Published:Updated:

``இந்தியாவில் சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்ற புதிய மாடலை உருவாக்க வேண்டும்!" - ஸ்ரீதர் வேம்பு

ஸ்ரீதர் வேம்பு
News
ஸ்ரீதர் வேம்பு

சிலிக்கான் பள்ளத்தாக்கு மாடல் எப்போதும் அதிவேகமாகச் செயல்படும். மேலும் ஆள் குறைப்பு நடவடிக்கைகளும் எளிதில் நடைபெறும். இந்தியாவுக்கு இந்தப் பெரியளவிலான ஆள்குறைப்பு நடவடிக்கை இதுவே முதல்முறை என்பதால் நாம் இதைப் பற்றி பெரிய அளவில் பேசி வருகிறோம்.

``இந்தியாவில் சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்ற புதிய மாடலை உருவாக்க வேண்டும்!" - ஸ்ரீதர் வேம்பு

சிலிக்கான் பள்ளத்தாக்கு மாடல் எப்போதும் அதிவேகமாகச் செயல்படும். மேலும் ஆள் குறைப்பு நடவடிக்கைகளும் எளிதில் நடைபெறும். இந்தியாவுக்கு இந்தப் பெரியளவிலான ஆள்குறைப்பு நடவடிக்கை இதுவே முதல்முறை என்பதால் நாம் இதைப் பற்றி பெரிய அளவில் பேசி வருகிறோம்.

Published:Updated:
ஸ்ரீதர் வேம்பு
News
ஸ்ரீதர் வேம்பு

கடந்த இரண்டு வாரங்களாக ட்விட்டர், மெட்டா போன்ற பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது பன்னாட்டு நிறுவன ஊழியர்களுக்கு கலக்கத்தைக் கிளப்பியுள்ளது.

ஜோஹோ (Zoho)
ஜோஹோ (Zoho)
www.zoho.com

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் குறித்து ஜோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளதாவது, ``சிலிக்கான் பள்ளத்தாக்கு மாடல் என்பது எப்போதும் கடந்த காலங்களில் பெரிய ஏற்றங்களையும் பெரிய இறக்கங்களையும் சந்தித்துள்ளது. ஆனால், அது இந்தியாவை பெரியளவில் பாதிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இந்தியாவிலும் நாம் இந்த சிலிக்கான் பள்ளத்தாக்கு மாடலை இறக்குமதி செய்துள்ளோம். அதனால்தான் இந்த ஏற்ற-இறக்க சுழற்சியில் நாம் மாட்டியுள்ளோம். இந்தியாவுக்கு இந்தப் பெரியளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கை இதுவே முதல்முறை என்பதால் நாம் இதைப் பற்றி பெரியளவில் பேசி வருகிறோம். ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த நடவடிக்கை மிகவும் சாதாரணமானவை.

ஆட்குறைப்பு (Layoff)
ஆட்குறைப்பு (Layoff)
Moneycontrol

சிலிக்கான் பள்ளத்தாக்கு மாடல் எப்போதும் அதிவேகமாகச் செயல்படும். மேலும், ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் எளிதில் நடைபெறும். உதாரணமாக, மெட்டா போன்ற நிறுவனங்கள் உலகில் எந்த மூலையில் சிறந்த வல்லுநர்கள் இருந்தாலும், அவர்களை பணியில் அமர்த்திக்கொள்ளும். ஒருவேளை அந்த நிறுவனத்துக்கு பொருளாதார சிக்கல் போன்ற ஏதாவது சிக்கல் நேர்ந்தால், எளிதாக அவர்களை வேலையில் இருந்து நீக்கிவிடும். அந்த ஊழியர்களை பிற பெரிய நிறுவனங்கள் பணியில் அமர்த்திக்கொள்ளும் என்பதால் இதைப் பற்றிய கவலை மெட்டா போன்ற நிறுவனங்களுக்கு கிடையாது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் பலியானவர்களை பணியில் அமர்த்திக்கொள்ள இந்தியாவில் பிற பெரிய நிறுவனங்கள் இல்லை என்பதே கசப்பான உண்மை ஆகும்.

Slowing economic growth
Slowing economic growth

2008-ம் ஆண்டு சர்வதேச பொருளாதார தேக்கநிலை வரலாற்றை வைத்து இந்தப் பொருளாதார மந்தநிலையை நாங்கள் ஏற்கெனவே கணித்திருந்ததால், அதற்கேற்ற நடவடிக்கைகளை எங்கள் நிறுவனத்தில் முன்னரே எடுத்துவிட்டோம்.

நான் எப்போதும் சிலிக்கான் பள்ளத்தாக்கு மாடல் பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவேன். ஆனால், அதை அப்படியே இந்தியாவில் செயல்படுத்தக் கூடாது. நமது நாட்டுக்கேற்ப பணி கலாசாரத்தை நாமே உருவாக்க வேண்டும்.

ஜோஹோ | Zoho
ஜோஹோ | Zoho

இதனால்தான் நமது திறனை பெருக்குவதில் நாங்கள் அதிக முதலீடு செய்கிறோம். திறமையான கிராமப்புற இளைஞர்கள் தொழில்நுட்பம் போன்ற மெயின் ஸ்ட்ரீமுக்கு கொண்டு வர வேண்டும்" என்று ஸ்ரீதர் வேம்பு பேசியுள்ளார்.