Published:Updated:

திருப்பூர் ஜவுளித் தொழில் 37 ஆண்டுகளில் 2000 மடங்கு வளர்ச்சி! நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டம்

மத்திய ஜவுளி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
News
மத்திய ஜவுளி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல்.

கடந்த 37 ஆண்டுகளில் 2000 மடங்கு திருப்பூர் தொழில் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. உலகில் வேறு எந்தத் தொழில் நகரமும் இத்தகைய வளர்ச்சியைப் பெறவில்லை - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

திருப்பூர் ஜவுளித் தொழில் 37 ஆண்டுகளில் 2000 மடங்கு வளர்ச்சி! நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டம்

கடந்த 37 ஆண்டுகளில் 2000 மடங்கு திருப்பூர் தொழில் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. உலகில் வேறு எந்தத் தொழில் நகரமும் இத்தகைய வளர்ச்சியைப் பெறவில்லை - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

Published:Updated:
மத்திய ஜவுளி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
News
மத்திய ஜவுளி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல்.

`இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIEO) மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (AEPC) சார்பில் மத்திய ஜவுளி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்குப் பாராட்டு விழா மற்றும் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுடனான கலந்துரையாடல் திருப்பூரில் நேற்று (ஜூன் 26) நடைபெற்றது. இதில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஏற்றுமதியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIEO) விழா
ஏற்றுமதியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIEO) விழா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறையினர் தங்களது கருத்துகள், கோரிக்கைகள் குறித்து மத்திய அமைச்சருடன் நேரடியாகக் கலந்துரையாடினர். பின்னர், நிகழ்ச்சியில் பேசினார் ஜவுளித்துறையின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்...

திருப்பூரில் உள்ள ஜவுளித்துறை நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. அடுத்து ஐந்தாண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியுடன் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்துறையாக மாறும் வலிமையுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியா ஆண்டுக்கு 8% அளவுக்கு வளர்ச்சி அடைந்தால், 30 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா 30 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக உருவெடுக்கும். நாட்டில் ஜவுளித்துறையில் மிகவும் வெற்றிகரமான ஒரு தொழில் மையமாகத் திருப்பூர் விளங்கி வருவதுடன், தற்போது ரூ.50,000 கோடி அளவுக்கு உற்பத்தி நடைபெறுகிறது.

திருப்பூரின் தொழில் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள வேண்டும் எனில், 1985-ம் ஆண்டில் திருப்பூரின் ஏற்றுமதி மதிப்பு ரூ.15 கோடியாக மட்டுமே இருந்தது. கடந்த மார்ச் மாதத்தில் கணக்கிடப்பட்ட அவர்களது ஏற்றுமதி அளவு ரூ.30,000 கோடி ஆகும்.

ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடல்
ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடல்

கடந்த 37 ஆண்டுகளில் 2,000 மடங்கு அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர். கூட்டு முயற்சி மூலமாகத் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் 23% சராசரி வளர்ச்சியைப் பெற்றுள்ளனர். உலகில் வேறு எந்தத் தொழில் நகரமும் இத்தகைய வளர்ச்சியைப் பெற்றது கிடையாது.

இருப்பினும், திருப்பூர் தொழில் துறையினர் சார்பில் இங்குள்ள தொழிலாளர் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உள்ளது. திருப்பூரில் அனைத்து பின்னலாடை நிறுவனங்களிலும் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் அரசு வேலைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு, அவற்றைத் தேடிக் கொண்டிருக்காமல், திருப்பூரில் உள்ள தொழில் துறையினரைப் போன்று தொழில் முனைவோராக மாற வேண்டும். வாய்ப்புகள் அனைத்து துறைகளிலும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களது திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும், நாட்டில் திருப்பூரைப் போன்று 75 இடங்களில் ஜவுளி மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது'' என்றார் பியூஷ் கோயல்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும் போது, ``இரண்டு நாள்களாக நமது மத்திய அமைச்சர் பல்வேறு தொழில்துறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளாகச் செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து உலக நாடுகள் வியந்து வருகின்றன. இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு உலக நாடுகள் ஆச்சர்யப்படுகின்றன. இந்த அரசாங்கம் சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன் ஆகிய மூன்று தாரக மந்திரங்களைக் கருத்தில் கொண் செயல்பட்டு வருகிறது. நல்ல அரசாங்கம் என்பது, ஏழைகளுக்கு சேவை செய்வது என்பது ஆகும்.

விழாவில்
விழாவில்

மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் ஏராளமான நலத் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. பிரதமர், இந்தியாவை ஆற்றல் மிக்க நாடாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார். ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். அண்மையில் ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அதோடு ஏற்றுமதிக்கான செலவு பெருமளவு குறையும்.

அதோபோல, பிரதமரின் கதிசக்தி போன்ற புரட்சிகர திட்டத்தின் வாயிலாக நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வலுப்பெறும். பல அடுக்கு ஏற்றுமதி பூங்கா அமைத்தல், கன்டெய்னர் உற்பத்தியில் கவனம் செலுத்துதல் போன்றவற்றால் நாட்டிலுள்ள அனைத்துத் திசைகளும் ஒரு புள்ளியில் இணைக்கப்பட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது'' என்றார் அமைச்சர் முருகன்.

திருப்பூர் தொழில்முனைவோர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் நிறைவேற்றினால், இன்னும் பல ஆயிரம் கோடிகள் ஏற்றுமதி மதிப்பு அதிகரிக்கும் என்பதை சொல்ல வேண்டிய தேவையே இல்லை!