Published:Updated:

பெண் தொழில் முனைவோருக்கான `உத்யம் சகி’; தமிழகத்தில் 1,070 பெண்கள் பதிவு... வேலூர் முதலிடம்!

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்
News
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்

வேலூர் மாவட்டத்தில் 360 பெண் தொழில்முனைவோர் பதிவு செய்து மாவட்ட ரீதியாக அதிக எண்ணிக்கையைப் பெற்றுள்ளனர். ராணிப்பேட்டையில் 334 பெண்களும், திருவண்ணாமலையில் 210 பெண்களும், சேலத்தில் 163 பெண்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

சிறு குறு நடுத்தர தொழில்களின் உற்பத்தியைப் பெருக்க மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பெண்களுக்கென பிரத்யேகமாகத் தொடங்கப்பட்டதுதான், `உதயம் சகி’ (https://udyam-sakhi.com) என்ற இணையதளம்.

சிறு, குறு தொழில்கள்
சிறு, குறு தொழில்கள்

மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் மூலமாகத் தொடங்கப்பட்ட இந்த இணையதளத்தில், சிறு குறு மற்றும் நடுத்தர பெண் தொழில்முனைவோருக்கான நிதித் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிகழ்வுகள் போன்ற தகவல்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா, உத்யம் சகி இணையதளத்தில் பதிவு செய்த பெண் தொழில் முனைவோர் குறித்த மாவட்ட ரீதியான எழுத்து பூர்வ அறிக்கையை, டிசம்பர் 12-ம் தேதி திங்கள்கிழமையன்று மாநிலங்கள் அவையில் வெளியிட்டார். 

பெண் தொழில் முனைவோருக்கான `உத்யம் சகி’; தமிழகத்தில் 1,070 பெண்கள் பதிவு... வேலூர் முதலிடம்!

அதில், ``2022 அக்டோபர் மாதம் வரை இந்த இணையதளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 1,067 பெண் தொழில்முனைவோர் பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 360 பெண் தொழில் முனைவோர் பதிவு செய்து மாவட்ட ரீதியாக அதிக எண்ணிக்கையைப் பெற்றுள்ளனர். ராணிப்பேட்டையில் 334 பெண்களும், திருவண்ணாமலையில் 210 பெண்களும், சேலத்தில் 163 பெண்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பதிவு எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பெண் தொழில்முனைவோருக்கான உத்யம் சகி இணையதளத்தில் பெண்களின் பதிவுகள் அதிகரிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.