தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

‘ஜாலியா ஓட்டிக்கிட்டு போங்க...’ இ-பைக் சேவையில் பெங்களூரைக் கலக்கும் ‘யூலு’ ஸ்டார்ட்அப்!

‘யூலு’ ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
News
‘யூலு’ ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப்

இ-பைக்குகள்தான் இன்றைக்கு பலரும் பயன்படுத்தும் வாகனமாக மாறி வருகிறது. இந்தியாவின் ‘சிலிக்கான் வேலி’ என அழைக்கப்படும் பெங்களூரு வில் இன்றைக்கு எலெக்ட் ரானிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘இ–சைக்கிள், ஸ்கூட்டர், பைக், பஸ், ஆட்டோ’ என பெங்களூரு ஒரே இ-வாகனங் களின் மயமாக இருக்கிறது.

இந்த வகையில், ‘யூலு (Yulu)’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் 2017-ல் தொடங்கிய, ‘இ–சைக்கிள் மற்றும் இ– பைக்’ சேவை, பெங்களூரு மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாததாக உருவெடுத்துள்ளது.

‘ஜாலியா ஓட்டிக்கிட்டு போங்க...’ இ-பைக் சேவையில் பெங்களூரைக் கலக்கும் ‘யூலு’ ஸ்டார்ட்அப்!

அப்படி என்ன சிறப்பு?

இந்த நிறுவனம், ‘மூவ்’ என்ற பெயரில் இ-சைக்கிள், ‘மிராக்கில்’ மற்றும் ‘டெக்ஸ்’ என்ற பெயர்களில் இ-பைக்கு களை வெளியிட்டுள்ளன. பெங்களூரு நகரம் முழுவதும், 70-க்கும் மேற்பட்ட மையங் களில் 600-க்கும் மேற்பட்ட பைக்குகளை வாடகைக்கு விடுகின்றன.

யூலு என்ற மொபைல் ஆப் டவுன்லோடு செய்து, அருகில் உள்ள ‘பைக் ஸ்டேஷன்’களைத் மக்கள் தெரிந்துகொள்ளலாம். அங்கு சென்று, மொபைல் ஆப் வாயிலாக, அங்குள்ள பைக், சைக்கிளைத் தேர்வு செய்து அதிலுள்ள ‘க்யூ ஆர்’ கோடை ‘ஸ்கேன்’ செய்து, ஒரு நாளைக்கு 200 ரூபாய் வீதம் அல்லது மணிக்கு இவ்வளவு எனப் பணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

நீங்கள் மொபைலை ‘ஆன்’ செய்தால் மட்டுமே பைக்கை இயக்க முடியும்; ‘ஆஃப்’ செய்தால், பைக் ‘லாக்’ ஆகிவிடும். இன்டர்நெட் கனெக்‌ஷனுடன் பைக் இயக்கப்பட்டுள்ளதால், மொபைல் ‘ஆப்’ வாயிலாக மட்டுமே வாகனத்தை ‘ஆன்’ அல்லது ‘ஆப்’ செய்ய முடியும்.

‘ஜாலியா ஓட்டிக்கிட்டு போங்க...’ இ-பைக் சேவையில் பெங்களூரைக் கலக்கும் ‘யூலு’ ஸ்டார்ட்அப்!

வருமானமும் வாழ்க்கையும் தருகிறது ‘யூலு’...

பெங்களூருவில் சாதாரண மக்களைவிட அதிக அளவில், உணவு டெலிவரி மற்றும் பார்சல் டெலிவரி செய்வோர் இந்த பைக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பைக் பயன்படுத்தும் உணவு டெலிவரி பணியாளர்கள் சிலரிடம் பேசினோம்...

‘‘யூலு பைக் வந்ததுக்கு அப்புறமா எங்களுக்கு புதிய நம்பிக்கையும் வாழ்க்கையும் கிடைச்சிருக்கு. நாள் முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கும் கஸ்டமர்களுக்கு உணவு டெலிவரி செய்றதுக்கு எங்களோட சொந்த பைக்கைப் பயன்படுத்தினா, தினமும் பெட்ரோலுக்கே 500 ரூபாய்க்கு மேல செலவாகுது. 2,000 கிலோ மீட்டருக்கு ஒரு சர்வீஸ், தேய்மானம்னு பல செலவுகள் ஆகுது. பைக் இல்லைனா டெலிவரி வேலை செய்ய முடியாது.

ஆனா, அந்த நிலைமைய மாத்தி அமைச்சிருக்கு யூலு. இந்த பைக்கைப் பயன்படுத்துறதால எங்களுக்கு செலவு மிகவும் குறைவு. ஒரு நாளைக்கு 200 ரூபாய் கொடுத்து, நாள் முழுக்க எல்லைகளே இல்லாம பயணிக்க முடியுது. ஒரு சார்ஜ்ல 50 – 55 கிலோ மீட்டர் வரை போகலாம். சார்ஜ் தீரும்போது பக்கத்துல இருக்குற ‘பைக் ஸ்டேஷன்’ அல்லது ‘மேக்ஸ் ஸ்டேஷன்’ போய், வேற பேட்டரி அல்லது பைக்கையே மாத்திக்கலாம்.

இந்த பைக்கை ஓட்ட லைசென்ஸ் வேண்டாம். முன்பகுதியில நல்ல ஸ்பேஸ் இருக்கறதுனால, டெலிவரிக்கான பொருள்களையும் வச்சுக்கறோம். ஸ்டூடண்ட்ஸ், வேலைக்குப் போய்க்கிட்டே பார்ட் டைம் டெலிவரி சார்ந்த வேலை செய்றவங்களுக்கு ‘யூலு’ பைக் வரம்’’ என மகிழ்ச்சியாகத் தெரிவித்தனர்.

ஒரு நாளைக்கு ரூ.200 மட்டுமே...

‘யூலு’ சேவை நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளர் களிடம் பேசினோம். ‘‘பெங்களூர் நகர் முழுவதும் ‘யூலு’ சர்வீஸ் இருக்கிறது. ஆறு நாள்கள் வரையில் வாடகைக்கு எடுத்தால், ஒரு நாளைக்கு 300 ரூபாய்; 7 நாள்களுக்கு மேல் வாடகைக்கு எடுத்தால் ஒரு நாளைக்கு 200 ரூபாய் வீதம் வாடகைக்கு வழங்கு கிறோம்.

‘பைக் ஸ்டேஷன்’ அமைக்கவும் பெரிதாக செலவு செய்வதில்லை. பெரிய நிறுவனங்களில் நுழைவுப் பகுதியில், அந்த நிறுவனங்களிடம் அனுமதி பெற்று, நுழைவுவாயில் கேமராக்கள் அருகே ‘பைக் ஸ்டேஷன்’ அமைக்கிறோம். மேலும், பேட்டரி கடைகள் வைத்துள்ளோருடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, அவர்களுக்குப் பணம் செலுத்தி, ‘பைக்’ பேட்டரிகள் சார்ஜ் செய்துகொள்கிறோம். ஒரு சார்ஜுக்கு 50 – 55 கிலோ மீட்டர் தொலைவும் அதிகபட்சமாக 40 – 50 கி.மீ வேகத்தில் பயணிக்கலாம்.

பைக் முழுமையாக இன்டர்நெட் கனெக்‌ஷன், ஜி.பி.எஸ்-வுடன் இருப்பதால், திருட்டு போகும் என்ற அபாயம் இல்லை. வாடகைக்கு எடுப்போரும் அச்சமின்றி எங்கு வேண்டுமானாலும் நிறுத்திச் செல்லலாம்.

பைக்கில் ஸ்டிக்கர் மற்றும் லேபில் ஒட்ட வைத்து, பெரு நிறுவனங்களின் விளம்பரங்களையும் வெளியிடுகிறோம். மக்கள் விரும்பும் இடங்களிலும் பைக் ஸ்டேஷன் அமைத்து வருகிறோம். ஊர் சுற்ற நினைப்பவர்கள் இ – சைக்கிள், பைக் பயன்படுத்துகின்றனர். டெலிவரி தொடர்பான பணி செய்வோர் எனப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்’’ என்றனர்.

‘ஜாலியா ஓட்டிக்கிட்டு போங்க...’ இ-பைக் சேவையில் பெங்களூரைக் கலக்கும் ‘யூலு’ ஸ்டார்ட்அப்!

காற்று மாசுபாட்டைத் தடுக்கும் ‘யூலு’...

அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டைத் தடுக்கவும், மக்களுக்கு எளிதாக வாகன வசதி ஏற்படுத்த வும் நினைத்து, ‘யூலு’ நிறுவனம் இந்த சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்துக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.

இந்த நிறுவனம் பெங்களூரு வில் தொடங்கி, இன்று, மும்பை, டெல்லி என பல மெட்ரோ பாலிடன் நகரங்களில் சேவை யைப் பரவலாக்கி வருவதுடன், கர்நாடகாவில் அடுத்த ஐந்தாண்டுக்குள் ரூ.1,200 கோடி மதிப்பட்டில், ஒரு லட்சம் வாகனங்களை சேவை தளத் துக்குக் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளது. இதற்காக கர்நாடக அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதாக இந்த நிறுவனம் சொல்லி இருக்கிறது. ‘யூலு’ மட்டுமன்றி, பெங்களூரில் ஏத்தர் எனர்ஜி (Ather Energy), பவுன்ஸ் (Bounce) என்கிற நிறுவனங்களும், ‘இ–ஸ்கூட்டர்’ சேவைகளை வழங்கி வருகிறது.

சென்னையில் இல்லையே...

சென்னையைப் பொறுத்த வரை, எலெக்ட்ரானிக் வாகனங் களின் பயன்பாடு, பெங்களூரு அளவுக்கு இல்லை என்பதே உண்மை. பெங்களூருவுக்கு அடுத்தபடியாக சென்னை அசுர வளர்ச்சி அடைந்து வருவதால், ‘யூலு’ போன்ற ஸ்டார்ட்அப் சென்னையில் தொடங்கினால், வெற்றி அடைவதற்கான வாய்ப்பு நிறையவே இருப்பதை மறுப் பதற்கில்லை. தமிழக அரசு ‘யூலு’ போன்ற நிறுவனங்களை சென்னையில் சேவையைத் தொடங்க ஊக்குவித்தால், காற்று மாசுபாடு குறைவதுடன், பலருக்கும் தொழில் வாய்ப்பு உருவாகும் என்கிறார்கள் பலர்.

இ-பைக்குகளை எல்லோரும் பயன்படுத்தத் தேவையான கட்டுமான அமைப்புகள் இன்னும் சென்னையில் வந்து விடவில்லை என்றாலும் கூடிய விரைவில் வந்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!