Published:Updated:

பெண் Money - மை டியர் சேமிப்புப் புலிகளே!

பெண் Money  - மை டியர் சேமிப்புப் புலிகளே!
பிரீமியம் ஸ்டோரி
பெண் Money - மை டியர் சேமிப்புப் புலிகளே!

பா.விஜயலட்சுமி

பெண் Money - மை டியர் சேமிப்புப் புலிகளே!

பா.விஜயலட்சுமி

Published:Updated:
பெண் Money  - மை டியர் சேமிப்புப் புலிகளே!
பிரீமியம் ஸ்டோரி
பெண் Money - மை டியர் சேமிப்புப் புலிகளே!
பெண் Money  - மை டியர் சேமிப்புப் புலிகளே!

`வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ - எழுத்தாளர் அம்பையின் பிரபலமான சிறுகதை இது. ஒருகாலத்தில் நம்முடைய நாட்டில் பெண்களுக்கான இடமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது அடுப்படி மட்டும்தான். பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சமூகத்தின் ஏற்ற இறக்கங்களும் மாறிய பிறகுதான், பெண் சமூகமும் ஆண்களுக்கு நிகராக வேலை, பொறுப்பு, பதவி என்று பரந்து விரிந்துள்ளது. ராக்கெட் வேகத்தில் உயரும் விலைவாசியில் ஒருவரின் சம்பளம், குடும்பத்தை நடத்த போதுமானதாக இருப்பதில்லை. அதனாலோ என்னவோ, அலுவலகச் சூழலில் ஆண், பெண் பாகுபாடு இன்றைக்கு இல்லை.

ஆண்களைப் போல பெண்களும் சம்பாதித்தாலும், வாங்கும் சம்பளத்தை முழுவதுமாக கணவனிடம் கொடுத்துவிட்டு மறுநாள் அலுவலகம் செல்ல பேருந்துக் கட்டணத்துக்காக அவரிடம் பணம் கேட்டு நிற்கும் பெண்களும், அப்பாவிடம் கொடுக்க வேண்டிய சம்பளப் பணத்தில் ஐம்பது ரூபாய் செலவழித்தால்கூட அதற்கும் கணக்கு சொல்ல வேண்டிய மகள்களும் இன்னும் இருக்கிறார்கள். பல பெண்களின் வீட்டில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்பட நிதி சார்ந்த எல்லா விஷயங்களிலும் ஆண்கள் ராஜ்ஜியம்தான். பல வீடுகளில் மனைவியின் சேலரி அக்கவுன்ட் டெபிட் கார்டுகூட கணவரிடம்தான் இருக்கிறது.

பெண்ணுரிமை, பெண்களுக்கான சமூகம் என்று பொதுவெளியில் கொண்டாடப்படும் சமூகத்தில் ஏன் இந்த வேறுபாடுகள்? பருப்பு டப்பாவுக்குள்ளும் அரிசிப்பானைக்குள்ளும் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி, தனிவங்கி நடத்திய பெண்களுக்கு சேமிப்பும் நிதி நிர்வாகமும் தெரியாதா என்ன? தங்கத்தை கைகளிலும் கழுத்திலும் ஆபரணங்களாக மாற்றி எதிர்கால முதலீடாக சேமித்தவர்கள்தானே பெண்கள்? எல்லோருக்குள்ளும் இப்படிப் பட்டக் கேள்விகள் எழலாம். ஆனால், பெண்களுக்கு சேமிப்பு, முதலீடு, எதிர்கால வைப்புத்தொகை ஆகியவை குறித்த விழிப்பு உணர்வு இல்லை என்பதே உண்மை.

நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கும் இந்த ஹைடெக் உலகில் மாதாந்தர பட்ஜெட் போடுவதே பெரும்பாடு என்று பெண்கள் நினைக்கத் தொடங்கியதும்... கணவனோ, அப்பாவோ பொறுப்பாக எதிர்காலம் பற்றிய திட்டமிடலை மேற்கொள்வார்கள் என்கிற தப்பி ஓடும் மனநிலையும்தான்... இன்ஷூரன்ஸ், மெடிக்கிளெய்ம், ரிட்டயர்மென்ட் பிளான், பேங்க் அக்கவுன்ட் என்பதையெல்லாம் ஏலியன்களாகப் பார்க்க வைத்துள்ளன. புரியாத வற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் நிலவும் தயக் கமும் இதற்கு முக்கிய காரணம். அந்த நிலையை மாற்றி பெண்களையும் ‘சேமிப்புப் புலி’களாக மாற்றுவதற்கான ஒரு துளி நீர் ஆதாரம்தான் அவள் விகடன் வழங்கும் இந்தப் பகுதி.

பெண் Money  - மை டியர் சேமிப்புப் புலிகளே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேமிப்புத் திட்டங்களை யும் முதலீட்டு வழி முறை களையும் பெண்கள் இவ்வளவு நாட்கள் தூரத்தில் வைத்து பூதக் கண்ணாடியில் பார்த்தது போதும். எத்தனையோ கடினமான சூழ்நிலைகளையும் பொறுப்புகளையும் வாழ்க்கையில் சுமக்கும் பெண்களால் பணப்பரிமாற்றம், வருவாய்க்கான முதலீடு, எதிர்கால சேமிப்புத் திட்டங்களையும் எளிதாகக் கைக்கொள்ள முடியும். வாங்கும் சம்பளத்தை சரியான வழிகளில் முதலீடு செய்யத் திட்டமிடுவதே சேமிப்பின் முதல்கட்டம்.

முதலில் வீட்டுக்கான மாத பட்ஜெட் போடுவதை பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். மளிகைச் சாமான் தொடங்கி, மருந்துப் பொருட்கள் வரை விலை எக்கச்சக்கமாக உயர்ந்திருக்கும் பொருளாதாரச் சிக்கல்கள் நிறைந்த காலகட்டம் இது. அன்றாடக் காய்கறி, பால், மளிகை, திடீர் செலவுகளைக் குறித்து வைக்கத் தொடங்குங்கள். ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அதற்கான சரியான கணக்கை உங்களுடைய செல் போனிலேயே `நோட்’ போட்டுக் குறித்து வைத்துக்கொள்ள முடியும். குட்டி குட்டிச் சந்தோஷங்களுக்காக பணத்தைக் கொட்டிச் செலவழித்துவிட்டு, பின் புலம்புவது இனி வேண்டவே வேண்டாம். எதிர்காலத்தில் வாங்கும் சம்பளத்தைவிட செலவுகள் அதிகரிக்கப்போகும் அபாயகரமான வாழ்க்கை முறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். இனி அன் றாட நிதி நிர்வாகம் பெண்களுக்கும் தெரிந்திருக்க வேண் டியது அவசியம்... அத்தியாவசியம்!

சின்னச் சின்ன சேமிப்பு விஷயங் களில் கவனம் செலுத்தத் தொடங் கினால் போதும். சேமிப்பும் நிதி நிர்வா கமும் எளிதாக கற்றுக் கொள்ளலாம். குடும்பம் என்பது ஆண், பெண் இரு வருக்குமே பொது வானது. பெண் களே... உங்கள் வாழ்க்கைக்கான தேவைகளை நீங்கள்தான் திட்டமிட வேண்டும். ‘எங்களுக்கு சேமிக்கத் தெரியும்... அதற்கான வழிமுறைகள்தான் தெரியாது’ என்கிறீர்களா? அந்தக் கவலை இனி வேண்டாம். இன்ஷூரன்ஸ், மெடிக்கிளெய்ம் பாலிசி, பி.எஃப், பேங்க் அக்கவுன்ட் மேனேஜ்மென்ட், ரிட்டயர்மென்ட் பிளான், போஸ்டல் சேவிங்க்ஸ், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எல்லாம் இனி சாத்தியமே... சொல்லிக் கொடுக்க இதழ்தோறும் நிதி நிபுணர்கள் வருகை தருகிறார்கள்.

பெண்ணே யோசி... சேமிப்பு ரொம்ப ஈஸி!

(கொஞ்சம் பேசுவோம்... நிறைய சேமிப்போம்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism