Published:Updated:

ஏறிய விலைகள்: வோடஃபோன், ஏர்டெல், ஜியோ... இப்போது எது பெஸ்ட்?

Airtel vs Jio vs vodafone
Airtel vs Jio vs vodafone

இன்று முதல் அமலுக்கு வருகின்றன ஜியோவின் விலையேற்றங்கள். இதற்குப் பிறகு, எந்த நெட்வொர்க்கின் திட்டங்கள் சிறந்ததாக இருக்கின்றன?

ஜியோவின் அறிமுகத்திற்குப் பிறகு, பிற நிறுவனங்கள் பெரும் சரிவைச் சந்தித்தன. சமீபத்தில் வந்த AGR தொகை தொடர்பான தீர்ப்பும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில், இந்தியாவில் இதுவரை எந்த ஒரு நிறுவனமும் அடையாத நஷ்டத்தை வோடஃபோன் நிறுவனம் அடைந்துள்ளது. இதனால், இந்த நெருக்கடியைச் சமாளிக்க இறுதி ஆயுதமாகத் தங்கள் சேவையின் விலைகளை உயர்த்தப்போவதாக அறிவித்திருந்தன, இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள். ஜியோவும் ஒத்துழைத்தால்தான் விலை உயர்வால் இந்த நிறுவனங்கள் பயன்பெற முடியும் என்ற சூழலில், ஜியோவும் தொலைத்தொடர்புத் துறையின் நலன் கருதி, தங்களது சேவை விலைகளும் உயரும் என அறிவித்தது.

இந்த விலை உயர்வின் காரணம் மற்றும் பின்னணி பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள, கீழே உள்ள கட்டுரையைப் படியுங்கள்.

`47% வரை விலை உயர்வு!'- ஏர்டெல், வோடஃபோன், ஜியோவின் புதிய விலை விவரம்

இந்த நிறுவனங்களின் புதிய விலைப்பட்டியல்கள் சமீபத்தில் வெளியாகின. வோடஃபோன்-ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் இந்த மாற்றங்களை டிசம்பர் 3-ம் தேதி அமலுக்குக் கொண்டுவர, ஜியோ புதிய விலைகளை இன்று (டிசம்பர் 6) முதல் அமலுக்குக் கொண்டுவருகிறது. இந்த விலையேற்றங்களுக்குப் பிறகு நிலை என்ன, எந்தச் சேவையின் விலைகள் இப்போது குறைவாக இருக்கின்றன என விரிவாகப் பார்க்கலாம்.

மொத்தமாக ஒரு நாளைக்கு வரும் சராசரி செலவு என்று பார்த்தால், ஏர்டெலின் புதிய விலைப்பட்டியல் முன்பிருந்ததைவிட 50 பைசா முதல் 2.85 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இப்போது, ஏர்டெல்லில் மாதம் குறைந்தபட்சம் 49 ரூபாய் செலுத்த வேண்டியதாக இருக்கும். இந்தத் தொகைக்கு 28 நாள்கள் வேலிடிட்டியும், 38.52 ரூபாய் டாக்-டைம்மும் 100 MB டேட்டாவும் கிடைக்கும்.

வோடஃபோன் விலை | Vodafone Tariff
வோடஃபோன் விலை | Vodafone Tariff

பரவலாக மக்கள் பயன்படுத்தும் மாத திட்டத்தின் விலை இப்போது 248 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், தினமும் 1.5 டேட்டாவும் 100 SMS-களும் 28 நாள்களுக்குக் கிடைக்கும். அழைப்புகள் இலவசம் (ஏர்டெல் டு ஏர்டெல்).

வோடஃபோன்-ஐடியா சேவைகளின் விலை, ஏர்டெல்லின் நகல் போலத்தான் இருக்கிறது. இதிலும் மாதத்துக்கு குறைந்தபட்சம் 49 ரூபாய் செலுத்தவேண்டியதாக இருக்கும். இந்தத் தொகைக்கு 28 நாள் வேலிடிட்டியும் 38 ரூபாய் டாக்-டைம்மும் 100 MB டேட்டாவும் கிடைக்கும். இதில், ஒரு மாதம் வேலிடிட்டி கொண்ட டேட்டா திட்டத்தின் விலை 249 ரூபாய். ஏர்டெல்லைப் போல, இதிலும் தினமும் 1.5 டேட்டாவும் 100 SMS-களும் 28 நாள்களுக்குக் கிடைக்கும். அழைப்புகள் இலவசம் (வோடஃபோன் டு வோடஃபோன்).

மாற்றங்களுக்குப் பிறகும் ஜியோவின் விலை இந்த இரண்டு சேவைகளின் விலையைவிடவும் குறைவாகத்தான் இருக்கிறது. ஏர்டெல், வோடஃபோனில் 248, 249 ரூபாய்க்குக் கிடைக்கும் அதே திட்டம், ஜியோவில் 199 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இப்போதும் கிட்டத்தட்ட ஜியோவின் அனைத்து திட்டங்களுமே மற்ற நிறுவனங்களைவிட குறைவாகத்தான் இருக்கிறது.

இந்தப் புதிய விலைப்பட்டியல்களின்படி மாதத் திட்டங்களில், குறிப்பிட்ட நேரம் வரைதான் பிற நிறுவன அழைப்புகள் பேச முடியும். அதன்பின், நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும். முன்பு, ஜியோ மட்டும்தான் இதற்கு தனியாகக் கட்டணம் வசூலித்துவந்தது. இப்போது, மற்ற நிறுவனங்களும் இதே யுக்தியைக் கையில் எடுத்துள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்துமே 28 வேலிடிட்டி திட்டங்களுக்குப் பிற நிறுவன FUP(Fair Usage Policy) நிமிடங்களாக 1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜியோ v வோடஃபோன் v ஏர்டெல்
ஜியோ v வோடஃபோன் v ஏர்டெல்

ஒரு வருடத்திற்கான திட்டங்களைப் பார்த்தால், 365 நாள்கள் வேலிடிட்டியுடன், நாள் ஒன்றுக்கு 1.5 டேட்டா ஜியோவில் 2,199 ரூபாயிலும், ஏர்டெல் 2,398 ரூபாயிலும், வோடஃபோன் 2,399 ரூபாயிலும் கிடைக்கின்றன.

பிற சேவைகள்

இன்று, டெலிகாம் நிறுவனங்கள் டெலிகாம் சேவைகள் அல்லாத மற்ற சேவைகளையும் தருகின்றன. அப்படி என்னென்ன நிறுவனங்கள் என்னென்ன சேவைகள் தருகின்றன என்று பார்ப்போம்...

ஏர்டெல்: ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ், ஆன்டி-வைரஸ் புரொடக்க்ஷன்

ஜியோ: ஜியோ டி.வி, ஜியோ சினிமா, ஜியோ சாவ்ன், ஜியோ நியூஸ், ஜியோ கிளவுட், ஜியோ செக்யூரிட்டி, ஜியோ ஹெல்த் ஹப்

வோடஃபோன்: வோடஃபோன் ப்ளே

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்
மொத்தமாக விலையையும், கொடுக்கும் சேவைகளையும் மட்டும் வைத்துப் பார்த்தால், விலை ஏற்றங்களுக்குப் பிறகும் ஜியோதான் சிறந்த சாய்ஸாக இருக்கிறது.
அடுத்த கட்டுரைக்கு