Published:Updated:

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலகின் சிறந்த நிறுவனங்களின் பட்டியல்!- மூன்றாவது இடம் பிடித்த இன்ஃபோசிஸ்

நிறுவனங்களின் நம்பகத்தன்மை, சமூகச் செயல்பாடு, நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் சேவையின் வலிமை மற்றும் நிர்வாகிகளின் நிர்வாகத் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் ( vikatan )

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டுக்கான 'உலகின் சிறந்த 250 நிறுவனங்கள்' பட்டியலில், இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனமான இன்ஃபோசிஸ், மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டில் 31-வது இடத்திலிருந்து, தற்போது மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பெங்களூருவைத் தலைமை இடமாகக்கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக, சலீல் பாரெக் உள்ளார். அந்த நிறுவனத்தில் மொத்தம் 2,04,107 பேர் பணியாற்றுகிறார்கள். நிறுவனத்தின் சந்தை மூலதனம் 45.1 பில்லியன் டாலர்களாக உள்ளது.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்
vikatan

நிறுவனங்களின் நம்பகத்தன்மை, சமூகச் செயல்பாடு, நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் சேவையின் வலிமை மற்றும் நிர்வாகிகளின் நிர்வாகத் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 2,000 பெரிய நிறுவனங்களை எடுத்து, அவற்றிலிருந்து 250 நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, பட்டியலை வெளியிட்டுள்ளனர். இந்த நிறுவனங்களைத் தேர்வுசெய்வதற்காக ஸ்டாடிஸ்டா என்ற புள்ளிவிவரக் கணக்கெடுப்பு நிறுவனத்தோடு இணைந்து, 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 15,000 பேரிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

21 வருடங்களாக புடவையே வாங்காத இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி!

இந்த 250 நாடுகளின் பட்டியலில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தையடுத்து, டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் 22-ம் இடத்திலும், டாடா மோட்டார்ஸ் 31-வது இடத்திலும் உள்ளன. இவை தவிர, டாடா ஸ்டீல் (105), எல் & டி(115), மஹிந்திரா & மஹிந்திரா (117), ஹெச்.டி.எஃப்.சி (135), பஜாஜ் ஃபின்சர்வ் (143), பிரமல் என்டர்பிரைசஸ் (149), ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (153), ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் (155), ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் (157), விப்ரோ (168), ஹெச்.டி.எஃப்.சி பேங்க் (204), சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் (217), ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (224), ஐடிசி (231), ஏசியன் பெயின்ட்ஸ் (248) ஆகிய 17 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்
vikatan

இந்தப் பட்டியலில், முதலிடம் பிடித்த விசா நிறுவனம் உட்பட, அமெரிக்காவைச் சேர்ந்த 59 நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. அடுத்ததாக ஜப்பான், சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் இதில் இடம்பிடித்துள்ளன. ஜப்பான், சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் 63 என்றிருந்து தற்போது 82 ஆக அதிகரித்துள்ளது.