Published:Updated:

ட்விட்டரால் 200 பில்லியன் டாலர்கள் இழப்பு... அடுத்தடுத்து சர்ச்சையைக் கிளப்பும் எலான் மஸ்க்!

எலான் மஸ்க்
News
எலான் மஸ்க்

ப்ளூம்பெர்க் வெளியிட்ட பில்லியனர்கள் குறியீட்டில், மஸ்க் முதலிடத்தில் இருந்தார், மஸ்கின் நிகர சொத்து மதிப்பு முன்பு 338 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது அது 137 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

ட்விட்டரால் 200 பில்லியன் டாலர்கள் இழப்பு... அடுத்தடுத்து சர்ச்சையைக் கிளப்பும் எலான் மஸ்க்!

ப்ளூம்பெர்க் வெளியிட்ட பில்லியனர்கள் குறியீட்டில், மஸ்க் முதலிடத்தில் இருந்தார், மஸ்கின் நிகர சொத்து மதிப்பு முன்பு 338 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது அது 137 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

Published:Updated:
எலான் மஸ்க்
News
எலான் மஸ்க்

`ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், `டெஸ்லா மோட்டார்ஸ்' நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி எனப் பல்வேறு தலைமைப் பதவிகளை வகிக்கும் பிசினஸ் மேன் எலான் மஸ்க், தனிப்பட்ட முறையில் 200 பில்லியன் டாலர் சொத்துகளை இழந்த முதல் நபராவார் என்பது வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியுள்ளது. ட்விட்டரை கையகப்படுத்தியதால் ஏற்பட்ட டெஸ்லாவின் பங்கு மதிப்பு சரிவே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

எலான் மஸ்க், ட்விட்டர்
எலான் மஸ்க், ட்விட்டர்

2021-ல் டெஸ்லாவின் சந்தை மூலதனம் 1 டிரில்லியன் டாலரைத் தாண்டியதன் மூலம் ஆப்பிள், மைக்ரோ சாஃப்ட், அமேசான். மற்றும் கூகுள் போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டியில் இணைந்ததால், 2021 மஸ்க்குக்கு ஒரு முக்கியமான ஆண்டாக இருந்தது.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, 2021 நவம்பர் 4-ல் மஸ்க்கின் பங்குகள் 340 பில்லியன் டாலராக உயர்ந்தபோது, அவர் உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றார். ஆனால் ஜெஃப் பெசோஸுக்குப் பிறகு, 200 பில்லியன் டாலர்களை இழந்த இரண்டாவது நபர் மஸ்க் ஆவார். இருப்பினும், அதன்பிறகு, அவர் எந்த லாபத்தையும் காணவில்லை. ப்ளூம்பெர்க் வெளியிட்ட பில்லியனர்கள் குறியீட்டில், மஸ்க் முதலிடத்தில் இருந்தார், மஸ்கின் நிகர சொத்து மதிப்பு முன்பு 338 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது அது 137 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

 ட்விட்டர்
ட்விட்டர்

விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான `ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன்’  நிறுவனத்தில், எலான் மஸ்க்கின் பங்கு 44.8 பில்லியன் டாலர் ஆகும். அதாவது, `ஸ்பேஸ் எக்ஸ்’ஸில் மஸ்க், தற்போது 42.2% பங்கு வைத்திருக்கிறார் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

மஸ்க், அமெரிக்க சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரைக் கையகப்படுத்துதலுக்காக நிதியளிக்க, தனது டெஸ்லாவின் 23 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள (USD)  பங்கை விற்றுள்ளார். இதன் மூலம் 2022-ல் டெஸ்லாவின் பங்கு மதிப்பு 65% சரிந்தது.

ட்விட்டரை மஸ்க் கையகப்படுத்திய பின்பு பல நிறுவனங்கள், ட்விட்டர் சமூக ஊடகத் தளங்களில் விளம்பரம் செய்வதை நிறுத்திவிட்டன. இதனால் ட்விட்டர் தனது விளம்பர வருவாயைப் பெருமளவு இழந்தது.

இந்நிலையில், மஸ்க் தனிப்பட்ட முறையில் நடத்திய கருத்துக் கணிப்பில், 58% வாக்காளர்கள் மஸ்க் ட்விட்டரிலிருந்து விலக வேண்டும் என்பதே  தங்களது விருப்பமென பலரும் தெரிவித்திருந்தனர்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்
pixabay

அமெரிக்க பெடரல் ரிசர்வ், வட்டி விகிதங்களை வேகமாக உயர்த்தும் முடிவு பற்றி பலமுறை ட்வீட் செய்து வரும் எலான் மஸ்க், டெஸ்லா மீது எந்தவித அக்கறையும் செலுத்துவதில்லை.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 16-ம் தேதி மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், ``டெஸ்லா முன் எப்போதையும் விட சிறப்பாக செயல்படுகிறது! பெடரல் ரிசர்வ் வங்கியை நாங்கள் கட்டுப்படுத்தவில்லை. அதுதான் இங்குள்ள உண்மையான பிரச்சனை” எனப் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அடுத்தடுத்து ஆட்கள் குறைப்பு, ப்ளூ டிக் கட்டணம், அலுவலக செலவு குறைப்பு, தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம், துர்நாற்றம் வீசும் அலுவலக கழிவறை என பல சர்ச்சைகளில் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் பல முன்னணி நிறுவங்கள் மற்றும் பிரபலங்கள் ட்விட்டரில் விளம்பரம் கொடுக்க விரும்புவதில்லை எனக் கூறுகின்றனர்.

ட்விட்டர்
ட்விட்டர்

இந்நிலையில் தற்போது கலிபோர்னியாவில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் அலுவலகம் 1.36 லட்சம் டாலர் வாடகையை செலுத்தாமல்  பாக்கி வைத்துள்ளதாக அதன்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கெனவே டிசம்பர் 16-ம் தேதி 1,36,250 டாலர் வாடகையை ஐந்து நாள்களுக்குள் செலுத்த எச்சரிகை செய்து ட்விட்டர் நிறுவனத்துக்கு கொலம்பியா ரெய்ட் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது. அதன் பிறகும் ட்விட்டர் நிறுவனம் வாடகை செலுத்தவில்லை என்பதால்  சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மாகாண நீதிமன்றத்தில், ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

இதேபோல, இரண்டு தனி விமானங்களுக்கான வாடகையை செலுத்தவில்லை என ட்விட்டர் நிறுவனம் மீது தனியாக நீதிமன்றத்தில்  வழக்கு உள்ளது. இந்நிலையில், ``இந்த ஒரு அலுவலகம் மட்டுமல்ல... உலகம் முழுவதும் உள்ள மற்ற எல்லா அலுவலகங்களுக்கும் ட்விட்டர் நிறுவனம் வாடகை செலுத்தாமல் உள்ளது” என  நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.