பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

ஜவுளி ஏற்றுமதியில் இந்திய அளவில் தமிழகத்துக்கு மூன்றாம் இடம்..!

தொழில்நுட்ப ஜவுளிக் கருத்தரங்கு...
பிரீமியம் ஸ்டோரி
News
தொழில்நுட்ப ஜவுளிக் கருத்தரங்கு...

கருத்தரங்கம்

தமிழக அரசின் துணி நூல் துறை, மத்திய ஜவுளி அமைச்சகம் மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) இணைந்து மாபெரும் பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளிக் கருத்தரங்கை சென்னையில் நவம்பர் 25-26 தேதிகளில் நடத்தியது. காணொலி மூலம் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஜவுளித் துறையில் தமிழகம் அதிக அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் மாநிலம் என்ற வகையிலும், ஜவுளி ஏற்றுமதியிலும் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 12% பங்களிப்பை தமிழக ஜவுளித் துறை வழங்கி வருகிறது.

தொழில்நுட்ப ஜவுளிக் கருத்தரங்கு...
தொழில்நுட்ப ஜவுளிக் கருத்தரங்கு...

சென்னையில் பிரமாண்ட ஜவுளி நகரம் ஒன்றை அமைக்கவும், பல இடங்களில் ரூ.2.50 கோடி அரசு மானியத்தில் ஜவுளிப் பூங்காங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். ஜவுளித் துறை முன்னெடுப்புகளை செயல்படுத்த புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும், இந்தக் கருத்தரங்கில் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்தக் கருத்தரங்கில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.எஸ்.எம்.இ துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தமிழ்நாடு கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் காதி துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், ஜவுளித் துறை ஆணையர் முனைவர் எம்.வள்ளலார், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜிவ் சக்சேனா, இந்திய தொழில் கூட்டமைப் பின் தலைவர் சத்யகாம் ஆர்யா ஆகியோர் சிறப்பு பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டனர்.

இந்தக் கருத்தரங்கம் மிகவும் பயனுள்ள தாகவும், தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்த புரிந்துகொள்ளலை ஏற்படுத்தியதாகவும் கலந்துகொண்டவர்கள் அனைவரும் கூறியது குறிப்பிடத்தக்கது.