Published:Updated:

பெண் Money - சேமிப்போமே... இனி சேமிப்போமே!

பெண் Money - சேமிப்போமே... இனி சேமிப்போமே!
பிரீமியம் ஸ்டோரி
பெண் Money - சேமிப்போமே... இனி சேமிப்போமே!

பா.விஜயலட்சுமி

பெண் Money - சேமிப்போமே... இனி சேமிப்போமே!

பா.விஜயலட்சுமி

Published:Updated:
பெண் Money - சேமிப்போமே... இனி சேமிப்போமே!
பிரீமியம் ஸ்டோரி
பெண் Money - சேமிப்போமே... இனி சேமிப்போமே!

வீட்டில் எப்படிப்பட்ட கடினமான பணத்தட்டுப்பாடு வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய திறன், பெண்களின் சமையலறையில் இருந்த அரிசி, பருப்பு டப்பா சேமிப்புகளுக்கு இருந்தது.

பிரதமரின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு அதிகமாக பாதிக்கப்பட்டதும் சிறுவாட்டு சேமிப்பை சமையலறைக்குள் வைத்திருந்த பெண்கள்தான்.

உண்மையிலேயே வேலைக்குச் செல்லாமல், வீட்டு நிர்வாகத்தை கவனித்துக்கொள்ளும் இல்லத்தரசிகளும் தயக்கமின்றி வங்கியிலோ, அஞ்சலகத்திலோ சேமிக்க முடியும். அப்படி சேமிப்பதற்கு முன் சில அடிப்படை விஷயங்களைப் பற்றி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சங்கீதா, நிதி ஆலோசகர். 

பெண் Money - சேமிப்போமே... இனி சேமிப்போமே!

வங்கிக் கணக்கு

வங்கிகளில் பணத்தை சேமிக்க வேண்டுமெனில், எந்த வங்கியில் உங்களுடைய சேமிப்பை முதலீடு செய்யப்போகிறீர்களோ அங்கு உங்களுக்கு ஒரு தனிநபர் வங்கிக்கணக்கு ஆரம்பிக்க வேண்டும். அரசின் அடையாள அட்டைகள், உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பான் கார்டு, ஏற்கெனவே அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் ஒருவரின் உறுதிக் கையெழுத்து ஆகியவற்றுடன் படிவத்தை நிரப்பிக் கொடுத்து எளிதாக ஒருவர் வங்கிக்கணக்கு துவங்கிவிட முடியும்.

கணக்கு துவங்கியவுடன், உங்களுக்கு அந்த வங்கியின் பாஸ்புக் (அதாவது உங்களுடைய வரவு, பணமிருப்பு, சேமிப்பு, அடையாளம், வங்கியிலிருந்து நீங்கள் எடுக்கும் தொகை ஆகியவற்றை ஆவணப்படுத்த உதவும் புத்தகம்), டெபிட் கார்டு ஆகியவை வழங்கப்படும். மேலும், உங்களின் தேவைக்கேற்ப நெட் பேங்கிங் என்னும் இணைய தள வங்கிச் சேவை, மொபைல் பேங்கிங் என்னும் மொபைல் போன் சேவையையும் பெற்றுக் கொள்ளலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண் Money - சேமிப்போமே... இனி சேமிப்போமே!

அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள்

அஞ்சலக சேமிப்பில் அஞ்சலக வைப்புக் கணக்கு, அஞ்சலக மாதாந்திர வருமானக் கணக்கு, தொடர் வைப்புக் கணக்கு, சுகன்யா ஸ்மிருதி, கிசான் விகாஸ் என்று பல திட்டங்கள் உள்ளன. ஆண், பெண் இருபாலரும் இதில் பங்கேற்க முடியும் என்றாலும், பெண்களுக்கு மிக பாதுகாப்பான கணக்காக இந்த அஞ்சலக சேமிப்பு கைகொடுக்கிறது. அஞ்சலக சேமிப்புக் கணக்கை வெறும் 20 ரூபாய் முதலீட்டில் துவங்க முடியும் என்பது இதன் சிறப்பு. மாதாந்திர வருமானக் கணக்குக்கு மாதம் ரூ. 1500 முதல் கணக்கில் செலுத்த வேண்டும். தொடர் வைப்புக் கணக்கில், 5 முதல் 6 வருடங்களுக்குப் பிறகு நீங்கள் செலுத்திய தொகை வட்டியுடன் திரும்பக் கிடைக்கும்.

ஐ.டி கார்டுகள்

ஓர் அஞ்சலக சேமிப்பையோ, வங்கிக் கணக் கையோ துவங்க வேண்டுமெனில் உங்களுடைய அடையாளத்தை உறுதிபடுத்தக்கூடிய, அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் அவசியம். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு என்னும் ஒவ்வொரு வரையும் பற்றிய விவரங்கள் அடங்கிய புகைப்படம் மற்றும் கைரேகையுடன் அரசு வழங்கக்கூடிய அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு ஆகியவை அடங்கும். இவை எல்லாவற்றிலுமே இலக்கங்கள் மற்றும் எழுத்துக்கள் அடங்கிய குறீயீடுகள் இருக்கும். இவை எல்லாமே அரசின் டேட்டா பேஸ்களில் இடம் பெற்றிருக்கும். இதன் மூலமாக உங்களைப் பற்றிய உண்மைத் தன்மை நிரூபணமாகும்.

பான் கார்டு

பான் கார்டு... ஆங்கிலத்தில் PAN (Permanent  Account  Number) என்பதுதான் இதன் விரிவாக்கம். வருமான வரித்துறையால் வழங்கப்படுவது இந்த அடையாள அட்டை. நீங்கள் எந்த வங்கிக்கு சென்று கணக்கு தொடங்க நினைத்தாலும் தற்போதெல்லாம் பான் கார்டு அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்தக் கூடிய அளவுக்கு ஆண்டு வருமானம் கொண்ட ஒவ்வொருவருக்கும் பான் கார்டு அவசியம். வருமான வரித்துறை உங்களுடைய வரவு, செலவு, பண அளவீட்டினை முறைப்படுத்த பான் கார்டு எண்ணையே உபயோகப்படுத்தும். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான பணப்பரிமாற்றத்துக்கு பான் கார்டு அவசியம். 10 இலக்க குறியீடு கொண்டிருக்கும் பான் கார்டில், முதல் மூன்று எழுத்துக்கள் வரிசை எண்கள். 4-வது எழுத்து மேற்படி விநியோகிக்கப்பட்ட கார்டு, தனிநபருக்கா, தொழில் நிறுவனப் பணப்பரிமாற்றத்துக்கா என்பதைக் குறிக்கும். P என்றால் தனிநபரையும், F என்றால் தொழில் நிறுவனத்தையும், C என்றால் சிறு, குறு கம்பெனிகளையும், T என்றால் டிரஸ்ட் அதாவது அறக்கட்டளையையும் குறிக்கும்.

5-வது எழுத்து, பான் கார்டு வைத்திருப் பவரின் பெயரின் முதலெழுத்தைக் குறிக்கும். அதற்கடுத்த எண்கள் எல்லாமே வரிசை எண்கள்தான். UTI என்னும் (UTI - Infrastructure Technology and services Limited) மூலமாக விண்ணப்பித்து எளிதாக 15 முதல் ஒரு மாத காலத்துக்குள் உங்களுக்கான பான் அட்டையை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

டெபிட் கார்டு

வங்கிக் கணக்கை ஆரம்பித்தவுடன் வங்கியின் மூலமாகவே உங்களுக்கு அளிக்கப் படும் பணமெடுப்பதற்கான அட்டைதான் டெபிட் கார்டு. ஏ.டி.எம் சேவை மையங்கள் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தேவைக்கேற்ப எடுத்து உபயோகித்துக்கொள்ள முடியும். கைகளில் அதிகளவில் பணத்தை வைத்துக்கொள்ள முடியாத தொலைதூரப் பயணங்களிலும், கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும் உங்களுக்கு டெபிட் கார்டுகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

பெண் Money - சேமிப்போமே... இனி சேமிப்போமே!

கிரெடிட் கார்டு

சேமிப்பு என்னும் இடத்தில் கிரெடிட் கார்டு அநாவசியமானது என்றாலும், அதனுடைய சாதக பாதகங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. ஒரு வங்கி வழங்கும் கடன் அட்டை என்பதுதான் கிரெடிட் கார்டு. உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலே, கடைகளில் இந்தக் கார்டு மூலம் பொருட்கள் வாங்க முடியும். இதற்கு உச்சவரம்பு உண்டு. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திருப்பிச்செலுத்தாவிட்டால், வட்டி மேல் வட்டி போட்டு வசூலிப்பார்கள்.

இ-வேலட்

பணபரிமாற்றத்துக்கான மேம்படுத்தப்பட்ட வழிமுறைதான் இ-வேலட். இதற்கு உங்களிடம் மொபைல் இணையதளம் இருந்தால் போதும், நீங்கள் பர்ஸை சுமக்க வேண்டியதில்லை. மொபைல் ரீசார்ஜ், ரயில், பேருந்து கட்டணங்கள், பொருட்கள் வாங்க என்று பல்வேறு அன்றாடத் தேவைகளுக்கு இ-வேலட் கைகொடுக்கும்.

வங்கிக் கணக்கு, சேமிப்புக் கணக்கு, அஞ்சலக சேமிப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் பெண்கள் முதன்மையாகவும் அதேநேரத்தில் எளிதாகவும் தெரிந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள் இவைதான். இவை குறித்த விழிப்பு உணர்வு இருந்தால் இல்லத்தரசிகளும் மிகச்சுலபமாக தங்களுடைய சேமிப்பைக் கையாளலாம்...சுலபமாக சிறுவாட்டுக் காசையும் சேமிக்கலாம்!

(கொஞ்சம் பேசுவோம்... நிறைய சேமிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism