Published:Updated:

`ப்ரீபெய்டு ரீசார்ஜ் காலத்தை 30 நாள்களுக்கு நீட்டியுங்கள்!' - டெலிகாம் நிறுவனங்களுக்கு TRAI உத்தரவு

மொபைல் டவர்

ப்ரீபெய்டு வேலிடிட்டியின் கால அளவை நீடிக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்ததையடுத்து, ப்ரீபெய்டு காலத் திட்டத்தை 30 நாட்களுக்கு நீடிக்க வேண்டுமென அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது TRAI.

ப்ரீபெய்டு வேலிடிட்டியின் கால அளவை நீடிக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்ததையடுத்து ப்ரீபெய்டு காலத் திட்டத்தை 30 நாட்களுக்கு நீடிக்க அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் டிராய் (TRAI) உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஒரு திட்ட வவுச்சர், ஒரு சிறப்பு டாரிஃப் வவுச்சர், காம்போ வவுச்சர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்கள் வரை நிர்ணயிக்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.

டிராய்
டிராய்

மக்களின் கோரிக்கையை ஏற்று கால அளவை நீடிக்க சொல்லி உத்தரவிட்ட ஆணையம், நுகர்வோரின் கவலைகள் மற்றும் உணர்வுகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஆணையம் உணர்ந்துள்ளதாகவும் , இதன்பிறகு நுகர்வோர் சரியான செல்லுபடியாகும் கால அளவு கொண்ட சேவையை தேர்வு செய்ய முடியும் என்றும் கூறியுள்ளது.

ட்ராயின் இந்த உத்தரவு செல்போன் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.