Published:Updated:

ரூ.30,000 முதலீடு, இன்று டேர்ன் ஓவர் ரூ.1,225 கோடி... வாவ் மோமோஸ் வளர்ச்சிக்கு இதுதான் காரணம்!

வாவ் மோமோஸ்
News
வாவ் மோமோஸ்

பன்னாட்டுத் துரித உணவு சங்கிலிகளில் பீட்சா, பர்கர் வெற்றிகரமாக விற்கப்படும்போது, மோமோஸால் ஏன் வெற்றி பெற முடியாது என்பதைச் சவாலாக எடுத்து ரூ.30,000 முதலீட்டில் உருவாக்கப்பட்டதே வாவ் மோமோஸ்.

ரூ.30,000 முதலீடு, இன்று டேர்ன் ஓவர் ரூ.1,225 கோடி... வாவ் மோமோஸ் வளர்ச்சிக்கு இதுதான் காரணம்!

பன்னாட்டுத் துரித உணவு சங்கிலிகளில் பீட்சா, பர்கர் வெற்றிகரமாக விற்கப்படும்போது, மோமோஸால் ஏன் வெற்றி பெற முடியாது என்பதைச் சவாலாக எடுத்து ரூ.30,000 முதலீட்டில் உருவாக்கப்பட்டதே வாவ் மோமோஸ்.

Published:Updated:
வாவ் மோமோஸ்
News
வாவ் மோமோஸ்

நம் பள்ளிக் காலங்களில, ஸ்கூலுக்கு வெளிய சுடச்சுட விற்ற சம்சாவையும் பஜ்ஜியையும் நம்ம முறை தின்றிருப்போம்! பெரிய பெரிய கடைகளில் வாங்கி சாப்பிடுகிற ருசிக்கும் மேல் அது இருக்கும். அந்த ருசியில் மோட்டிவேட்டாகி மோமோஸ் விற்று, சில சந்தை யுக்திகளை அறிந்துகொண்டு, இன்றைக்கு 1,225 கோடி டர்ன் ஓவர் உள்ள பிசினஸாக உருவாக்கி இருக்கிறார்கள் இரு கல்லூரி மாணவர்கள். 

வாவ் மோமோஸ்
வாவ் மோமோஸ்

கொல்கத்தாவில் 2008-ம் ஆண்டு கல்லூரி முடித்த பிறகு சாகர் தர்யானி மற்றும் பினோத் ஹோமகாய் இணைந்து உருவாக்கியதுதான் வாவ் மோமோஸ். சிறு வயதில் தங்கள் பள்ளியில் ஒரு பாட்டி விற்ற ருசியான மோமோஸிலிருந்து ``தரத்தில் குறையில்லை என்றால், எங்கு வேண்டுமானாலும் பிசினஸ் தொடங்கி லாபத்தை ஈட்டிவிடலாம்" என்பதை அவர்கள் கற்றுக்கொண்டனர்.

பன்னாட்டுத் துரித உணவு சங்கிலிகளில் பீட்சா, பர்கர் வெற்றிகரமாக விற்கப்படும்போது, மோமோஸால் ஏன் வெற்றி பெற முடியாது என்பதைச் சவாலாக எடுத்து ரூ.30,000 முதலீட்டில் உருவாக்கப்பட்டதே வாவ் மோமோஸ்.

மோமோஸை விற்பதற்காக ஸ்பென்சர்ஸிடம் `6-க்கு 6’ இடத்தை அணுகினார்கள். ஆரம்ப காலத்தில் மோமோஸ் செய்யத் தேவையானப் பொருள்களை அவர்களே வாங்கி, சாகரின் தந்தையின் கேரேஜை மோமோஸ் செய்யும் இடமாகப் பயன்படுத்திக்கொண்டனர். பின், அந்த மோமோஸ்களை ஸ்பென்சரில் மக்களை நேரில் அணுகி விற்பனை செய்தனர். மக்களின் கவனத்தை ஈர்க்க அடர் மஞ்சள் நிறத்தில் டிஷர்ட் அணிந்து விற்பனையில் ஈடுபட்டனர்.

வாவ் மோமோஸ்
வாவ் மோமோஸ்

அந்தக் கட்டத்தில் அவர்கள் யாரையும் வேலைக்கு வைத்திருக்கவில்லை. அப்போது வாவ் மோமோஸின் முதல் நாள் விற்பனை ரூ.2,200. ஆனால், இவர்களின் விற்பனையைக் கண்ட ஸ்பென்சர்ஸ் இவர்களுக்கு மேலும் இரண்டு நகரங்களில் விற்பனை செய்ய அனுமதி அளித்தனர்.

இதை அடுத்து, 2015-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் ஓராண்டு டர்ன் ஓவர் 19 கோடியை எட்டியது.

வெய்ட், வெய்ட்... இவையாவும் ஈக்விட்டி பங்குகளோ, பங்குதாரர்களோ இல்லாமல் விற்பனையின் மூலம் மட்டுமே ஈட்டப்பட்டத் தொகை. அப்போது இவர்கள் நாடு முழுவதும் 43 கிளைகளைக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், முதல் சுற்று ஈக்விட்டி பங்குகள் ஈட்டியபோது ரூ.10 கோடி நிதி திரட்டியது வாவ் மோமோஸ்.

தெருவோரக் கடைகளில் ரூ.40 - 50-க்கு விற்கப்படும் மோமோஸ்களை முறியடித்து, 100 ரூபாய்க்கு விற்ற வாவ் மோமோஸை நோக்கி மக்களைத் நகர்த்தியது எது? நினைத்துப் பார்க்க முடியாத வகைகளிலும் தரத்திலும் மோமோஸ் வழங்கப்பட்டதுதான். உதாரணமாக, பர்கரில் மோமோஸ் வைத்து மோபர்க் என்றும், மாம்பழ சீஸனில் மாம்பழ மோமோஸும், சாக்லேட் மோமோஸும் விற்றதுதான்.

ரூ.30,000 முதலீடு, இன்று டேர்ன் ஓவர் ரூ.1,225 கோடி... வாவ் மோமோஸ் வளர்ச்சிக்கு இதுதான் காரணம்!

வாவ் மோமோஸ் குறிப்பிட்டுக் கையாண்ட சந்தைப் போக்கொன்று இதிலுண்டு. உணவு வணிகத்தை நாம் ஒப்பிட்டுப் பார்க்கையில், அதில் ஏறத்தாழ 64% வணிகர்கள் ஒருங்கிணைக்கப்படாத (Unorganised) வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். இதற்கு சிறந்த உதாரணம், தெருக் கடை தின்பண்டங்கள்தான். இவை ருசியாக இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் இதைத் தவிர்ப்பது அவை சுகாதாரமற்று தோன்றுவதால்தான். இதை உணர்ந்த வாவ் மோமோஸ், தங்களின் பொருள்களைச் சுகாதாரமாகவும் மலிவாகவும் வழங்கினர்.

இன்று வாவ் மோமோஸ், 25 நகரங்களில் 357 கிளைகளில் விரிந்து, 2,700 ஊழியர்களோடு இயங்கி, நாள்தோறும் 22,000 மோமோஸ்களை விற்று வருகிறது. பல இடையூறுகளைத் தாண்டி வாவ் மோமோஸை நிலைநாட்டியது, ``ஒரு நல்ல வாடிக்கையாளர் 10 புதிய வாடிக்கையாளர்களைக் கொண்டு வர முடியும்” என்ற ஒரு நோக்கம் மட்டும்தான். அதனாலேயே வாடிக்கையாளரின் நிறைவையே கொள்கையாகக் கொண்டு இயங்கி வருகிறது.

சாகர் தர்யானி
சாகர் தர்யானி

இன்று டாமினோஸ், மெக் டொனால்டுடன் போட்டிப் போடுகிறது வாவ் மோமோஸ். 21 வயதில் சாகரும் பினோதும் துணிச்சலாக எடுத்த முடிவை, சரியான உக்திகளைக் கொண்டு, இன்று ரூ.1,225 கோடி நிறுவனமாக மாற்றியுள்ள வாவ் மோமோஸுக்கு தம்ப்ஸ் அப்!