Published:Updated:

அமெரிக்க முதலீட்டுக்கு ஓ.கே, சீன முதலீட்டுக்கு நோ! பாரபட்சம் பார்க்கிறதா இந்தியா? #DoubtOfCommonMan

இந்தியப் பொருளாதாரம்
News
இந்தியப் பொருளாதாரம்

"ஒரு நாடு, மற்றொரு நாட்டில் முதலீடு செய்வதால், முதலீடு செய்யப்படும் நாட்டிற்குத்தான், வேலைவாய்ப்பு, உற்பத்தி, வளர்ச்சி என அதிக பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் வெளிநாட்டு முதலீடுகள் வரவேற்கத்தக்கவையே."

Published:Updated:

அமெரிக்க முதலீட்டுக்கு ஓ.கே, சீன முதலீட்டுக்கு நோ! பாரபட்சம் பார்க்கிறதா இந்தியா? #DoubtOfCommonMan

"ஒரு நாடு, மற்றொரு நாட்டில் முதலீடு செய்வதால், முதலீடு செய்யப்படும் நாட்டிற்குத்தான், வேலைவாய்ப்பு, உற்பத்தி, வளர்ச்சி என அதிக பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் வெளிநாட்டு முதலீடுகள் வரவேற்கத்தக்கவையே."

இந்தியப் பொருளாதாரம்
News
இந்தியப் பொருளாதாரம்
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "ஹெச்டிஎஃப்சி வங்கியின் 1% பங்கை சீனா வாங்கியதற்கு கொதித்தெழுந்தது மத்திய அரசு. ஆனால், தற்போது இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் 10% பங்குகளை அமெரிக்க நிறுவனமான ஃபேஸ்புக் வாங்கியுள்ளதற்கு ஆட்சேபனை ஏதும் தெரிவிக்காமல் அமைதிகாக்கிறதே ஏன்?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் விகடன் வாசகர் கே.ஆர்.உபேந்திரன்.
Doubt of a common man
Doubt of a common man
Doubt of a common man

வாசகரின் இந்தக் கேள்வியை சில பொருளாதார நிபுணர்களிடம் முன்வைத்து விளக்கம் கேட்டோம்.

பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் நம்மிடம் பேசினார்.

"வளரும் நாடான இந்தியாவின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் மிக முக்கியமானவை. இன்று, உலக அளவில் மிகப் பெரிய சந்தையாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. நம் நாட்டில் இயற்கை வளங்கள் என்னதான் நிறைந்து காணப்பட்டாலும் அவற்றை வைத்து மட்டுமே, நம்மால் நம்முடைய பொருளாதாரத்தை மேம்படுத்திவிட முடியாது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் கண்டிப்பாகத் தேவை.

வளரும் நாடாக உள்ள போதிலும், இந்தியா உலக அளவில் பொருளாதார சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியலில் அங்கம் வகிக்கிறது. ஆரம்ப காலங்களில், இந்தியாவில் அந்நிய முதலீடு என்பது சாத்தியமற்றதாகவே இருந்துவந்தது. ஆனால், காலப்போக்கில் வெளிநாட்டு முதலீடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த இந்தியா, அதை ஈர்க்க தனது கொள்கையில் கொஞ்சம் தளர்வை ஏற்படுத்தியது. அதன் பிறகு, வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் ஆர்வத்துடன் முதலீடு செய்ய முன்வந்தன. இந்தியாவில் நேரடி முதலீடுகள் செய்வது, தங்கள் நிறுவனத்தின் கிளைகளைக் கொண்டுவருவது என வெவ்வேறு வகைகளில் முதலீடுகள் வந்தன.

ஒரு நாடு, மற்றொரு நாட்டில் முதலீடு செய்வதால், முதலீடு செய்யப்படும் நாட்டிற்குத்தான், வேலைவாய்ப்பு, உற்பத்தி, வளர்ச்சி என அதிக பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் வெளிநாட்டு முதலீடுகள் வரவேற்கத்தக்கவையே.

இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம்

வெளிநாட்டு நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) மற்றும் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடு (எஃப்.பி.ஐ) ஆகிய இரண்டு முறைகளில் வெளிநாட்டு முதலீடுகள் கொண்டுவரப்படுகின்றன.

நம் நாட்டின் நிறுவனங்களில் வெளிநாட்டினர் நேரடியாக முதலீடு செய்வதே, வெளிநாட்டு நேரடி முதலீடாகும். இந்திய நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்குவதன் மூலம் நடக்கும் முதலீடு வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடாகும்.

இந்த இரண்டு வகை முதலீடுகளுமே இந்தியாவுக்கு பயன்தரக் கூடியவையே. ஆனால், சமீப காலமாக இந்த வெளிநாட்டு முதலீடுகளில் மத்திய அரசு சில அரசியல் கொள்கை முடிவுகளை எடுத்துள்ளது. இந்தக் கொள்கை முடிவு, அமெரிக்காவுக்கு சாதகமாகவே இருக்கிறது.

தற்போது, அமெரிக்காவுக்கு மருந்துகள் அனுப்பிய விஷயத்தில் கூட, அந்நாட்டின் அழுத்தத்துக்கு பணிந்துதான் ஏற்றுமதி செய்தது இந்தியா.
ஜோதி சிவஞானம், பொருளாதார நிபுணர்

1990-களுக்குப் பிறகு, உலகமயமாக்கலை முன்னிறுத்தி வெளிநாட்டு முதலீடுகளுக்கு நாம் முன்னுரிமை கொடுத்து வருகிறோம். இன்றளவும் நம்முடைய வளர்ச்சிக்காக உலக நாடுகளின் முதலீட்டை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படியிருக்க, சீனாவின் முதலீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், அமெரிக்காவின் முதலீடுகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து வரவேற்பதும் நல்லதல்ல.

இந்தியாவில் இயங்கிக்கொண்டிருக்கும் பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் சீனா முதலீடு செய்திருக்கிறது. சீனா, நம் அண்டை நாடு என்பதால், அண்டை நாட்டு உறவைப் பேணுவதற்காக அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார சக்திவாய்ந்த நாடாக உள்ள சீனா, எந்த வகையிலும் அமெரிக்காவுக்கு சளைத்ததில்லை. இன்று வேண்டுமானால் அமெரிக்காவும் சீனாவும், எலியும் பூனையுமாக இருக்கலாம். ஆனால், நாளையே இரு நாடுகளுக்கும் இடையில் புது ஒப்பந்தம் போடப்பட்டால் பாதிப்பு இந்தியாவுக்குத்தான்.

தற்போது, அமெரிக்காவுக்கு மருந்துகள் அனுப்பிய விஷயத்தில் கூட, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு இணங்கித்தான் இந்தியா ஏற்றுமதி செய்தது.

Doubt of a common man
Doubt of a common man

ஏற்கெனவே, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களுக்கு அமெரிக்கா இறக்குமதித் தடையை விதித்திருந்தது. கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான மருந்துகளை அமெரிக்காவுக்கு அனுப்பிய சூழலிலும்கூட, அந்தத் தடையை விலக்கும்படி அமெரிக்காவை இந்தியா வலியுறுத்தவில்லை. இன்று உலக நாடுகள் பலவும் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முனைப்பு காட்டிவருகின்ற நிலையில், சீனா விஷயத்தில் இப்படிச் செய்வது சரியல்ல. நாம் இந்த நேரத்தில், வெளிநாட்டு முதலீடுகளை எப்படி அதிகரிப்பது என்பது குறித்துதான் யோசிக்க வேண்டும். இந்த நாடுதான் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும், இந்த நாடு செய்யக் கூடாது என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பது நம்முடைய பொருளாதார வளர்ச்சியைத்தான் பாதிக்கும்" என்கிறார், பொருளாதார நிபுணரான ஜோதி சிவஞானம்.

இதுகுறித்து பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன் கூறும்போது, "சீனா இந்தியாவில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் 1 சதவிகிதப் பங்கை மட்டுமே வாங்கி இருக்கிறது. சீனா முதலீடு செய்திருக்கும் இந்த வங்கியை ஆரம்பித்தது மட்டும்தான் இந்தியர். ஆனால், அதன் 75% பங்குகளில் வெளிநாட்டவர்கள்தான் முதலீடு செய்திருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, சீனா இந்தியாவில் முதலீடு செய்துவிட்டது என்று விவாதம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை, நம் நாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அப்படி முதலீடு செய்தால்தான் அந்த நிறுவனங்கள் நிதிச் சிக்கல் இல்லாமல் இயங்க முடியும். வளர்ச்சி காண முடியும். ஆனால், நம்மைப்பொறுத்தவரை, வங்கி வைப்பு நிதி, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதில்தான் முனைப்பு காட்டி வருகிறோம். நம் நாட்டு நிறுவனப் பங்குகளில் நாமே முதலீடு செய்யத் தவறும்பட்சத்தில், அந்நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படுகிறது. அந்தச் சூழலில், வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கவே செய்வர். அவர்களுக்கு, தொடர்ந்து இயங்க நிதி தேவை. அது எந்த வழியில் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வர்.

சீனா, இந்தியாவில் முதலீடு செய்த அடுத்த நாளே இந்திய அரசு, வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையில் மாற்றங்களை மேற்கொண்டது. இந்தியாவின் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் அண்டை நாடுகளும் நாட்டில் அரசின் அனுமதியின்றி நேரடி முதலீடு செய்வதற்குத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.

எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் அண்டை நாடுகள், அனுமதியின்றி நேரடி முதலீடு செய்வதற்குத் தடைவிதித்துள்ளது இந்தியா.
சீனா
சீனா
அந்நிய நேரடி முதலீடுகளில், மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் தற்போதைய விதிமுறைகளினால், இனிமேல் இந்தியாவில் ஆட்டோமேட்டிக் ரூட் வழியாக நம்முடைய அண்டை நாடுகளால் முதலீடு செய்ய முடியாது.
நாகப்பன், பங்குசந்தை நிபுணர்

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டில் முதலீடு செய்வதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, ஆட்டோமேட்டிக் ரூட் (automatic route ) மற்றொன்று, கவர்மென்ட் ரூட் (government route). ஆட்டோமேட்டிக் ரூட்டில் முதலீடு செய்யவிருக்கும் நாடு, முன்கூட்டியே அந்த நாட்டிற்கு எந்தெந்தத் துறைகளில் எவ்வளவு முதலீடு செய்யப்போகிறது என்பது குறித்து தெரிவித்துவிடும். பின்னர், தேவைப்படும் நேரங்களில் விருப்பத்திற்கேற்ப பல்வேறு துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளும். இவ்வகையான முதலீடுகளுக்கு அரசின் அனுமதியை நாட வேண்டியதில்லை.

Doubt of a common man
Doubt of a common man

ஆனால், கவர்மென்ட் ரூட்டைப் பொறுத்தவரையில் ஒரு நாட்டில் முதலீடு செய்யுமுன், அந்நாட்டு அரசாங்கத்தின் கவனத்துக்கு விஷயத்தை எடுத்துச் சென்று, முறையாக திட்டத்தை விளக்கி, முதலீடு செய்வதற்கு அனுமதி கோர வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களின் விண்ணப்பத்தை ஆராய்ந்து, எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே அரசு அனுமதிக்கும்.

மத்திய அரசு, தற்போது கொண்டுவந்திருக்கும் விதிமுறைகளால், இனிமேல் இந்தியாவில் ஆட்டோமேட்டிக் ரூட் வழியாக நம் அண்டை நாடுகளால் முதலீடு செய்ய முடியாது. அப்படியானால் நம் நிறுவனங்களுக்கு ஏற்படவுள்ள நிதி நெருக்கடியை எதிர்கொள்வதற்கு, நம்முடைய நிறுவனங்களின் பங்குகளில், நம் மக்கள் முதலீடு செய்வதை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு மத்திய அரசு வழிவகுக்க வேண்டும். இந்தியர்களின் முதலீடு குறைவாக இருப்பதால்தான், வெளிநாட்டு முதலீட்டாளர்களைப் பெரிதும் நம்பவேண்டியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இந்தியா தற்சார்பு பொருளாதார நாடாக இருக்க வேண்டும். ஆனால், நாம் எல்லாவற்றிற்கும் மற்றவர்களைச் சார்ந்தே இருந்து வருகிறோம். இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும்" என்றார்.

இந்தியாவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் முக்கியம்தான் என்றாலும், அதில் சிலவற்றை யோசித்து அனுமதிக்க வேண்டிய கட்டாயமும் அரசுக்கு இருக்கிறது. கொரோனா மாதிரியான பேரிடர் காலங்களில், இதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமாகிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரி நாடுகள் என்றால், சீனா, பாகிஸ்தானுக்கு நட்புரீதியாக நெருக்கமான நாடு. சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எப்போதுமே அச்சுறுத்தலான நாடுகள்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சில வருடங்களுக்கு முன்புகூட இந்திய எல்லையில் அத்துமீறி சீன ராணுவம் நடத்திய அணிவகுப்பு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தியாவின் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளிடம்தான், இந்தியா எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏற்கெனவே, சீனா பல நாடுகளில் முதலீடு செய்யத்தொடங்கி, பின்னர் அந்த நிறுவனங்களையே தனதாக்கி ஆதிக்கம் செலுத்தியதுண்டு. இதே நிலை இந்தியாவுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது.

வெளிநாட்டு முதலீடு
வெளிநாட்டு முதலீடு
vikatan

நம் அண்டை நாடுகளான, சீனா, பாகிஸ்தானால், நமக்கு ராணுவத் தாக்குதல், உயிரியல் போர் மற்றும் பொருளாதார தாக்குதல் என மூன்று வழிகளில் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வகையில்தான் தற்போது சீனாவின் முதலீட்டுக்கு விதிமுறைகளைக் கடுமையாக்கியிருக்கிறது. ஆனால், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல்கள் ஏற்படப்போவதில்லை. பொருளாதாரத் தடை அச்சுறுத்தல் குறித்து மட்டுமே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. ஆனால், சமீபகாலமாக இந்தியாவும் அமெரிக்காவும் நல்ல நட்புணர்வுடன்தான் இருந்து வருகின்றன. எனவே, அமெரிக்காவுடன் நாம் தாராளமாக அச்சமின்றி வணிக உறவை மேம்படுத்தலாம்.

எனவே, இந்த நேரத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோவின் 10% பங்குகளை அமெரிக்க நிறுவனமான ஃபேஸ்புக் வாங்கியிருப்பது வரவேற்கத்தக்கதே. இந்த முதலீட்டின் மூலம் ஜியோ நிறுவனம் நல்ல முறையில் பயனடைய உள்ளது.

Doubt of a common man
Doubt of a common man

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!