Published:Updated:

வாட்ஸ் அப், மெட்டா நிறுவனத்தின் இரண்டு உயர்மட்ட இந்திய அதிகாரிகள் ராஜினாமா!

அபிஜித் போஸ், மார்க் சக்கர்பெர்க் , ராஜீவ் அகர்வால்

மார்க் ஸக்கர்பெர்க் மெட்டாவின் அதிரடி ஆட்குறைப்புக்கு நடவடிக்கையை அறிவித்ததையடுத்து, வாட்ஸ் அப் மற்றும் மெட்டா நிறுவனத்தின் இரண்டு உயர்மட்ட இந்திய அதிகாரிகள் ராஜினாமா செய்திருக்கின்றனர்.

வாட்ஸ் அப், மெட்டா நிறுவனத்தின் இரண்டு உயர்மட்ட இந்திய அதிகாரிகள் ராஜினாமா!

மார்க் ஸக்கர்பெர்க் மெட்டாவின் அதிரடி ஆட்குறைப்புக்கு நடவடிக்கையை அறிவித்ததையடுத்து, வாட்ஸ் அப் மற்றும் மெட்டா நிறுவனத்தின் இரண்டு உயர்மட்ட இந்திய அதிகாரிகள் ராஜினாமா செய்திருக்கின்றனர்.

Published:Updated:
அபிஜித் போஸ், மார்க் சக்கர்பெர்க் , ராஜீவ் அகர்வால்

சமீபகாலமாக பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் அதிரடியாக இறங்கியுள்ளன. இதனால் பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணிநீக்கம் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றது. சமீபத்தில்  `Snapchat' ன் தாய் நிறுவனம் கடந்த ஆகஸ்ட்டில் தனது பணியாளர்களில் 20 சதவிகிதம் பேரை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது எலான் மஸ்க் ட்விட்டரில் அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

 மார்க் சக்கர்பெர்க்
மார்க் சக்கர்பெர்க்

இந்த செய்திகளின் பரபரப்பு குறைவதற்குள் பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமும் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து கடந்த வாரம் 'மெட்டா'வும் 11 ஆயிரத்துக்கும் (13 சதவிகிதத்துக்கும்) மேற்பட்ட பணியாளர்களைப் பணிநீக்கம் செய்வதாக அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க் அறிவித்திருந்தார்.

மேலும், ``மெட்டா நிறுவனத்தின் வரலாற்றில் இதுவரை செய்திடாத மிகவும் கடினமான சில மாற்றங்களை இன்று செய்துள்ளேன். எங்கள் குழுவின் அளவை சுமார் 13 சதவிகிதம் குறைக்கவும், 11,000-க்கும் அதிகமான திறமையான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளேன். நாங்கள் எடுக்கப்போகும் பல புதிய மாற்றங்கள் மூலம் நிறுவனத்தின் செலவினங்களைக் குறைத்து திறமையான நிறுவனமாக இந்த நிறுவனத்தை மாற்றியமைத் திட்டமிட்டுள்ளோம். இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. இதற்கும் நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்" என்று கூறியிருந்தார்.

அபிஜித் போஸ், ராஜீவ் அகர்வால், ஷிவ்நாத் துக்ரால்
அபிஜித் போஸ், ராஜீவ் அகர்வால், ஷிவ்நாத் துக்ரால்

இந்நிலையில் தற்போது, மெட்டா நிறுவனத்தின் இரண்டு உயர்மட்ட இந்தியா அதிகாரிகளான இந்தியாவின் வாட்ஸ்அப் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் மெட்டா இந்தியாவின் பொதுக் கொள்கை இயக்குநர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் ராஜினாமா செய்து மெட்டாவிலிருந்து வெளியேறியுள்ளனர். இதையடுத்து ராஜீவ் அகர்வாலுக்குப் பதிலாக ஷிவ்நாத் துக்ரால் இந்தியாவின் வாட்ஸ்அப் பொதுக் கொள்கையின் இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.