இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கு கூகுளுடன் இணைந்து சிறிது மாற்றம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை ஜியோ பயன்படுத்தவிருக்கிறது. அதோடு பல சிறப்பம்சங்களுடனே புதிய ஜியோ போன் வெளியாகவிருக்கிறது. இந்த போன் தான் உலகிலேயே மிகவும் குறைந்தவிலை 4G ஸ்மார்ட் போனாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 4000 ரூபாய்க்குள் புதிய ஜியோ போனின் விலை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

425 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாகவும் இருக்கிறது ஜியோ. இந்தப் புதிய ஸ்மார்ட்போனுடன் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் வரை இலவச 4G டேட்டாவை ஜியோ வழங்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. விலை குறைந்த ஸ்மார்ட்போனுடன் இலவச டேட்டா என்பது டெரிஃபிக் காம்போ தான். 4000 ரூபாய்க்குள்ளும் இருந்து பயனர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் ஜியோவின் இந்தப் புதிய ஸ்மார்ட்போன் இருந்தால், கண்டிப்பாக இந்திய மார்க்கெட்டில் ஹிட் அடிக்கலாம்.