Published:Updated:

130 டாலர் விற்ற கச்சா எண்ணெய் இன்று 13 டாலர்... பெட்ரோல் விலை ஏன் குறைவில்லை?! #DoubtOfCommonMan

பெட்ரோல், டீசல்
News
பெட்ரோல், டீசல்

கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்தே பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

Published:Updated:

130 டாலர் விற்ற கச்சா எண்ணெய் இன்று 13 டாலர்... பெட்ரோல் விலை ஏன் குறைவில்லை?! #DoubtOfCommonMan

கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்தே பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல்
News
பெட்ரோல், டீசல்
விகடன் #DoubtOfCommonMan பக்கத்தில், "130 டாலர் இருந்த கச்சா எண்ணெய் இன்று 13 டாலராகக் குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல் விலை குறையவேயில்லை?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் விகடன் வாசகர் ராஜன். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை.
Doubt of a common man
Doubt of a common man

உலக அளவில் பெட்ரோல் மற்றும் டீசலை அதிக விலைக்கு விற்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. சமீபகாலமாக கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிவைக் கண்டுவரும் போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை குறைந்த பாடில்லை. லிட்டருக்கு பைசா கணக்கில் குறைந்தால், விரைவிலேயே ரூபாய் கணக்கில் ஏற்றம் கண்டுவிடுகிறது.

சரி, பெட்ரோல் மற்றும் டீசலின் தேவையும் பயன்பாடும் அதிகளவில் இருக்கும்போதுதான் இந்த நிலை என்றால் கொரோனா காரணமாகப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள இந்த நேரத்திலும் பெட்ரோல் டீசல் விலை அதே உச்சத்தில்தான் இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை சரிவு
கச்சா எண்ணெய் விலை சரிவு

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மட்டும் குறைவதில்லை என்ற குற்றசாட்டையும் மக்கள் மத்திய அரசுக்கு எதிராக முன் வைக்கின்றனர். வாசகரின் கேள்விக்கு விடை காண பேராசிரியர் ஜோதி சிவஞானம் அவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம்.

"சமீபகாலமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிவைக் கண்டுவருகிறது, வாசகர் கூறியதைப்போல் 2008-ம் ஆண்டில் 140 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய்யின் விலை, இன்று 20 டாலர்களுக்கும் குறைவாகச் சரிந்திருக்கிறது. ஆனால், உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை இவ்வளவு குறைந்துள்ளபோதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை போதுமான அளவு குறையவில்லை. மாறுதலாக பெட்ரோல் விலை ரூ. 70 - 80 என்ற அளவிலும் டீசல் விலை ரூ.60 - 70 என்ற அளவிலும்தான் பயணித்துக்கொண்டிருக்கிறது.

அண்மைகாலமாக கச்சா எண்ணெய்யின் விலை பெரிய அளவில் குறைந்திருக்கிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 70 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய்யின் விலை கொரோனா வைரஸ் பிரச்னை இந்தியாவில் ஆரம்பிப்பதற்கு முன்னரே கிட்டத்தட்ட 80% சதவிகிதம் குறைந்தது.

பெட்ரோல் நிலையங்களில் கூட்டம்
பெட்ரோல் நிலையங்களில் கூட்டம்

இந்தியாவைப் பொறுத்தவரையில் மத்திய அரசு 2010-ம் ஆண்டு வரை 'Administered Price Policy' மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அரசே நிர்ணயித்து வந்தது. அப்போது கச்சா எண்ணெய்யின் விலை சற்றே அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தச் சூழலில் மக்கள் நலன் கருதி மத்திய அரசே மானியங்கள் அளித்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்தது.

ஆனால், 2010-ம் ஆண்டுக்குப் பிறகு, மத்திய அரசு தன் கொள்கையை மாற்றிக்கொண்டது. அதன்படி, பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்கள் வசம் ஒப்படைத்தது. அதாவது, சந்தையை 'டி-ரெகுலேட்' செய்து எண்ணெய் நிறுவனங்கள் வசம் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை வழங்கியது.

2014-ம் ஆண்டில் பாரதிய ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தபிறகு டீசலின் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் வசம் ஒப்படைத்தது. இதனால், எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

பெட்ரோல் பங்குகள்
பெட்ரோல் பங்குகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயரும்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியும், கச்சா எண்ணெய்யின் விலை குறையும்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைத்தும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதுதான் மத்திய அரசின் டைனமிக் கொள்கையின் அடிப்படை. ஆனால், மத்திய அரசு கடந்த 6 வருடங்களாக எண்ணெய் நிறுவனங்களின் விலை நிர்ணயித்தலில் தலையிட்டு கச்சா எண்ணெய் விலை கூடும்போது மட்டும் முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி விடுகிறது. ஆனால், கச்சா எண்ணெய்யின் விலை சரிந்தால் மட்டும் பெட்ரோல் டீசல் விலையை அதே முந்தைய விலையில் லாக் செய்துவிடுகிறது.

அதனால் மக்களுக்கு கச்சா எண்ணெயின் விலை குறைவு பலன்கள் ஒருபோதும் கிடைப்பதில்லை.

குறிப்பாக, கடந்த 40 நாளில் மட்டும் கச்சா எண்ணெய்யின் விலை கிட்டத்தட்ட 80 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. ஆனாலும், மத்திய அரசு தனது டைனமிக் கொள்கையை மாற்றிக் கொண்டு பெட்ரோல் டீசல் விலையை உச்சத்தில் லாக் செய்து விட்டு அந்த விலையிலேயே விற்பனைசெய்து வருகிறது.

கொள்கை படி மத்திய அரசு எந்த விதத்திலும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்வதில் தலையிடக் கூடாது. ஆனால், கடந்த 6 ஆண்டுக்காலமாக மத்திய அரசுதான் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகிறது. உலக சந்தையில் இன்றைய நிலவரப்படி கச்சா எண்ணெய்யின் விலை இந்திய மதிப்பில் லிட்டருக்கு 9.90 காசுகள்தான். ஆனால், அந்தத் தொகையின்மீது பல வகைகளில் வரிகள் மற்றும் செயலாக்கக் கட்டணங்கள் உள்ளடங்குகின்றது. முதலில் கச்சா எண்ணெய் உள்ளே வருவதற்கு நுழைவு வரி போடப்படுகிறது. அதைத் தொடர்ந்து சுத்திகரிப்பு செலவுகள், போக்குவரத்து செலவுகள் மற்றும் இதர செலவுகள் சேர்த்து மொத்தத்தில் லிட்டருக்கு 5 ரூபாய் கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெயின் அடக்க விலை வெறும் ரூபாய் 9.90 காசுகள் தான் மேற்கொண்டு 5 ரூபாய் சேர்த்தால்கூட 15 ரூபாய்தான் ஆகின்றது. இந்தத் தொகையின் மீது மத்திய அரசு 27 ரூபாய் வரையில் கலால் வரி விதிக்கிறது. அதன் பிறகு மாநில அரசுகளுக்கு 17 ரூபாய் வரை மதிப்புகூட்டப்பட்ட வரிகள் செலுத்தப்படுகின்றது. மேற்கூறப்பட்ட வரிகள், இறக்குமதி உட்பட எல்லாச் செலவுகளையும் சேர்த்தால்கூட இன்று விற்பனை செய்யப்படும் விலையைக் காட்டிலும் 10 ரூபாய் குறைவுதான். அந்தத் தொகையைக்கூட மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்காமல் எடுத்துக்கொள்கிறது.
பேராசிரியர் ஜோதி சிவஞானம்
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

இறக்குமதி மற்றும் சுத்திகரிப்பு செலவுகள் சேர்த்து 15 ரூபாய் என்றால், அதன் மீது 75% வரியை மத்திய அரசும் 25% வரியை மாநில அரசும் பெறுகின்றன. இப்படி அடக்க விலையைத் தாண்டி மத்திய மாநில அரசுகளுக்கு வரியாகச் செலுத்தப்படும் தொகை மட்டும் 57 ரூபாய் இன்றைய நிலவரப்படி, புரியும்படி சொல்லப்போனால் அடக்க விலையைவிடக் கூடுதலாக 4 மடங்கு அதிக விலையை நாம் அரசுக்கு செலுத்துகிறோம். இதுபோன்ற அதிகளவு வரித்தொகையை எந்த நாட்டு மக்களும் செலுத்துவதில்லை நாம் மட்டும்தான் செலுத்திகிறோம்" என்றார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of a common man
Doubt of a common man